ஹோம் /நியூஸ் /ஆட்டோமொபைல் /

ஆட்டோமொபைல் டீலர்கள் அடுத்த 3 நிதியாண்டில் மிக விரைவான வருவாய் வளர்ச்சியை எட்டுவார்கள் - கிரிசல் அறிக்கை!

ஆட்டோமொபைல் டீலர்கள் அடுத்த 3 நிதியாண்டில் மிக விரைவான வருவாய் வளர்ச்சியை எட்டுவார்கள் - கிரிசல் அறிக்கை!

மாதிரி படம்

மாதிரி படம்

ஆட்டோமொபைல்  டீலர்கள் அடுத்த 3 நிதியாண்டுகளில் மிக விரைவான வருவாய் வளர்ச்சியை எட்டுவார்கள் என்று சமீபத்திய அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Chennai, India

  கொரோனா தொற்றின் காரணமாக கார்கள், இருசக்கர வாகனங்கள் தாயரிக்கும் ஆட்டோமொபைல் துறை மிகப்பெரிய வீழ்ச்சியடைத்தது. குறிப்பாக கடந்த ஆண்டுகளில் கார்கள், வாகனங்கள் விற்பனை என்பது செப்டம்பர் வரை 3 லட்சமாக மட்டுமே இருந்துள்ளது.

  ஆனால் 2022 ஆகஸ்ட் மாதம் வரையிலும் 3 லட்சத்து 41 ஆயிரத்து 371 வாகனங்கள் ஷோரூம்களுக்கு விற்பனைக்கு வந்துள்ளதாகவும் 10 லட்சம் வாடிக்கையாளர்கள் டெலிவரிக்காக காத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்ற ஆண்டுகளை விட இந்த பண்டிகைக்காலங்களில் வாகனங்களின் உற்பத்தி அதிகரித்துள்ளதாக கூறப்படும் நிலையில், நிச்சயம் அடுத்த மூன்று நிதியாண்டுகளில் ஆட்டோமொபைல் டீலர்கள் அதிக வருவாய் வளர்ச்சியை எட்டுவார்கள் என்று கிரிசில் ரேட்டிங்ஸ் மதிப்பீடு செய்து ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.

  வாகனங்களின் விற்பனை மற்றும் வளர்ச்சிக்குறித்து 113 ஆட்டோமொபைல் டீலர்களிடம் கிரிசில் ரேட்டிங்ஸ் ஆய்வு நடத்தியது. அதன் படி கொரோனா தொற்றிற்கு முந்தைய நிலையில் இருந்து PV மற்றும் CV டீலர்களின் செயல்பாட்டு லாபம் 4-5 சதவிகிதம் உயரும் எனவும், இரு சக்கர வாகன உற்பத்தியாளர்களைப் பொறுத்தவரை இந்த நிதியாண்டில் 3-4 சதவிகிதம் படிப்படியாக உயரும் வாய்ப்புள்ளதாக கிரிசில் ரேட்டிங் இயக்குனர் கௌதம் ஷாஹி தெரிவித்துள்ளார். இதோடு வாகன உபகரண உற்பத்தியாளர்கள் நடப்பாண்டில் PV டீலர்கள் 17-19 சதவிகித வலுவானத் தொகுதி வளர்ச்சியைக் காண்பார்கள் என்றும்,

  கிரிசில் முன்னறிவிப்பின் படி, அதிக விலையுள்ள பயன்பாட்டு வாகன விற்பனையின் அதிக விகிதத்தின் காரணமாக ஒரு வாகனத்திற்கு ஒட்டு மொத்த வளர்ச்சி 24-26 சதவீதமாக உள்ளது என அறிக்கை தெரிவித்துள்ளது. கடந்த நிதியாண்டுகளைப் பொறுத்தவரை வாகன உற்பத்திகள் சரிவை சந்தித்த நிலையில், 5 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளனர். இந்த வளர்ச்சியோடு அடுத்த 3 நிதியாண்டுகளில் ஆட்டோ மொபைல் டீலர்கள் மிக விரைவான வளர்ச்சியைப் பெறுவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.

  மேலும் 2023 ஆம் நிதியாண்டில் சிறந்த வருவாய் மற்றும் லாப வளர்ச்சியை அதிகமாகும் வாய்ப்பு உள்ளது. அதே சமயம் வாடிக்கையாளர்களின் தேவை அதிகரித்துள்ளதால், வாகன விநியோகஸ்தர்களுக்கு செயல்பாட்டு மூலதனச் செலவுகள் குறைய வாய்ப்புள்ளது. இதோடு மக்களிடம் "அதிக பணப்புழக்கம், குறைந்த சரக்கு செலவு மற்றும் இருப்புநிலைகளை வலுப்படுத்துதல் ஆகியவை இந்த நிதியாண்டில் வாகன டீலர்களின் கடன் அளவீடுகளை மேம்படுத்தும்" என்று கிரிசில் ரேட்டிங்ஸின் இணை இயக்குனர் சுஷாந்த் சரோட் கூறினார்.

  Read more: உலகின் முதலாவது எலெக்ட்ரிக் விமானம் தனது பயணத்தை நிறைவு செய்தது!

  இந்த ஆய்வு அறிக்கையின் படி இனி வரும் காலங்களில் நிச்சயம் ஆட்டோமொபைல் துறை வளர்ச்சி பெறக்கூடும். மேலும் தீபாவளி, ஆயுத பூஜை போன்ற பண்டிகைக்காலங்கள் நெருங்கி வருவதால் அனைத்து முன்னனி கார் நிறுவனங்களும் வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் புதிய வாகனங்களை சந்தையில் அறிமுகப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

  Published by:Srilekha A
  First published:

  Tags: Automobile