கடந்த சில ஆண்டுகளில், இளைஞர்கள் மற்றும் பைக் பிரியர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது KTM பைக். தற்போது எலக்ட்ரிக் வாகனங்கள் அறிமுகம் செய்வதற்கு கிட்டத்தட்ட எல்லா ஆட்டோமொபைல் நிறுவனங்களும் செயல்பட்டு வரும் நிலையில், KTM உற்பத்தியாளருடன் பஜாஜ் நிறுவனமும் கைகோர்த்து உள்ளது. இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான பஜாஜ் ஆட்டோ, ஆஸ்திரியாவின் ப்ரீமியம் பைக் உற்பத்தியாளரான KTM உடன் பார்ட்னர்ஷிப்பின் இணைந்துள்ள நிலையில், ஹை-எண்ட் எலக்ட்ரிக் பைக்குகளுக்கான பிளாட்ஃபார்ம்களைப் எதிர்நோக்குகிறது என்று கூறியது. மேலும், நிதானமான அணுகுமுறையுடன், தந்து சேடக் ஈ-ஸ்கூட்டரையும் உலக அளவில் விரிவாக்க திட்டமிட்டு வருவதாகவும் தெரிவித்தது.
இந்தியாவின் டாப் 5 பைக்குகளில் எப்போதுமே பஜாஜ் பைக்குக்கு இடம் இருக்கும். அதுவும் நல்ல மைலேஜ், உயர் தரமான பெர்ஃபார்மான்ஸ் தரக்கூடிய மீடியம் பட்ஜெட் பைக்குகள் என்றாலே, பஜாஜ் தான் முதலில் இடம் பிடிக்கும். தற்போது, உயர் தர பைக்குகள் பிரிவிலும், எலக்ட்ரிக் வாகனங்கள் பிரிவிலும், லக்சுரி பைக்குகள் பிரிவிலும் பஜாஜ் ஆட்டோ கணிசமான வளர்ச்சி அடைந்துள்ளது.
முதல் காலாண்டு வருவாய் பற்றிய சமீபத்தில் நடந்த மீடியா சந்திப்பில், பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரான ராக்கேஷ் ஷர்மா, ‘நாங்கள் KTM நிறுவனத்துடன் விவாதித்து வருகிறோம், மற்றும், உயர் தரத்தில் எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள்களுக்கான தளங்களுக்கு இணைந்து வேலை செய்ய திட்டமிட்டு இருக்கிறோம்’ என்று தெரிவித்தார். மேலும், இந்தத் திட்டம் சரியான நேரத்தில் அறிவிக்கப்படும் என்று கூறினார்.
Also Read :
இந்தியாவில் 2033-க்கு பிறகு எலெக்ட்ரிக் கார்கள் மட்டுமே - ஆடி நிறுவனம் அறிவிப்பு
மேலும், சேட்டக் ஸ்கூட்டர் பற்றிக் கூறுகையில், இந்த ஆண்டு முதல் காலாண்டை விட, அதிகமாக விற்பனையாகும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது என்று தெரிவித்தார். 2021 ஆம் ஆண்டின் ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான அந்த நிதியாண்டின் கடைசி காலாண்டில் 300 யூனிட்டுகள் விற்பனையானது. நடப்பு நிதியாண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்தில் 6200 யூனிட்டுகள் விற்பனையானது என்பது மிகப்பெரிய வளர்ச்சி. தற்போது சப்ளை செயினில் எந்த பிரச்சனையும் இல்லாத அளவுக்கு திட்டமிடப்பட்டுள்ளதால், அடுத்தடுத்த காலத்தில் இந்த எண்ணிக்கை இரண்டு அல்லது மூன்று மடங்கு அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே வணிகம் வெற்றிகரமான செல்லும் நிலையில், அடுத்தடுத்த கட்டத்தில் உலக அளவில் நிறுவனத்தின் விரிவாக்கம் மற்றும் வளர்ச்சிக்கான பாதையில் மிகவும் எச்சரிக்கையாகவும் செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். தற்போது, மொத்தமாக 16,000 முன்பதிவுகள் இருப்பதாகவும் தெரிவித்தார்.
தற்போது e-Chetak பைக், இந்தியாவில் 27 நகரங்களில் கிடைக்கிறது. பஜாஜ் ஆட்டோ, இதை 100 நகரங்களில் கிடைக்கும்படி திட்டமிட்டு வருவதாகக் கூறியுள்ளது. கடந்த பண்டிகைக் காலத்தில் மிகவும் திருப்திகரமான விற்பனையானதாகவும், பணவீக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பைத் தவிர்த்துப் பார்க்கும் போது, சராசரியாக நல்ல விற்பனை ஆகியுள்ளது என்றும் கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.