HOME»NEWS»AUTOMOBILE»bajaj auto hikes prices for the entire range of ktm and husqvarna motorcycles in india vin ghta

இந்தியாவில் KTM மற்றும் ஹஸ்குவர்ணா பைக்குகளின் விலையை உயர்த்திய பஜாஜ் ஆட்டோ!

கேடிஎம் மற்றும் ஹஸ்குவர்னா மோட்டார் சைக்கிள்களில் விலை உயர்வு அதன் மாடல்களைப் பொறுத்து மாறுபடும்.

இந்தியாவில் KTM மற்றும் ஹஸ்குவர்ணா பைக்குகளின் விலையை உயர்த்திய பஜாஜ் ஆட்டோ!
கேடிஎம்
  • News18
  • Last Updated :
  • Share this:

நாட்டின் முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனமான பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto) விரைவில் சேத்தக் மின்சார ஸ்கூட்டரை விற்பனைக்கு கொண்டுவரவுள்ள நிலையில், தற்போது புதிய தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி, தற்போது விற்பனையில் இருக்கும் பைக்குகளில் விலை மாற்றத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அந்தவகையில்  பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto) தனது கேடிஎம் மற்றும் ஹஸ்குவர்னா (KTM and Husqvarna) மோட்டார் சைக்கிள்களின் விலையை இந்தியாவில் உயர்த்தியுள்ளது. 

இதில் 250 டியூக், ஆர்.சி 390 மற்றும் 390 அட்வென்ச்சர் (250 Duke, RC 390 and the 390 Adventure) போன்ற மாடல்கள் அடங்கும். கேடிஎம் மற்றும் ஹஸ்குவர்னா மோட்டார் சைக்கிள்களில் விலை உயர்வு அதன் மாடல்களைப் பொறுத்து மாறுபடும். பிரபலமான கேடிஎம் RC 125, மோட்டார் சைக்கிள் மற்ற கேடிஎம் மாடல்களில் இருந்து குறைந்த கட்டணத்தை பெற்றது. ரூ.1,279 உயர்வுக்குப் பின், இப்போது ரூ .1.61 லட்சமாக இந்த பைக் விற்பனையாகிறது. 

390 டியூக், 8,517 ரூபாயால் விலை உயர்ந்ததால் இப்போது அதிகபட்ச விலையை பெறுகிறது. இந்த பைக் இப்போது ரூ.2.66 லட்சத்தில் கிடைக்கிறது. இருப்பினும், சமீபத்தில் வெளியிடப்பட்ட கேடிஎம் 250 அட்வென்ச்சர் ரூ.2.48 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) மற்றும் 2021 கேடிஎம் 125 டியூக் ரூ .1.50 லட்சத்திற்கு கிடைக்கிறது. மேலும் இது சமீபத்திய விலை உயர்வால் பாதிக்கப்படாது என்றும் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கே.டி.எம் இன் டியூக் 250 இரண்டாவது அதிகபட்ச விலையாக உள்ளது. இது ர .4,738 உயர்ந்து இப்போது ரூ.2.14 லட்சத்திற்கு விற்கப்படுகிறது. 



இந்த பிராண்டின் முதன்மை மோட்டார் சைக்கிளான ஆர்.சி 390 ரூ .4,738 அதிகரித்து இப்போது ரூ.2.14 லட்சத்திற்கு விற்கப்படுகிறது. கேடிஎம் டியூக் 200 மற்றும் 390 அட்வென்ச்சர் (KTM Duke 200 and the 390 Adventure) ஆகியவை ஒரு சிறிய விலை உயர்வைப் பெறுகின்றன. அவற்றின் விலை முறையே ரூ.1,923 மற்றும் ரூ.1,442 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. டியூக் 200 ரூ.1.78 லட்சத்தில் விற்பனையாகிறது, அதே நேரத்தில் பிராண்டின் முதன்மை மோட்டார் சைக்கிள், அட்வென்ச்சர் 390 இப்போது ரூ. 3.05 லட்சத்திற்கு விற்கப்படுகிறது, 

சமீபத்திய சுற்று விலை உயர்வுகளுக்குப் பிறகு இந்த பைக் இத்தகைய மாற்றத்தை பெற்றுள்ளது. கேடிஎம் மாடல்களைத் தவிர, ஹஸ்குவர்னா பைக்குகளின் விலையையும் பஜாஜ் இப்போது அதிகரித்தது. இந்நிறுவனம் இந்தியாவில் பிராண்ட் பெயரில் இரண்டு மாடல்களை வழங்குகிறது - ஹஸ்குவர்ணா ஸ்வார்ட்பிலென் 250 மற்றும் விட்பிலன் 250 (Vitpilen and Svartpilen). இந்தியாவில் இந்த இரண்டு மாடல்களும் 250 CC பிரிவில் ஒரு தனித்துவமான இடத்தை பெற்றுள்ளது. 

ஹஸ்குவர்ணா ஸ்வார்ட்பிலன் 250 மற்றும் விட்பிலன் 250 இப்போது இருக்கும் விலையுடன் கூடுதலாக 1,790 ரூபாய் விலைக்கு கிடைக்கும். மேலும் வார்ட்பைலன் 250 மற்றும் விட்பிலன் 250 இப்போது ரூ. 1.86 லட்சத்திற்கு விற்பனையாகும். ஹஸ்குவர்னா தற்போது 390 டியூக்கின் பவர்டிரெயினுடன் வரும் விட்பிலென் மற்றும் ஸ்வார்ட்பைலன் மாடல்களின் அதிக இடப்பெயர்வை அறிமுகப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்த புதுப்பிக்கப்பட்ட பெரிய ஹஸ்குவர்ணா பைக்குகள் 2021ன் பாதியில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்படும். 

Also read... பட்டையை கிளப்பிய நிசான் மேக்னைட் காம்பாக்ட் SUV - 5 நாளில் 5,000 முன்பதிவுகள்!



மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து விலைகளும் டெல்லியின் எக்ஸ்ஷோரூம் விலை என்பதை நினைவில் கொள்வது அவசியம். கே.டி.எம் மோட்டார் சைக்கிள்கள் இந்தியாவில் வாங்குபவர்களுக்கு மிகவும் பிரபலமான இரு சக்கர வாகன விருப்பங்களில் ஒன்றாகும். BS6 விதிமுறைகளை பூர்த்தி செய்ய, அரசால் உத்தரவிட்ட பின்னர் நிறுவனம் பல சந்தர்ப்பங்களில் அதன் விலையை உயர்த்தியுள்ளது. 

இருப்பினும், அவர்கள் மோட்டார் சைக்கிள்களில் எந்த மாற்றங்களையும், மேம்படுத்தல்களையும் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவை மையமாகக் கொண்டு இயங்கும் பஜாஜ் நிறுவனம், அதன் தயாரிப்புகளை மட்டுமின்றி கூடுதலாக மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களின் தயாரிப்புகளையும் தன்னுடைய உற்பத்தி ஆலையில் வைத்து தயாரித்து வருகின்றது. அதுமட்டுமின்றி, நாடு முழுவதும் ஷோரூம்கள் அமைத்து அதன் மேற்பார்வையில் விற்பனையையும் செய்து வருகின்றது.
Published by:Vinothini Aandisamy
First published: