Home /News /automobile /

1 கிலோ மீட்டருக்கு 0.05 கிலோவாட் ஆற்றலை மட்டுமே பயன்படுத்தி சாதனை படைத்த அர்பன்லூப் ஆட்டோமேட்டிக் ரயில்!

1 கிலோ மீட்டருக்கு 0.05 கிலோவாட் ஆற்றலை மட்டுமே பயன்படுத்தி சாதனை படைத்த அர்பன்லூப் ஆட்டோமேட்டிக் ரயில்!

Urbanloop capsule

Urbanloop capsule

அர்பன்லூப் என்பது ஒரு புதுமையான மற்றும் புத்திசாலித்தனமான நகர்ப்புற சர்க்கியூட் ஆகும்

பிரெஞ்சு மின்சார போக்குவரத்து காப்ஸ்யூல் (ஆட்டோமேட்டிக் ரயில்) ஒன்று மிக குறைந்த ஆற்றல் நுகர்வுக்கான சாதனையை முறியடித்துள்ளது.

உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு வரும் பொதுப்போக்குவரத்தை பல நாடுகள் குறைந்த ஆற்றலை (low energy) கொண்டு எதிர்காலத்தில் இயக்க வேண்டும் என்று  நினைக்கின்றன. வருங்காலத்தில் பொது போக்குவரத்து முடிந்தவரை குறைந்த ஆற்றலை பயன்படுத்தி இயக்கப்பட வேண்டும் என்பதற்காக பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தண்டவாள போக்குவரத்தில் ஒரு வாகனத்திற்கான மிகக் குறைந்த ஆற்றல் நுகர்வுக்கான உலக சாதனையை பிரான்ஸ் முறியடித்துள்ளது.

கடந்த வாரம் பிரான்ஸில் தண்டவாளங்களில் இயங்கும் ஒரு ஆட்டோமேட்டிக் ரயில், மிக குறைந்த எரிசக்தி நுகர்வில் ஒரு கிலோ மீட்டர் தூரம் பயணித்து சாதனை படைத்துள்ளது. 2024-ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், போட்டிகளின் போது இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. மேலும் அந்நாட்டில் இது தினசரி நகர்ப்புற பயணங்களில் ஒரு புரட்சியை ஏற்படுத்த கூடும். அர்பன்லூப் என்பது ஒரு புதுமையான மற்றும் புத்திசாலித்தனமான நகர்ப்புற சர்க்கியூட் ஆகும். பயண நேரத்தை மிச்சப்படுத்துதல், குறைவான மாசு, பொது போக்குவரத்து உள்கட்டமைப்புகளின் அளவு மற்றும் செலவுகளைக் குறைப்பது உள்ளிட்ட நோக்கங்களை கொண்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தொழில்நுட்பமும் சுற்றுச்சூழலும் எப்போதும் ஒன்றாகப் போவதில்லை. லட்சிய கண்டுபிடிப்புகள் பெரும்பாலும் கடுமையான சுற்றுச்சூழல் விளைவுகளுடன் வருகின்றன. இதனிடையே தனிப்பட்ட விரைவான போக்குவரத்திற்காக பிரஞ்சு அர்பன்லூப் ரயிலில் ஒரு "காப்ஸ்யூலை" உருவாக்கியுள்ளது. இந்த திட்டம், ஒரு வகையில் எலோன் மஸ்க்கின் ஹைப்பர்லூப்பின் ரயிலை ஒத்தது எனலாம். இதை லோரெய்ன் பல்கலைக்கழகம் (University of Lorraine) உருவாக்கி வருகிறது.

ஒரு கிலோ மீட்டருக்கு 0.05 கிலோவாட் ஆற்றலை மட்டுமே பயன்படுத்தி, சுற்றுச்சூழல் உணர்வுடன் கூடிய போக்குவரத்து என்ற சாதனையை படைத்துள்ளது. இதன் மூலம் உலகில் மிகவும் ஆற்றல் திறன் கொண்ட தானியங்கி ரயில் (most energy efficient autonomous train in world) என்ற டைட்டிலுக்கான தகுதியை பெற்றுள்ளது. பிரான்ஸ் போக்குவரத்து துறை அமைச்சர் ஜீன்-பாப்டிஸ்ட் டிஜெபரியின் மேற்பார்வையில், கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட ஒரு தைரியமான முயற்சி இன்று சாதனை படைத்துள்ளது.

Also Read:   சீனாவில் ஓராண்டாக ஊருக்குள் சுற்றித்திரியும் 15 யானைகள்

பிரஞ்சு அர்பன் லூப்பின் நோக்கம் ஒரு கிலோமீட்டருக்கு 1 யூரோ சென்ட்டிற்கும் குறைவான கட்டணத்தில் மணிக்கு 60 கிமீ வேகத்தில் பொதுப்போக்குவரத்து வாகனத்தை இயக்குவது ஆகும். மிக குறைவான ஆற்றல் நுகர்வில் இயங்கும் அர்பன்லூப் ,2024-ல் பாரிஸில் நடைபெறும் பாராலிம்பிக் மற்றும் ஒலிம்பிக் போட்டிகளின் போது வழங்கப்படும். இந்த திட்டம் பாதுகாப்பிற்கான ஒப்புதலை முன்பே பெறுவது அவசியம் என்பதில் அதற்கான பணிகள் துவக்கப்பட்டுள்ளன.லோரெய்ன் ஐ.என்.பி தலைவர் பாஸ்கல், நான்சி நகரத்தில் மாற்று போக்குவரத்து முறையை அறிமுகப்படுத்துவதன் மூலம் கார்களின் எண்ணிக்கையை குறைக்க விரும்பினார். இதற்கான செயல்திட்டம் பள்ளிகளையும் மாணவர்களையும் ஒரு தேசிய திட்டத்தில் ஈடுபடுத்துவதற்கான திறனில், ஆராய்ச்சி ஆய்வகங்களுடன் வேலை செய்வதன் மூலம் ஏற்பட்டது. பாதுகாப்பு தரங்களுக்கு உட்பட்டு, சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார தாக்கம் குறைக்கப்பட வேண்டும் மற்றும் அர்பன்லூப் அனைத்து தரப்பு மக்களும் அணுக கூடியதாக இருக்க வேண்டும் என்பது கருத்தில் கொள்ளப்பட்டது.

Also Read: கொரோனாவை கட்டுப்படுத்தும் கிராமங்களுக்கு ரூ. 5 லட்சம் பரிசு 

ஒரு பயணி தனது ரூட்டில் நுழைய மொபைல் பயன்பாட்டைப் பயன்படுத்துவதை கணினி சரி பார்க்கும். பின் அர்பன்லூப் காப்ஸ்யூல் அவரை மணிக்கு 60 கிமீ வேகத்தில் சரியான இடத்திற்கு அழைத்துச் செல்லும். அர்பன்லூப் 2026-ஆம் ஆண்டில் வணிகரீதியான அறிமுகத்தை இலக்காக கொண்டுள்ளது.
Published by:Arun
First published:

Tags: Electric Train, France, Public Transport

அடுத்த செய்தி