Home /News /automobile /

அப்பாடா... நிம்மதி பெருமூச்சு விடும் ஆட்டோமொபைல்ஸ் நிறுவனங்கள்.... ஏன் தெரியுமா?

அப்பாடா... நிம்மதி பெருமூச்சு விடும் ஆட்டோமொபைல்ஸ் நிறுவனங்கள்.... ஏன் தெரியுமா?

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

Automobile | 2022ம் ஆண்டு ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் வெடித்தது. இதனால் தொழில்நுட்பம் மற்றும் ஆட்டோமொபைல்ஸ் துறைகளில் மீண்டும் செமி கண்டெக்டர்சிப்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    கொரோனா காரணமாக ஏற்பட்ட சிப் தட்டுப்பாடு ஆட்டோமொமைல்ஸ் துறையை கதிகலங்க வைத்தது. கடந்த 2020ம் ஆண்டு கொரோனா தொற்று பரவத் தொடங்கியதை அடுத்து நிறுவனங்கள் அனைத்தும் தங்களது ஊழியர்களை வீடுகளில் இருந்தே பணியாற்ற அனுமதித்தன. இதனால் பொது போக்குவரத்து முதற்கொண்டு, மக்களின் கார் பயன்பாடும் முற்றிலும் முடங்கியது. இதனால் பல நிறுவனங்கள் தங்களது புதிய கார் தயாரிப்புகளை நிறுத்தின. இதனையடுத்து கார்களுக்குத் தேவையான சிப்கள் தயாரிக்கும் பணியும் முற்றிலும் நிறுத்தப்பட்டது.

    இதனால் கொரோனா லாக்டவுன் முடிந்து மக்கள் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பியதும் கார் தயாரிப்பாளர்கள் பல மாதங்களாக மூடி வைத்திருந்த தொழிற்சாலைகளை முழு வேகத்தில் செயல்படுத்த தொடங்கினர். ஆனால் பல மாதங்களாக கார்களுக்கு தேவையான சிப் தயாரிப்பு நிறுத்தப்பட்டிருந்ததால் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் தேவைகள் இருந்தாலும் முக்கியமான உதிரிபாகமான சிப் கிடைக்காததால் கார் உற்பத்தி மற்றும் புதிய கார்களின் அறிமுகம் தள்ளிப்போனது.

    2021ம் ஆண்டு ஆட்டோமொபைல்ஸ் நிறுவனம் மெல்ல தட்டுத்தடுமாறி நிற்க ஆரம்பித்த நிலையில், 2022ம் ஆண்டு ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் வெடித்தது. இதனால் தொழில்நுட்பம் மற்றும் ஆட்டோமொபைல்ஸ் துறைகளில் மீண்டும் செமி கண்டெக்டர் சிப்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. கடந்த ஜூலை மாத நிலவரப்படி மட்டும், ஹூண்டாய், மஹிந்திரா, மாருதி சுஸுகி உள்ளிட்ட நிறுவனங்கள் 6.40 லட்சம் கார்களை உற்பத்தி செய்ய முடியாமல் தாமதம் ஏற்பட்டது. இதனால் இந்நிறுவனங்களின் புதிய கார்களை புக் செய்த வாடிக்கையாளர்கள் 9 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

    Read More : பலரின் கனவாக மாறியுள்ள உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானம்- எமிரேட்ஸ் A380 பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் இதோ!


    இந்நிலையில் செமி கன்டெக்டர் சிப் தொடர்பாக நீடித்து வந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைத்ததை அடுத்து, மாருதி சுஸுகி, டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா & மஹிந்திரா மற்றும் கியா ஆகிய கார் தயாரிப்பு நிறுவனங்கள் ஆகஸ்ட் மாதத்திற்கான உற்பத்தி மற்றும் டெலிவரி அளவு அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹூண்டாய், டொயோட்டா மற்றும் ஸ்கோடா போன்ற பிற உற்பத்தியாளர்களும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது, ஆகஸ்ட் மாதத்தில் குறிப்பிட்ட அளவு வளர்ச்சியை பதிவு செய்துள்ளனர்.

    நாட்டின் மிகப்பெரிய வாகன தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி இந்தியா, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 1 லட்சத்து 3 ஆயிரத்து 187 யூனிட்களை விற்பனை செய்த நிலையில், தற்போது 1,34,166 யூனிட்டுகளை டெலிவரி செய்துள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது 30 சதவீதம் அதிகரித்துள்ளது.

    மாருதி சுஸுகியின் மினி செக்மெண்ட் கார்களான எஸ்-பிரஸ்ஸோ மற்றும் ஆல்டோ ஆகிய கார்கள்  உற்பத்தி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20,461 யூனிட்களில் இருந்து 22,162 யூனிட்களாக அதிகரித்துள்ளது.

    இதேபோல், பலேனோ, செலிரியோ, டிசையர், இக்னிஸ், ஸ்விஃப்ட், டூர் எஸ் மற்றும் வேகன்ஆர் உள்ளிட்ட கார்கள் ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 71,557 யூனிட்கள் டெலிவரி செய்யப்பட்டுள்ளன. இது 2021ம் ஆண்டுடன் ஒப்பிடும் போதும் 57 சதவீதம் அதிகமாகும். பிரெஸ்ஸா, எர்டிகா, எஸ்-கிராஸ் மற்றும் எக்ஸ்எல்6 ஆகிய வாகனங்கள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 24,337 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்ட நிலையில், கடந்த மாதம் 26,932 யூனிட்கள் விற்பனையாகியுள்ளன.

    இந்தியாவில் பண்டிகை கால விற்பனை களைக்கட்டி வரும் நிலையில், செமி கன்டெக்டர் சிப் தட்டுப்பாடு நீக்கி கார் விற்பனை அதிகரித்து வருவது உற்பத்தியாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

     
    Published by:Lilly Mary Kamala
    First published:

    Tags: Automobile, Toyota

    அடுத்த செய்தி