இந்தியாவில் அறிமுகமானது Audi RS5 ஸ்போர்ட் பேக் வாகனம்: விலை எவ்வளவு தெரியுமா?

ஜெர்மன் சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான ஆடி, இந்தியாவில் அதன் ஆடி ஆர்எஸ் 5 ஸ்போர்ட் பேக் வாகனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஜெர்மன் சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான ஆடி, இந்தியாவில் அதன் ஆடி ஆர்எஸ் 5 ஸ்போர்ட் பேக் வாகனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

  • Share this:
    ஆடி ஆர்எஸ் 5 ஸ்போர்ட்பேக் CBU வழியாக இந்தியாவிற்கு கொண்டு வரப்படும் எனவும் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், எக்ஸ்-ஷோரூம் அறிமுக விலைப்படி இந்தியாவில் இதன் மதிப்பு ரூ.1.04 கோடி என கூறப்படுகிறது. இதன் அம்சங்களை பொறுத்தவரை, இந்த வாகனம் 2.9 L V6 ட்வின்-டர்போ TFSI எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. இது 450 ஹெச்பி பவரையும், 600 என்எம் டார்க் திறனையும் உற்பத்தி செய்கிறது. மேலும் இந்த ஸ்போர்ட் பேக் மணிக்கு 0 முதல் 100 கிமீ வரை வெறும் 3.9 வினாடிகளில் சென்று மணிக்கு 250 கிமீ வேகத்தை எட்டும்.

    புதிய வாகனத்தின் வெளியீடு குறித்து ஆடி இந்தியாவின் தலைவர் திரு. பல்பீர் சிங் தில்லான் கூறுகையில், “ஆடி ஆர்எஸ் 5 ஸ்போர்ட் பேக் என்ற தயாரிப்பு வரிசையில் ஸ்போர்ட்டி வாகனத்தை அறிமுகப்படுத்தியதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். ஆடி ஆர்எஸ் 5 முதன்முறையாக இந்தியாவிற்கு ஒரு ஸ்போர்ட்பேக் ஆக வருகிறது மற்றும் அன்றாட நடைமுறைக்கு கூடுதலாக Audi RS DNA விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு சரியான தேர்வாக இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.

    ஆடி ஆர்எஸ் 5 ஸ்போர்ட் பேக் ஒரு மிகச்சிறந்த ஆல்-ரவுண்டர் ஆகும். இது ஆக்ரோஷமான ஸ்டைலிங், இதயத்தை உந்திச் செல்லும் செயல்திறன் மற்றும் செழிப்பான ஆடம்பரத்தின் கலவையுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதன் செயல்திறன் இந்தியாவில் உள்ள கார் வாடிக்கையாளர்கள் மற்றும் தற்போதுள்ள ஆடி வாடிக்கையாளர்களின் எகோபத்திய வரவேற்பை பெறும்.

    மேலும் டிரைவர் இருக்கையில் அமர்பவர், மல்டிஃபங்க்ஷன் ஸ்டீயரிங் வீல் மூலம் 2 ஆர்எஸ் மோடை தேர்வு செய்துக் கொள்ளலாம். இது எஞ்சினின் பவர் வளைவை அளவீடு செய்கிறது. டிரான்ஸ்மிஷன் மற்றும் ஸ்டீயரிங் உணர்திறனை மாற்றுகிறது. இதுதவிர குவாட்ரோ பெர்மனென்ட் ஆல்-வீல் டிரைவ், செல்ப்-லாக்கிங் மைய வித்தியாசத்துடன், ஓட்டுநர் நிலைமைகளுக்கு ஏற்ப முன் மற்றும் பின்புற அச்சுகளுக்கு இடையில் மின் விநியோகத்தை மேம்படுத்துகிறது.

    வெளிப்புற அமைப்பை பொறுத்தவரை, ஆடி ஆர்எஸ் 5 ஸ்போர்ட் பேக் ஒரு புதிய சிங்கிள் பிரேமை கொண்டுள்ளது. இது பளபளப்பான கருப்பு ஆர்எஸ் ஹனிபாம் கிரில்லை உள்ளடக்கியது. மேலும், இதில் டைனமிக் டர்ன் இண்டிகேட்டர்கள் மற்றும் ஹெட்லைட் வாஷர் சிஸ்டம் கொண்ட மேட்ரிக்ஸ் எல்இடி ஹெட்லேம்ப்கள் உள்ளன. அதேபோல பக்கவாட்டில் 48.26 செமீ (19 ”) 10 ஸ்போக் அலாய் வீல்கள் மற்றும் ஃப்ரேம் இல்லாத கதவுகள், பின்புறம் டைனமிக் டர்ன் சிக்னல்களுடன் எல்இடி காம்பினேஷன் விளக்குகள் மற்றும் மேற்பரப்பில் பொருத்தப்பட்ட ஸ்பாய்லர் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.

    மேலும் ஆடி ஆர்எஸ் 5 ஸ்போர்ட்பேக் பின்வரும் வண்ணங்களில் கிடைக்கிறது. அவை நார்டோ கிரே, டர்போ ப்ளூ, டேங்கோ ரெட், மைத்தோஸ் பிளாக், பனிப்பாறை வெள்ளை, நவரா ப்ளூ, சோனோமா கிரீன், டேடோனா கிரே ஆகியவை ஆகும்.

    வாகன கேபினின் உள்ளே கருப்பு மற்றும் ராக் கிரே தீம் அல்காண்டரா அதாவது லெதர் உட்புறங்களுடன் அலுமினியம் பதிக்கப்பட்டுள்ளது. அதேபோல ஓட்டுநர் இருக்கை மசாஜ் செயல்பாட்டுடன் காற்றழுத்தமாகவும் சரிசெய்யக்கூடிய இடுப்பு ஆதரவையும் கொண்டுள்ளது. பிற அம்சங்களில் 3-சோன் ஏர் கண்டிஷனிங், சுற்றுப்புற விளக்குகள், ஆடி விர்ச்சுவல் காக்பிட் பிளஸ், எம்எம்ஐ டச் அம்சங்களுடன் எம்எம்ஐ நேவிகேஷன் பிளஸ் ஆகியவை அடங்கும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vijay R
    First published: