விற்பனை வீழ்ச்சியால் உற்பத்தியைக் குறைத்த கார் தொழிற்சாலைகள்..!

சந்தை நிலவரத்துக்கும் இதர நிறுவனங்களின் உற்பத்திக் குறைப்புக்கும் முற்றிலும் மாறாக தனது உற்பத்தியை 3 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது ஹூண்டாய் மோட்டார்.

Web Desk | news18
Updated: August 1, 2019, 7:01 PM IST
விற்பனை வீழ்ச்சியால் உற்பத்தியைக் குறைத்த கார் தொழிற்சாலைகள்..!
மாதிரிப்படம்
Web Desk | news18
Updated: August 1, 2019, 7:01 PM IST
மூன்று மாதத்தில் 11 சதவிகிதம் வரையில் கார் உற்பத்தியை ஆட்டோமொபைல் தொழிற்சாலைகள் குறைத்துள்ளன.

ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான மூன்று மாத காலகட்டத்தில் வாகன விற்பனை விகிதம் 12.35% ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு இதே மூன்று மாத காலத்தில் 69,42,742 வாகனங்கள் விற்பனை ஆகியுள்ளன. ஆனால், இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை குறைந்து 60,85,406 வாகனங்கள் மட்டுமே விற்பனை ஆகியுள்ளன.

குறிப்பாக, உள்நாட்டு கார் விற்பனையும் 12 சதவிகிதம் வீழ்ந்துள்ளது. இதேபோல், இரு சக்கர வாகன உற்பத்தியும் 12 சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளது. நாட்டின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசூகி நிறுவனமும் தனது உற்பத்தியை 15 சதவிகிதம் வரையில் குறைத்துள்ளது.


ஆனால், சந்தை நிலவரத்துக்கும் இதர நிறுவனங்களின் உற்பத்திக் குறைப்புக்கும் முற்றிலும் மாறாக தனது உற்பத்தியை 3 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது ஹூண்டாய் மோட்டார். கமர்ஷியல் வாகனப் பிரிவில் டாடா மோட்டார்ஸ் 12% மற்றும் மஹிந்திரா நிறுவனம் 25% வாகன உற்பத்தியைக் குறைத்துள்ளன.

மேலும் பார்க்க: அறிமுகமான ஒரே மாதத்தில் 1,508 வாகனங்கள் விற்பனை - உற்சாகத்தில் MG ஹெக்டார்

First published: August 1, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...