Home /News /automobile /

எங்களுக்கு பாதுகாப்பு வேணும்... அதிரடி காட்டும் ஆட்டோமொபைல் டீலர்கள்..காரணம் என்ன?

எங்களுக்கு பாதுகாப்பு வேணும்... அதிரடி காட்டும் ஆட்டோமொபைல் டீலர்கள்..காரணம் என்ன?

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

Automobile dealers | தொழிலில் நஷ்டம் ஏற்பட்டால் வெளிநாட்டு வாகன உற்பத்தியாளர்கள் திடீரென இந்தியாவை காலி செய்து விட்டு, சொந்த மண்ணிற்கு திரும்பி விடுகின்றனர். இதனால்சிக்கலில் சிக்கிக் கொள்கிறோம் என ஆட்டோமொபைல் டீலர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
இந்திய சந்தையில் இருந்து வெளிநாட்டு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் (ஓஇஎம்) திடீரென வெளியேறுவதால் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருவதாக ஆட்டோமொபைல் டீலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவைச் சேர்ந்த ஃபோர்டு நிறுவனம், இந்தியாவில் சென்னை மற்றும் குஜராத்தில் உள்ள சனாந்த் என இரண்டு இடங்களில் தனது தொழிற்சாலையில் கார் தயாரித்து வந்தது. தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வந்ததால் இந்தியாவில் உற்பத்தியை நிறுத்த உள்ளதாக கடந்த ஆண்டு ட்விட்டரில் அறித்த ஃபோர்டு நிறுவனம், கடந்த ஜூலை மாதத்துடன் உற்பத்தியை முழுமையாக நிறுத்தியது.

இதேபோல் சென்னைக்கு அருகேயுள்ள நிசான் தொழிற்சாலையும் கார் உற்பத்தியை நிறுத்தியுள்ள நிலையில், விரைவில் தொழிற்சாலையை மூட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ள நிலையில், தற்போது ஆட்டோமொபைல் டீலர்களும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிராக போர்க்கொடி தூக்க ஆரம்பித்துள்ளனர். வெளிநாட்டு நிறுவனங்கள் திடீரென நாட்டை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டால், டீலர்கள் பாதிக்கப்படாமல் இருக்க தங்களுக்கு போதுமான இழப்பீடு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

Read More : விமானம் ரத்து, மோசமான உணவு இதெல்லாம் இல்லை... விமான பயணிகளுக்கு ஏற்படும் ஒரே பிரச்சனை என்ன தெரியுமா?


கடந்த செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்ற வாகன விற்பனையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (FADA) மாநாட்டில், ஒரே மாதிரியான ஒப்பந்த முறையை பின்பற்றுவதன் மூலமாக வெளிநாட்டு வாகன உற்பத்தியாளர்கள் திடீரென நாட்டை விட்டு வெளியேறினாலும் நஷ்டத்தில் இருந்து தங்களை பாதுகாக்க முடியும் என கோரிக்கை விடுத்துள்ளனர். பல வெளிநாட்டு ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் இந்தியாவில் உள்ள வாகன விநியோகஸ்தர்களுக்கு வெவ்வேறு வகையான ஒப்பந்தங்களின் அடிப்படையில் வாகனங்களை விற்பனைக்காக வழங்கி வருகின்றனர். இந்தியாவில் உள்ள டீலர்கள் உடனான ஒப்பந்தத்தில் உள்ள அம்சங்கள் வெளிநாட்டு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களது நாடுகளில் கடைபிடிக்கும் விதிமுறைகளை விட மிகவும் கடுமையானதாக உள்ளது.

FADA ஆட்டோ ரீடெய்ல் மாநாட்டில், அதன் தலைவர் மணீஷ் ராஜ் பேசுகையில், "வாகன உற்பத்தியாளர்களுக்கும் டீலருக்கும் இடையிலான ஒப்பந்தக்கள் அவர்களுக்கு சாதகமான வகையில், முழுக்க ஒருதலைபட்சமாக உள்ளன. ஆனால் எங்களுக்கு உற்பத்தியாளர்கள் மற்றும் டீலர்கள் இருவருக்கும் இடையே சமநிலையை பின்பற்றக்கூடிய ஒப்பந்தங்கள் தேவை. வணிகத்தைப் பொறுத்தவரை வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கப்படும் வார்த்தைக்கு மதிப்பு இருக்கும் வகையில் ஒப்பந்தங்கள் இருக்க வேண்டும் என்பதுதான் டீலர்களின் கருத்து” என தெரிவித்துள்ளார்.

இதனைக் கருத்தில் கொண்டே MDA எனப்படும் மாடல் டீலர் அக்ரிமெண்ட் உருவாக்கப்பட்டுள்ளது. இதில்,  வாகன உற்பத்தியாளர்கள் மற்றும் டீலர்கள் இருவரும் சம அந்தஸ்தைப் பெற முடியும். மேலும் இதன் மூலமாக தொழில் அல்லது வணிகத்தில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் இருவரும் போதுமான இழப்பீடு அல்லது போதுமான தீர்வைப் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் ஒரு வெளிநாட்டு நிறுவனம் கார் உற்பத்தி மற்றும் விற்பனையைத் தொடங்க குறைந்த 5 ஆண்டுகளாவது தேவைப்படுகிறது. ஆனால் விற்பனை குறையும் பட்சத்தில் அல்லது தொழிலில் நஷ்டம் ஏற்பட்டால் வெளிநாட்டு வாகன உற்பத்தியாளர்கள் திடீரென இந்தியாவை காலி செய்து விட்டு, சொந்த மண்ணிற்கு திரும்பி விடுகின்றனர். இதனால் வங்கியில் கடன் வாங்கி தொழில் நடத்தும் ஆட்டோமொபைல் டீலர்கள் சிக்கலில் சிக்கிக் கொள்கிறோம். வெளிநாட்டு வாகன உற்பத்தியாளர்களின் திடீர் வெளியேற்றம், வாகனங்கள் மற்றும் உதிரி பாகங்கள் டீலர்களிடம் குவிந்து விடுகிறது. இதனால் டீலர்கள் பெரும் நஷ்டத்திற்கு ஆளாக வேண்டிய நிலை ஏற்படுகிறது.

2017ல் ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் 2021ல் ஃபோர்டு இந்திய சந்தையில் இருந்து வெளியேறியபோது டீலர்கள் பெரும் நஷ்டத்தை சந்திக்க நேரிட்டதாக மணீஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.

 
Published by:Lilly Mary Kamala
First published:

Tags: Automobile, India, Tamil Nadu

அடுத்த செய்தி