அடுத்த காலாண்டில் ஆட்டோமொபைல் துறையில் 5 லட்சம் பேர் வேலையிழப்பை சந்திப்பார்கள்!

அடுத்த காலாண்டில் ஆட்டோமொபைல் துறையில் 5 லட்சம் பேர் வேலையிழப்பை சந்திப்பார்கள்!
கோப்புப்படம்
  • News18
  • Last Updated: August 18, 2019, 1:14 PM IST
  • Share this:
விற்பனை மந்தம் உள்ளிட்ட சில காரணங்களால் அடுத்த காலாண்டில் ஆட்டோமொபைல் துறையில் 5 லட்சம் பேர் வேலையிழப்பை சந்திக்கலாம் என்று எக்கனாமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் ஆண்டுக்கு 57 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பொருளாதார சந்தையைக் கொண்ட ஆட்டோமொபைல் துறை தற்போது சில வாரங்களாக ஆட்டம் கண்டு வருகிறது. விற்பனை மந்தம் என்பதால் உற்பத்தியும் குறைக்கப்பட்டுள்ளது.

இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன உற்பத்தி நிறுவனங்கள் வாரத்தின் இரண்டு அல்லது மூன்று நாட்களை வேலையில்லாத நாட்களாக தொழிலாளர்களுக்கு அறிவித்துள்ளன. நிரந்தரப்பணியாளர்களின் நிலை இப்படி என்றால், ஒப்பந்தப் பணியாளர்கள் தற்காலிகமாக வேலையிழப்பை சந்தித்துள்ளனர்.


முக்கிய வாகன உற்பத்தி நிறுவனங்களான டி.வி.எஸ், ஹுண்டாய் ஆகியவையும் இந்த நடவடிக்கையை எடுக்க தள்ளப்பட்டுள்ளன. இந்த நிலையில், அடுத்த காலாண்டில் சுமார் 5 லட்சம் பேர் ஆட்டோமொபைல் துறையில் வேலையிழப்பை சந்திப்பார்கள் என்று எச்சரித்துள்ளது எகனாமிக் டைம்ஸ் நாளிதழ்.

ஆட்டோமொபைல் துறையின் டெட்ராய்டாக இருக்கும் தமிழகம் இதனால் பெரும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். மத்திய அரசு இதில் கவனம் செலுத்தி உடனே சரிசெய்ய வேண்டும் என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.First published: August 17, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்