ஹோம் /நியூஸ் /ஆட்டோமொபைல் /

ஆட்டோ எக்ஸ்போ 2023: தவிர்க்கும் முன்னணி கார் நிறுவனங்கள்... காரணம் என்ன?

ஆட்டோ எக்ஸ்போ 2023: தவிர்க்கும் முன்னணி கார் நிறுவனங்கள்... காரணம் என்ன?

ஆட்டோ எக்ஸ்போ 2023

ஆட்டோ எக்ஸ்போ 2023

Auto Expo 2023 | மஹிந்திரா, டிவிஎஸ், பஜாஜ் மற்றும் பல முன்னணி கார் நிறுவனங்கள் இந்த எக்ஸ்போவில் பங்கேற்காது என்ற தகவல் வாகனப் பிரியர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இன்றைக்கு ஒவ்வொரு நாளும் விதவிதமாக மற்றும் நவீன தொழில்நுட்பத்துடன் பல வகையான கார்கள் சந்தைக்கு விற்பனைக்கு வருகின்றன. இருந்தபோதும் கார்களை வாங்க நினைக்கும் வாகன பிரியர்களுக்காகவே இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆட்டோ எக்ஸ்போ நடைபெறுவது வழக்கம். ஆனால் ஆன் கிரவுண்ட் ஆட்டோமெட்டிங் சோ, கொரோனா தொற்றின் காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக நடைபெறவில்லை. இந்நிலையில் தான் வருகின்ற 2023 ஜனவரி 13 முதல் 18 வரை டெல்லிக்கு அருகிலுள்ள நொய்டாவில் auto expo நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த எக்ஸ்போவில் நாட்டின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களின் வாகனங்களை காட்சிப்படுத்துவார்கள். குறிப்பாக மாருதி சுசுகி மற்றும் ஹுண்டாய் மோட்டார்ஸ், டாடா மோட்டார்ஸ், எம்ஜி மோட்டார், டெயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார், கியா மற்றும் புதுமுக BYD போன்ற மற்ற நிறுவனங்களுடன் இணைந்து, வரவிருக்கும் ஆட்டோ எக்ஸ்போவில் புதிய கான்செப்ட் கார்களைக் காட்சிப்படுத்த உள்ளனர். அதே சமயம் மஹிந்திரா, டிவிஎஸ், பஜாஜ் மற்றும் பல முன்னணி நிறுவனங்கள் இந்த எக்ஸ்போவில் பங்கேற்காது என்ற தகவல் வாகனப் பிரியர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆட்டோ எக்ஸ்போ 2023 யைத் தவிர்ப்பதற்கானக் காரணம்…

மஹிந்திரா, டிவிஎஸ், பஜாஜ் போன்ற கார் தயாரிப்பு நிறுவனங்களிலிருந்து தயாரிக்கும் கார்கள் தான் மக்களிடம் அதிகளவில் விற்பனையாகிறது. இருந்தப் போதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக நீடித்த கொரோனா தொற்றின் காரணமாக கார் விற்பனைகள் அனைத்தும் மந்த நிலையில் நீடிக்கிறது.  இருசக்கர வாகன சந்தையும் குறிப்பிடத்தக்க அளவு முன்னேற்றம் எதுவும் காணாமல் மந்தநிலையில் உள்ளது. இதன் விளைவாகத் தான் ஹீரோ மோட்டோ கார்ப், பஜாஜ் ஆட்டோ மற்றும் டிவிஎஸ் உள்பட பெரும்பாலான முக்கிய நிறுவனங்கள் வரவிருக்கும் ஆட்டோ எக்ஸ்போவில் இருந்து விலகி இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Read More : கார் வாங்கப்போறீங்களா..? பட்ஜெட் விலையில் வாங்கக்கூடிய 5 எஸ்யூவி பற்றிய விவரங்கள் இதோ.! 

ஆட்டோ எக்ஸ்போ 2023 ல் எதிர்ப்பார்க்கப்படும் கார்களின் விபரங்கள்…

ஹுண்டாய் மோட்டார் இந்தியாவும் அதன் மலிவு EV கான்செப்ட்டை முதன்மையான lonin 6 EV உடன் காட்சிப்படுத்தும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதேப் போன்று கொரிய கார் தயாரிப்பாளர் க்ரெட்டா மற்றும் அதன் ஜென் வெர்னாவையும் காட்சிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகளவில் உள்ளன.

இந்தியாவில் வாகனப்பிரியர்களிடம் அதிகளவில் விற்பனையாகும் ஹுண்டாயின் இந்திய தயாரிப்பான செல்டோஸ் எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்டையும் அதன் முதல் EV kia EV6-ஐ காட்சிப்படுத்தலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதேப் போன்று டாடா மோட்டார்ஸ், சமீபத்தில் வெளியிடப்பட்ட Tiago EV மற்றும் தற்போது அதிகம் விற்பனையாகும் புதிய எலக்ட்ரிக் பதிப்புகள் உள்பட அதன் தற்போதைய தயாரிப்புகளை எக்ஸ்போவில் கொண்டுவர வாய்ப்புள்ளது. இதோடு பல முன்னணி நிறுவனங்களின் கார்களும் எக்ஸ்போவில் இடம் பெறவுள்ளதால், வாகன பிரியர்கள் குஷியில் உள்ளனர்.

Published by:Lilly Mary Kamala
First published:

Tags: Automobile, Car