முகப்பு /செய்தி /ஆட்டோமொபைல் / இனி இந்த பரிசோதனை கட்டாயம்... வாகன உரிமையாளர்களுக்கு அதிரடி உத்தரவு..

இனி இந்த பரிசோதனை கட்டாயம்... வாகன உரிமையாளர்களுக்கு அதிரடி உத்தரவு..

காட்சி படம்

காட்சி படம்

Automated Fitness Testing : வாகனங்களை ஆட்டோமேட்டிங் சோதனை நிலையங்கள் வாயிலாக பரிசோதனை செய்வது கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. 

காற்று மற்றும் சுற்றுச்சூழல் மாசைக் கட்டுப்படுத்தும் விதமாகவும், மக்களுக்கு பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்தும் வகையிலும் மத்திய அரசு மோட்டார் வாகன சட்டங்களில் பல்வேறு திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது. அதன் படி கடந்த ஆண்டு வாகனங்களை ஆட்டோமேட்டிங் சோதனை நிலையங்கள் மூலமாக உடற்தகுதி பரிசோதனை செய்வது கட்டாயம் என்ற சட்டம் கொண்டு வரப்பட்டது. வழக்கமான நடைமுறைகளின் படி, மத்திய போக்குவரத்து அமைச்சகம் 30 நாட்களுக்குள் இந்த சட்டத்தை எதிர்க்கவோ அல்லது திருத்தம் சொல்லவோ கால அவகாசம் கொடுக்கப்பட்டது. ஆனால் எந்த மறுப்பும் தெரிவிக்கப்படாததால் இந்த சட்டம் அமலுக்கு வந்தது.

சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் (MoRTH) வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, கனரக சரக்கு வாகனங்கள் மற்றும் கனரக பயணிகள் மோட்டார் வாகனங்களை தானியங்கி சோதனை நிலையங்கள் (ATS) மூலமாக உடற்தகுதி சோதனை செய்வது 2023, ஏப்ரல் 1ம் தேதி முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடுத்தர பயணிகள் வாகனங்கள் நடுத்தர சரக்கு வாகனங்கள் மற்றும் இலகுரக வாகனங்களுக்கு 2024 ஜூன் 1ஆம் தேதி முதல் இந்த விதிமுறை கட்டாயமாக்கப்பட இருக்கிறது. அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் படிப்படியாக தானியங்கி சோதனை நிலையங்கள் மூலம் வாகனங்களின் உடற்தகுதி சோதனையை அரசாங்கம் கட்டாயமாக்கியுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

also read : சீனாவிலிருந்து கிட்டத்தட்ட 1.28 லட்சம் கார்களை திரும்ப பெற்ற டெஸ்லா..காரணம் என்ன?

ஒரு தானியங்கி சோதனை நிலையம் (ATS) என்பது வாகனத்தின் ஃபிட்னஸைச் சரிபார்க்கத் தேவையான பல்வேறு சோதனைகளை ஆட்டோமேட்டிக் இயந்திரங்களை பயன்படுத்தி மேற்கொள்ளக்கூடியது. சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் ஏப்ரல் 5, 2022 தேதியிட்டுள்ள அறிவிப்பில், மத்திய மோட்டார் வாகன விதிகள் 1989ன் விதி 175ன்படி பதிவு செய்யப்பட்ட தானியங்கி சோதனை நிலையம் மூலம் மட்டுமே மோட்டார் வாகனங்களை சோதிக்க வேண்டியது கட்டாயம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு, தனிப்பட்ட மற்றும் போக்குவரத்து வாகனங்களின் ஃபிட்னஸ் சோதனைக்கான ஆட்டோமேட்டிக் சோதனை மையங்களை திறந்து கொள்ளலாம் என சிறப்பு நோக்க வாகனங்கள், மாநில அரசுகள், நிறுவனங்கள், சங்கங்கள் மற்றும் தனிநபர்களின் அமைப்புகள் போன்ற நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது.

also read : இந்த வருடத்தில் 19 கார்கள், 5 பைக்குகளை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ள BMW!

 

மத்திய அரசின் அறிவிப்பின்படி, இந்த சோதனை என்பது சரக்கு மற்றும் போக்குவரத்து வாகனங்களுக்கு 8 ஆண்டுகள் வரையும் பொதுமக்கள் பயன்படுத்தும் வாகனங்களுக்கு இந்த சான்றிதழ் 15 ஆண்டுகளுக்கு ஒரு முறையும் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் 8 வருடங்கள் குறைவாக உள்ள வாகனங்களுக்கு 2 வருட சான்றிதழும், 8 வருடத்திற்கு மேல் உள்ள வாகனங்களுக்கு 1 வருட சான்றிதழும் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் வாகனங்கள் முறையாக சோதிக்கப்படும் என்றும், இதனால் சுற்றுச்சூழல் மாசைக் கட்டுப்படுத்த முடியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

First published:

Tags: Automobile, Vehicle