தொடர் வீழ்ச்சியில் ஆட்டோமொபைல்ஸ் துறை... காரணம் என்ன?

உற்பத்தித் துறையில் ஏற்பட்டுள்ள தேக்கத்தின் காரணமாக கனரக வாகனங்களுக்கு உதிரி பாகங்கள் கிடைக்கவில்லை. 

தொடர் வீழ்ச்சியில் ஆட்டோமொபைல்ஸ் துறை... காரணம் என்ன?
மாதிரிப்படம் (Reuters)
  • News18
  • Last Updated: August 16, 2019, 8:16 PM IST
  • Share this:
மூன்று மாதத்தில் 11 சதவிகிதம் வரையில் கார் உற்பத்தியை ஆட்டோமொபைல் தொழிற்சாலைகள் குறைத்துள்ளன. இந்திய பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களே ஆட்டோமொபைல் துறை வீழ்ச்சிக்கு காரணம் என்கிறார் பொருளாதார வல்லுநர் ஜெயரஞ்சன்.

இது தொடர்பாக நியூஸ்18-க்கு பேட்டியளித்த ஜெயரஞ்சன், “உற்பத்தித் துறையில் ஏற்பட்டுள்ள தேக்கத்தின் காரணமாக கனரக வாகனங்களுக்கு உதிரி பாகங்கள் கிடைக்கவில்லை. அனைத்து வாகனங்களின் விற்பனையும் மொத்தமாக முடங்கியுள்ளது.

இதனால் ஆட்டோமொபைல் துறை தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்துக் கொண்டே வருகிறது. பணப்புழக்கம் குறைந்து வருவது வேலைவாய்ப்புத் திண்டாட்டத்தை ஏற்படுத்தி அனைத்துத் துறைகளிலும் தேக்கநிலையை ஏற்படுத்தியுள்ளது.


5 ட்ரில்லியன் பொருளாதார இலக்கு என்பதெல்லாம் கற்பனை தானே தவிர அதற்கு உரிய நடவடிக்கைகளை இந்த அரசு மேற்கொள்ளவில்லை. நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பட்ஜெட் தொடர்பாக ஒரே ஒரு விவாதம் தான் நடந்துள்ளது.

பொருளாதார வளர்ச்சிக்குத் தடை செய்யும் வகையில் ஜிஎஸ்டி மற்றும் பண மதிப்பிழப்பு நடவடிக்கைகளை பாஜக அரசு மேற்கொண்டது. ஆனால் மீண்டும் அதை சரி செய்வதற்கு அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்றார்.

மேலும் பார்க்க: ஏசி பயன்படுத்தும் போது வரும் ஆபத்துகளில் இருந்து தப்புவது எப்படி?
First published: August 16, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்