ஹோம் /நியூஸ் /ஆட்டோமொபைல் /

விபத்துக்களை 40%-க்கும் மேல் குறைக்கும் ஆட்டோமேட்டிக் பிரேக்கிங் சிஸ்டம்..! ஆய்வில் கண்டுபிடிப்பு.!

விபத்துக்களை 40%-க்கும் மேல் குறைக்கும் ஆட்டோமேட்டிக் பிரேக்கிங் சிஸ்டம்..! ஆய்வில் கண்டுபிடிப்பு.!

விபத்து

விபத்து

Automatic Emergency Braking | சமீபத்தில் அமெரிக்காவில் நடத்தப்பட்ட 2 ஆய்வுகள் ஆட்டோமேட்டிக் எமர்ஜென்சி பிரேக்கிங் ரியர்-என்ட் ஆட்டோமொபைல் விபத்துக்களின் எண்ணிக்கையை கிட்டத்தட்ட பாதியாக குறைக்கும் என்பதை வெளிப்படுத்தி இருக்கிறது. மேலும் பிக்கப் டிரக் விபத்துக்களை AEB அம்சமானது சுமார் 40%-க்கும் அதிகமாக குறைப்பதையும் ஆய்வு முடிவுகள் காட்டி இருக்கின்றன.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

உலகம் முழுவதும் ஆண்டுதோறும் சாலை விபத்துகளில் லட்சக்கணக்கான மக்கள் பலியாகின்றனர். விபத்துகளை தடுக்கும் மற்றும் குறைக்கும் நோக்கில் பல அம்சங்கள் வாகனங்களில் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கடந்த சில ஆண்டுகளாக ஆட்டோமேட்டிக் எமர்ஜென்சி பிரேக்கிங் (AEB) சிஸ்டம் சாலை விபத்துகளை குறைப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருந்து வருகிறது.

முன்னோக்கி செல்லும் வாகனத்துடன் சாத்தியமான மோதல்களைக் கண்டறிந்து மோதல் எச்சரிக்கையை (collision warning) இந்த அம்சம் வழங்குகிறது. தவிர மோதலைத் தவிர்க்க அல்லது தவிர்க்க முடியாத மோதலால் ஏற்படும் பாதிப்பின் தீவிரத்தை குறைக்க தானாகவே பிரேக் செய்கிறது. இந்நிலையில் சமீபத்தில் அமெரிக்காவில் நடத்தப்பட்ட 2 ஆய்வுகள் ஆட்டோமேட்டிக் எமர்ஜென்சி பிரேக்கிங் ரியர்-என்ட் ஆட்டோமொபைல் விபத்துக்களின் எண்ணிக்கையை கிட்டத்தட்ட பாதியாக குறைக்கும் என்பதை வெளிப்படுத்தி இருக்கிறது. மேலும் பிக்கப் டிரக் விபத்துக்களை AEB அம்சமானது சுமார் 40%-க்கும் அதிகமாக குறைப்பதையும் ஆய்வு முடிவுகள் காட்டி இருக்கின்றன.

அரசு, ஆட்டோ இன்டஸ்ட்ரி பார்ட்னர்ஷிப் மற்றும் இன்ஷூரன்ஸ் இன்டஸ்ட்ரியால் நடத்தப்பட்ட இந்த ஆய்வுகள் முடிவுகளை கண்டறிய விபத்து ஏற்பட்டதற்கான தரவுகளை பயன்படுத்தியது. அமெரிக்காவின் தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகத்தால் 13 மாகாணங்களில் சேகரிக்கப்பட்ட போலீஸ் ரிப்போர்ட்டட் விபத்துகளுடன் கூடிய ஆட்டோ எக்யூப்மென்ட்களின் டேட்டா ஆய்வு செய்யப்பட்டது. டேட்டாக்களை வைத்து ஃபார்வேர்ட் கொலிஷன் வார்னிங் மற்றும் எமர்ஜென்சி பிரேக்கிங் உள்ளிட்ட நிகழ்வுகளை குழு ஆய்வு செய்தது.

இதில் ஒரு ஆய்வில் எந்த பாதுகாப்பு சிஸ்டமும் இல்லாத வாகனங்களுடன் ஒப்பிடும்போது ஃபார்வேர்ட் கொலிஷன் வார்னிங் + எமர்ஜென்சி பிரேக்கிங் உள்ளிட்ட சிஸ்டம்களை கொண்டிருந்த வாகனங்களால் ஃப்ரன்ட்-டு-ரியர் விபத்துக்கள் 49% குறைக்கப்பட்டதை அதிகாரிகள் கண்டறிந்தனர். அதே போல் காயங்களுடனான பின்புற விபத்துக்கள் (Rear crashes) சுமார் 53% வரை குறைக்கப்பட்டுள்ளதும் இந்த ஆய்வில்கண்டறியப்பட்டுள்ளது.

அதே சமயம் ஃபார்வேர்ட் கொலிஷன் வார்னிங் மட்டுமே கொண்ட வாகனங்கள் ரியர்-என்ட் விபத்துகளை 16% மட்டுமே குறைத்துள்ளன, காயங்களுடனான பின்புற விபத்துக்களை 19% மட்டுமே குறைக்கின்றன. சாலை, வானிலை அல்லது லைட்டிங் கண்டிஷன்கள் சிறந்ததாக இருந்தாலும், இல்லாவிட்டாலும் கூட AEB-க்கள் எந்த நிலையிலும் நன்றாக வேலை செய்கின்றன என்பதை ஆய்வு சுட்டி காட்ட்டியுள்ளது.

Also Read : கார் வாங்கப்போறீங்களா..? பட்ஜெட் விலையில் வாங்கக்கூடிய 5 எஸ்யூவி பற்றிய விவரங்கள் இதோ.! 

இதற்கிடையே மற்றொரு ஆய்வில் AEB-க்கள் பிக்கப் டிரக்களுக்கான ரியர் கிராஷ் விகிதங்களை 43 சதவீதமும், ரியர்-என்ட் இஞ்சூரி கிராஷ்களை 42 சதவீதமும் குறைப்பது கண்டறியப்பட்டுள்ளது. கார்கள் அல்லது SUV-க்களை விட பிக்கப் டிரக்களில் AEB குறைவாகவே உள்ளதும் தெரிய வந்துள்ளது. Mitsubishi, Ford, Mercedes-Benz, Stellantis, Volkswagen மற்றும் Honda உள்ளிட்டவை இந்த ஆண்டு அமெரிக்க அரசிடம் தாக்கல் செய்துள்ள ஆவணங்களின்படி குறைந்தபட்சம் 90% மாடல்களில் அவசரகால பிரேக்கிங் தரத்தை (emergency braking standard) உருவாக்கியுள்ளன.

Published by:Selvi M
First published:

Tags: Automobile, Car accident, Road accident, Tamil News