Home /News /automobile /

அதிநவீன வசதியுடன் Audi Q3 கார் விற்பனை - என்னென்ன அம்சங்கள்.? முழு விபரம்.!

அதிநவீன வசதியுடன் Audi Q3 கார் விற்பனை - என்னென்ன அம்சங்கள்.? முழு விபரம்.!

ஆடி கார்

ஆடி கார்

2022 Audi Q3 | இந்தியாவில் சிங்கிங் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன் உள்பட பல்வேறு மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் Audi Q3 பிரீமியம் பிளஸ், Audi Q3 டெக்னாலஜி ஆகிய 2 வேரியண்ட்களில் ஆடி கார் விற்பனைக்கு வரவுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
இந்தியாவில் சொகுசு கார்களை வாங்க நினைக்கும் வாடிக்கையாளர்களுக்காகவே பல்வேறு வசதிகளைக் கொண்டுள்ள நிறுவனம் தான் ஆடி(audi). தற்போது வரை கார் விற்பனையில் முன்னணி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆடி நிறுவனம் தன்னுடைய பிரபல எஸ்யுவி காரான Q3 காரை சிங்கிங் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனுடன் இரண்டு புதிய வேரியண்ட்களில் அறிமுகம் செய்துள்ளது. உலகம் முழுவதும் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் விற்பனை செய்யப்பட்டு வந்தாலும் கொரோனா பாதிப்பு காரணமாக இந்தியாவில் வெளியாகாமல் இருந்தது.

இந்நிலையில் மீண்டும் இந்தியாவில் ஆடி க்யூ 3 கார் பிரீமியம் பிளஸ், ஆடி க்யூ 3 டெக்னாலஜி ஆகிய 2 வேரியண்ட்களில் நமக்கு கிடைக்கிறது. ஆடி நிறுவனம் மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் தற்போது அறிமுகம் செய்துள்ள காரை முன்பதிவு செய்யும் முதல் 500 வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகள் மற்றும் வசதிகள் வழங்கப்படும் என தெரிவித்துள்ள நிலையில், இதன் அம்சங்கள் மற்றும் விலை நிலவரம் குறித்து தெரிந்து கொள்வோம்.

ஆடி Q3 காரின் அம்சங்கள்:

காரில் 2.0 லிட்டர் TFSI என்ஜின் வசதியுடன் 190 BHP மற்றும் டார்க் 320 NM டார்க் வசதியும் உள்ளது. குறிப்பாக இந்த பிரீமியம் காரில் ஆல் வீல் டிரைவிங் வசதியுடன் 100 கிலோ மீட்டர் வேகத்தை 7.3 வினாடிகளில் அடைந்துவிடும்.



வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில், Audi Q3 காரில் LED ஹெட் லேம்ப் வசதி, LED டைல் லேம்ப், DRLS வசதி, 18 இன்ச் அலாய் வீல், அலுமினியம் இன்ஸெர்ட், வெளிப்புற மிரர், மின்னியல் ரீதியாக சரிசெய்யக்கூடிய முன் இருக்கைகள் மற்றும் முழு டிஜிட்டல் Audi விர்ச்சுவல் காக்பிட், 30 வண்ண சுற்றுப்புற விளக்குகள் போன்றவை இடம் பெற்றுள்ளன.

Also Read : ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.22 கோடி மதிப்புள்ளதாக மாறிய நானோ கார்.? எப்படி தெரியுமா.? 

இதோடு ப்ளுடூத் வசதி, 6 ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம், எலெக்ட்ரோ மெக்கானிக்கல் பவர் ஸ்டேரிங் வீல், வயர்லெஸ் சார்ஜிங், ஆம்பிஎண்ட் லைட்டிங் போன்றை இடம் பெற்றுள்ளன. இது தவிர லெதர் சீட் வசதி, ரியர் சீட் அட்ஜெஸ்ட் வசதி, லெதர் 3 ஸ்போக் ஸ்டேரிங் வீல், பேடல் ஷிப்ட்டர் போன்ற பல்வேறு வசதிகள் இடம் பெற்றுள்ளன.



இது போன்று பல்வேறு மேம்படுத்தபட்ட அம்சங்கள் மட்டுமில்லாது Audi Q3 காரில் பாதுகாப்பு வசதிகளும் அதிகளவில் இடம் பெற்றுள்ளது. குறிப்பாக ஹில் ஸ்டார்ட் அஸ்சிஸ்ட், ஸ்டார்ட், ஸ்டாப் சிஸ்டம் வசதி, ரிஜெனெரேட்டிவ் பிரேக்கிங், ரியர் கேமரா, கிருஷ் கண்ட்ரோல், 6 ஏர் பேக், சைடு ஏர் பேக் போன்ற பல்வேறு வசதிகள் இடம் பெற்றுள்ளது.

Also Read : ஸ்கார்பியோ என் மாடல் புக்கிங் செய்தவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

Audi Q3 காரின் விலை நிலவரம்:

இந்தியாவில் Audi Q3 பிரீமியம் பிளஸ், ரூபாய் 44.89 லட்சமும், Audi Q3 டெக்னாலஜி காரின் விலை ரூபாய் 50.39 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு பல்வேறு அம்சங்கள் அடங்கிய Audi Q3 காரின் டெலிவரிகள் கடந்த 2022 ஆம் ஆண்டின் இறுதியில் தொடங்கும் என்று Audi India தெரிவித்துள்ளது. மேலும் சொகுசு கார்களான SUV Mercedes-Benz GLA, BMW X1 மற்றும் Volvo XC40 போன்ற மாடல்களுக்கு போட்டியாக Audi Q3 விற்பனைக்கு வரவுள்ளதாகவும் Audi கார் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Published by:Selvi M
First published:

Tags: Audi, Audi's new car 2019, Automobile

அடுத்த செய்தி