கார்ப்ரேட் வரிக் குறைப்பு - ஆட்டோமொபைல் துறைக்குப் பெரும் பயனில்லை!

வீழ்ச்சியை சமாளிக்க கார் உற்பத்தி நிறுவனங்கள் பல விழாக்கால தள்ளுபடிகளை அறிவித்து வருகின்றன.

கார்ப்ரேட் வரிக் குறைப்பு - ஆட்டோமொபைல் துறைக்குப் பெரும் பயனில்லை!
மாதிரிப்படம்
  • News18
  • Last Updated: September 24, 2019, 9:25 PM IST
  • Share this:
அதிரடியாகக் குறைக்கப்பட்ட கார்ப்ரேட் வரியால் ஆட்டோமொபைல் துறைக்குப் பெரிய பயன் ஒன்றும் இல்லை என்றே ஆய்வுகள் கூறுகின்றன.

இந்தியாவில் உள்நாட்டு நிறுவனங்களுக்கான கார்ப்ரேட் வரியை 35 சதவிகிதத்திலிருந்து 25.2 சதவிகிதமாகக் குறைப்பதாக மத்திய நிதி அமைச்சர் சமீபத்தில் அறிவித்தார். நாட்டின் ஜிடிபி வளர்ச்சிக்கும் வீழ்ந்துகிடக்கும் துறைகளை மீட்டெடுக்கவும் இந்த வரிக்குறைப்பு நடவடிக்கை உதவும் என்று கூறப்பட்டது.

ஆனால், ஆட்டோமொபைல் துறையைப் பொறுத்தவரையில் இந்த வரிக்குறைப்பு நடவடிக்கை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றே ஆய்வுகள் கூறுகின்றன. தற்போதைய சூழலில் கார்ப்ரேட் வரிக்குறைப்பால் ஆட்டோமொபைல் துறைக்கு 1 சதவிகித வளர்ச்சி ஏற்படும். இதுவே, ஜிஎஸ்டி வரியைக் குறைத்திருந்தால் ஆட்டோமொபைல் துறைக்கு 7 முதல் 8 சதவிகித வளர்ச்சி ஏற்பட்டிருக்கும் என்கின்றனர் ஆட்டோ துறை வல்லுநர்கள்.


கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சியை தற்போது ஆட்டோமொபைல் துறை சந்தித்து வருகிறது. அரசு ஆட்டோ துறையை வளர்க்க நினைத்தால் 28 சதவிகித ஜிஎஸ்டி வரியை 18 சதவிகிதமாகக் குறைத்திருக்கலாம் என்பதே துறை சார்ந்தோரின் வேண்டுகோள் ஆக உள்ளது.

வீழ்ச்சியை சமாளிக்க கார் உற்பத்தி நிறுவனங்கள் பல விழாக்கால தள்ளுபடிகளை அறிவித்து வருகின்றன. லட்சக்கணக்கில் விலைக்குறைப்பும் கேஷ்பேக் ஆஃபரும் கூட வழங்கப்பட்டு வருகின்றன.

மேலும் பார்க்க: டாடா கார்களை வாங்க விரும்புகிறீர்களா? காத்திருக்கிறது ₹1.5 லட்சம் கேஷ்பேக்!துணை முதலமைச்சர் வீட்டு வாசலில் ₹1 கோடி பணம் மோசடி...
First published: September 24, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading