• HOME
  • »
  • NEWS
  • »
  • automobile
  • »
  • EV Scooter: அவென்டோஸ் நிறுவனத்தின் எலக்டிரிக் ஸ்கூட்டர் - எப்போது தெரியுமா?

EV Scooter: அவென்டோஸ் நிறுவனத்தின் எலக்டிரிக் ஸ்கூட்டர் - எப்போது தெரியுமா?

எலக்டிரிக் ஸ்கூட்டர்

எலக்டிரிக் ஸ்கூட்டர்

அவெண்டோஸ் எனர்ஜி நிறுவனமும் இரு சக்கர எலக்டிரிக் ஸ்கூட்டர் தயாரிப்பில் களம் இறங்கியுள்ளது.

  • Share this:
அவென்டோஸ் எனர்ஜி நிறுவனம் அக்டோபர் 10ம் தேதி, தங்கள் நிறுவனத்தின் முதல் எலக்டிரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த உள்ளது.

இந்தியாவில் மின்சார வாகன உற்பத்தி அதிகரித்து வருகிறது. பெட்ரோல், டீசல் வாகனங்களின் பயன்பாட்டால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசைத் தவிர்க்க உலக நாடுகள் அனைத்தும் மின்சார வாகனங்கள் உற்பத்தியை ஊக்குவித்து வருகின்றன. இந்தியாவிலும் 2030 ஆம் ஆண்டுக்குள் பெட்ரோல், டீசல் வாகனங்கள் உற்பத்தி முழுமையாக நிறுத்தப்பட்டு, முழுமையாக மின்சார வாகனங்கள் பயன்பாட்டை நடைமுறைக்கு கொண்டுவர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதனையொட்டி டூவீலர் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை உற்பத்தி செய்யும் முன்னணி நிறுவனங்கள் அனைத்தும் எலக்டிரிக் வாகனங்கள் உற்பத்தியில் களமிறங்கியுள்ளன. உற்பத்தி முதல் அடிப்படை கட்டமைப்பு உருவாக்குவது வரை என அவற்றில் முதலீடுகளை குவித்து வருகின்றன. சில நிறுவனங்கள் மின்சார வாகனங்களுக்குத் தேவையான உதிரிபாகங்கள் மற்றும் பராமரிப்பு பொருட்களிலும் முதலீடு செய்யத் தொடங்கியிருக்கின்றன. முன்னணி நிறுவனங்களைப்போல், புதிய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் உள்ளிட்டவைகளும் எலக்டிரிக் வாகனங்களை தயாரிக்கத் தொடங்கியிருக்கின்றன. வருங்காலத்தில் எலடிரிக் வாகனங்களின் மிகப்பெரிய சந்தையாக இந்தியா உருவெடுக்கும் என்ற கணிப்பில், தாராளமாக முதலீடுகளை செய்து வருகின்றன.

Also read... எக்ஸ்பிரஸ் வேகத்தில் டெல்லி - மும்பை நெடுஞ்சாலை திட்டம்... முன்கூட்டியே நிறைவடையும் பணிகள்!

அந்தவகையில், அவெண்டோஸ் எனர்ஜி நிறுவனமும் இரு சக்கர எலக்டிரிக் ஸ்கூட்டர் தயாரிப்பில் களம் இறங்கியுள்ளது. எஸ்.110 என்ற புதிய எலக்டிரிக் ஸ்கூட்டரை தயாரித்துள்ள அந்த நிறுவனம், அக்டோபர் 10 ஆம் தேதி, அந்த ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த உள்ளது. அப்போது முதல் எலக்டிரிக் ஸ்கூட்டருக்கான புங்கிங்கும் தொடங்கும் என அவென்டோஸ் நிறுவனம் கூறியுள்ளது. 2026 ஆம் ஆண்டுக்குள் 1.5 மில்லியன் எலக்டிரிக் ஸ்கூட்டர்களை தயாரித்து, விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ள அந்த நிறுவனம், எஸ்.110 ஸ்கூட்டர் வெகுஜன மக்களை ஈர்க்கும் வகையில் இருக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது.

பட்ஜெட் ஸ்கூட்டராகவும் இருக்கும் என கூறப்படுகிறது. புதிய அவென்டோஸ் எஸ் 110 எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஒரு போர்ட்டபிள் பேட்டரியுடன் வரவுள்ளது. எந்த போர்ட்டில் சார்ஜ் செய்து கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. 140 என்.எம் முறுக்குவிசை கொண்ட இந்த ஸ்கூட்டரில் மணிக்கு அதிகபட்சமாக 60 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கலாம். ஒரு முறை சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 100 கிலோ மீட்டர் வரை பயணிக்க முடியும்.

பி.எம்.எஸ்.எம் மோட்டார், 17 இன்ச் அலாய் வீல்கள் இடம்பெற்றிருக்கும். 3 வருட கேரண்டியுடன் எக்ஸ் ஷோரூம் விலையில் ரூ.85,000-க்கு விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. காப்பீடு பொறுத்தவரை இந்திய காப்பீட்டு நிறுவனங்களுடன் அவென்டோஸ் நிறுவனம் பேச்சுவார்தையில் ஈடுபட்டு வருகிறது. அறிமுக விழாவின்போது காப்பீடு குறித்த தகவல்கள் இடம்பெறும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: