மின்சாரத்தில் இயங்கும் ஆடி கார்: விலை ஜஸ்ட் ஐந்தரை கோடி ரூபாய்தான்

மின்சாரத்தில் இயங்கும் ஆடி கார்: விலை ஜஸ்ட் ஐந்தரை கோடி ரூபாய்தான்
ஆடி இ-டிரான் கார்
  • News18
  • Last Updated: September 18, 2018, 10:59 PM IST
  • Share this:
பிரபல ஜெர்மன் கார் தயாரிப்பு நிறுவனமான ஆடி, மின்சாரத்தில் இயங்கக்கூடிய காரை முதன்முறையாக அறிமுகம் செய்துள்ளது. 2019 இரண்டாம் காலாண்டில், சந்தையில் நுழையவுள்ள இந்த புதிய காரின் விலை சுமார் ஐந்தரை கோடி ரூபாய்.

பருவநிலை மாற்றம் உள்ளிட்டவை பெரும் இக்கட்டாக உருவெடுத்துள்ள இன்றைய காலகட்டத்தில் கார்களிலிருந்து வெளியேறும் கரிம வாயுக்கள் மீதான கட்டுப்பாடுகள் 2021-ம் ஆண்டு முதல் ஐரோப்பாவில் அமலுக்கு வருகின்றன.

டெஸ்லா நிறுவனத்தின் மாடல் X காருக்கு போட்டியாக பல நிறுவனங்கள் மின்சார கார் தயாரிப்பில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.


மின்சார கார்களுக்கான போட்டி களைகட்டி வரும் சூழலில் உலகின் முன்னணி நிறுவனமான ஆடி, கலிஃபோர்னியா மாகாணத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் இ-டிரான் (E-Tron) என்று அழைக்கப்படும் மின்சார காரை அறிமுகம் செய்தது.

ஒருமுறை மின்னூட்டம் கொடுத்தாலே இ-டிரான் காரானது 400 கிலோ மீட்டர் தொலைவு வரை செல்லும் என்று ஆடி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதிவேக மின்னூட்ட நிலையங்கள் அமைக்கப்படும் என்றால் அரை மணி நேரத்தில் 80 விழுக்காடு மின்னூட்டத்தை இ-டிரான் பெறும் என்றும் ஆடி கூறியுள்ளது.அடுத்த ஆண்டு சந்தையில் களமிறங்கவுள்ள இ-டிரான் காரின் விலை சுமார் 5 கோடியே 44 லட்சம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வோக்ஸ்வேகன் தயாரித்த டீசல் கார்களில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக அளவிலான வாயுவை வெளியேற்றியதாக அந்தக் குழுமம் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்தச் சூழலில் வோக்ஸ்வேகன் குழுமத்துக்கு சொந்தமான ஆடி நிறுவனம் சுற்றுச்சூழலுக்கு உகந்த இ-டிரான் காரை அறிமுகம் செய்திருக்கிறது.
First published: September 18, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்