ஹோம் /நியூஸ் /ஆட்டோமொபைல் /

புத்தாண்டுக்கு புது கார் வாங்க போறீங்களா - இதைப்படிங்க முதலில்!

புத்தாண்டுக்கு புது கார் வாங்க போறீங்களா - இதைப்படிங்க முதலில்!

மாதிரி படம்

மாதிரி படம்

கட்டுப்பாடுகள், விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளவற்றை வாகனத்தில் பொறுத்த வேண்டும்

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Delhi, India

  பண்டிகை கால சலுகையாக எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள், வீட்டு உபயோக பொருட்கள் மட்டுமல்லாமல் ஆட்டோமொபைல் நிறுவனங்களும் டூவீலர், கார்களுக்கு கணிசமான சலுகையை அறிவித்துள்ளது. எனவே நீங்கள் புத்தாண்டில் புதிய வாகனம் வாங்க வேண்டும் என்று நினைத்தால் உங்களுக்கு ஒரு கெட்ட செய்தி காத்திருக்கிறது!

  பெரும்பாலான நிறுவனங்கள் எக்கச்சக்கமான மாடல்களில் புதிது புதிதாக வாகனங்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. இதில் நீங்கள் விரும்பும் வாகனம் தற்பொழுது சந்தையில் கிடைக்கிறது. அதே நேரத்தில், வாகனங்களின் விலை உயரப் போகிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது.

  BS6 எமிஷன் நார்ம்ஸ் இரண்டாவது கட்டம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் அமல்படுத்த இருக்கிறது. அதாவது வாகனங்களின் உமிழ்வுக்கு, தரக் கட்டுப்பாடுகள் ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ளன.

  அதனுடைய இரண்டாவது கட்டமான விதிமுறைகள் இன்னும் சில மாதங்களில் அமல்படுத்தப்பட இருக்கிறது. எனவே விதிமுறைகளுக்கு உட்பட்டு வாகன உற்பத்தியாளர்கள் அனைவருமே தங்களுடைய வாகனங்களில் சில மாற்றங்களை செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டு உள்ளது.

  ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்கு தயாராக இருக்கும் வாகனங்களில் இத்தகைய மாற்றங்கள் செய்வது நிச்சயமாக உற்பத்தியாளருக்கு செலவை அதிகரிக்கும். அந்த செலவு விற்பனை விலையில் சேர்க்கப்படும். எனவே வாடிக்கையாளருக்கு விற்கப்படும் வாகனங்களின் விலை கணிசமாக அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

  BS6 இன் உமிழ்வு தர கட்டுப்பாட்டுக்கு ஏற்றவாறுதான் வாகனங்களை வெளியிட வேண்டும். விதிமுறைகளுக்கு உட்படவில்லை என்றால் விற்பனை செய்ய முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே வாகனம் விலை உயர்வு என்பது தடுக்க முடியாத ஒரு நிலையாக மாறி இருக்கிறது.

  கார்களில் என்ன மாதிரியான மாற்றங்கள் செய்யப்படலாம்?

  எமிஷன் விதிமுறைகளில், இந்த இரண்டாவது கட்டத்திற்கு கூறப்பட்டுள்ள விதிமுறைகளுக்கு ஏற்றவாறு அனைத்து நான்கு சக்கர வாகனங்களும், கமர்ஷியல் வாகனங்களும் ரீஃபைன்ட் சாதனங்களை அதில் பயன்படுத்த வேண்டும். இதனால் உற்பத்தி செலவு அதிகரிக்கும் என்று ஆட்டோமொபைல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

  மேம்பட்ட உமிழ்வு கட்டுப்பாடுகள், விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளவற்றை வாகனத்தில் பொறுத்த வேண்டும். வாகனங்களில் எவ்வளவு உமிழ்வு ஏற்படுகிறது என்பதை கண்காணிப்பதற்கான சாதனம் ஆகும். வாகனத்தில் கேட்டலிக் கன்வெர்ட்டர் ஆகவும், ஆக்ஸிஜன் சென்சாராகவும் செயல்பட்டு எமிஷன் அளவை கண்காணிக்கும். ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் வாகனத்தின் உமிழ்வு அதிகரிக்கும் பொழுது அந்த சாதனம் எச்சரிக்கை விளக்கை ஒளிரச் செய்யும்.

  Read More: ஆட்டோ மொபைல் டீலர்களுக்கு அடித்த ஜாக்பாட்... நவராத்திரி பண்டிகை விற்பனை எவ்வளவு தெரியுமா? 

  இரண்டாவதாக ஃபியூயல் இன்ஜெக்டர் என்பதும் வாகனத்தில் சேர்க்கப்படும். இது, ஒரு வாகனத்தில் எந்த அளவுக்கு எரிபொருள் பயன்படுத்தப்படுகிறது என்பதை கட்டுப்படுத்தும் ஒரு சாதனமாகும்.

  அடுத்ததாக செமி-கண்டெக்டர் சிப்பும் வாகனங்களில் பொருத்தப்படலாம் என்று ஆட்டோமொபைல் துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

  Published by:Srilekha A
  First published:

  Tags: Automobile, Car