Home /News /automobile /

இந்தியாவுக்கான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்த அவான் மோட்டார்ஸ்..!

இந்தியாவுக்கான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்த அவான் மோட்டார்ஸ்..!

அவான் மோட்டார்ஸ்

அவான் மோட்டார்ஸ்

மணிக்கு 45 கி.மீ வேகத்தில் பயணிக்கக்கூடிய இரண்டாம் ரக ஸ்கூட்டர் 800 W திறன் கொண்ட மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது.

  • News18
  • Last Updated :
இந்தியாவுக்கு ஏற்ற இரண்டு ரக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அவான் மோட்டார்ஸ் அறிமுகம் செய்துள்ளது.

பூனேவில் நடந்த மோட்டார் வாகனக் கண்காட்சியில் இரண்டு ரக எலெக்ட்ரிக் அவான் ஸ்கூட்டர்கள் காட்சிப்படுத்தப்பட்டன. 72 V 22Ah லித்தியம் அயான் பேட்சரி பொருத்தப்பட்டுள்ள ஒரு ரகம், ஒரு முறை சார்ஜ் செய்தால் 80 முதல் 200 kph வரையில் பயணம் செய்யும். 1200 W மோட்டார் திறன் கொண்டு இந்த ரக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மணிக்கு 60 கி.மீ. வேகத்தை எட்டிவிடும்.

இரண்டாவது ரக அவான் ஸ்கூட்டரும் பூனே மோட்டார் கண்காட்சியிலேயே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 60V 35Ah லித்தியம் - அயான் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மணிக்கு 45 கி.மீ வேகத்தில் பயணிக்கக்கூடிய இரண்டாம் ரக ஸ்கூட்டர் 800 W திறன் கொண்ட மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. புதிய பாதுகாப்பு அம்சங்களுக்கு ஏற்ற சக்கரங்கள் கூடுதல் சிறப்பம்சமாகக் கருதப்படுகிறது. இரண்டு ரக ஸ்கூட்டர்களிலுமே முன் டிஸ்க் ப்ரேக் மற்றும் ரியர் ட்ரம் ப்ரேக் இணைக்கப்பட்டுள்ளது.

புதிய அறிமுகங்கள் குறித்து அவான் மோட்டார்ஸ் இந்தியத் தலைவர் பங்கஜ் திவாரி கூறுகையில், “பூனே மோட்டார் கண்காட்சியில் எங்களது புதிய அறிமுகங்களை காட்சிப்படுத்தியதில் பெருமை. அசத்தலான வடிவமைப்புடன் இந்த இரு கான்செப்ட் எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்துள்ளோம். இரு வாகனங்களுக்கும் கிடைக்கும் விமர்சனங்களை அடிப்படையாகக் கொண்டு மேம்பாடுகள் செய்யப்படும். இனிமேல்தான் உற்பத்தி தொடங்க உள்ளது என்பதால் விரைவில் இந்திய விற்பனைக்குக் கொண்டு வர விரும்புகிறோம்” என்றார்.

மேலும் பார்க்க: இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது KTM 790 Duke- லிமிடெட் எடிஷன் என்பதால் ரசிகர்கள் வேதனை!

சூர்யாவை காப்பாற்றியதா காப்பான்?
Published by:Rahini M
First published:

Tags: Electric bike

அடுத்த செய்தி