மினி கூப்பருக்கு போட்டியாக புதிய காரை அறிமுகப்படுத்தும் ஆடி!

news18
Updated: June 21, 2018, 6:42 PM IST
மினி கூப்பருக்கு போட்டியாக புதிய காரை அறிமுகப்படுத்தும் ஆடி!
ஆடி ஏ1
news18
Updated: June 21, 2018, 6:42 PM IST
ஆடி நிறுவனம் தன்னுடைய  ‘ஏ1’ காரின் அடுத்த எடிஷனை விரைவில்அறிமுகப்படுத்த உள்ளது.  இந்தக் காரை சிறிய வகை சொகுசு கார்களில் அதிகம் விற்கப்படும் மினிக் கூப்பருக்குப் போட்டியாக ஆடி நிறுவனம் சந்தையில் அறிமுகப்படுத்த இருப்பது குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்பு வசதி, புதிய தொழில்நுட்பம் மற்றும் அனைத்துப் பிரீமியம் வசதிகளையும் கொண்ட சூப்பர்-மினி காரான இந்த  ‘இரண்டாம் தலைமுறை ஆடி-ஏ1’, சிறிய வகை சொகுசு கார்களிலேயே அதிக வசதிகள் கொண்ட காராக இருக்கும் என ஆட்டொமொபைல் ஆர்வலர்கள் கருதுகிறார்கள்.

ஏற்கனவே சிறிய வகை சொகுசு கார் சந்தையில், ஏ1 நல்ல வரவேற்பைப் பெற்றிருப்பதால் ஆடி நிறுவனம் தற்போது கூடுதல் வசதிகளோடு இந்த `இரண்டாம் தலைமுறை ஏ1’ காரை அறிமுகப்படுத்தவுள்ளது. மற்றொரு சிறிய வகை சொகுசு காரான மினி, பழைய ஏ1-ஐ விட இருமடங்கு அதிகம் விற்பனையாவதால், அதைச் சமாளிக்க இந்தக் காரை சந்தையில் இறக்கியுள்ளது ஆடி நிறுவனம்.


5 கதவுகளைக் கொண்ட இக்கார், பழைய மாடலை விட அதிக இட வசதியுள்ளதாக இருக்கும் என ஆடி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் ஆடி நிறுவனம், இக்காரை வேறு எந்த ஆடி கார் மாடலை விடவும் இளைஞர்களைக் கவரும் வண்ணம்  ஸ்டைலாகவும் தயாரித்துள்ளது.

இந்த மாடலில் வழக்கம் போல டீசல் வேரியண்ட் கிடையாது. இதன் இன்ஜின் 94 பிஎச்பி  திறன் கொண்டதாக இருக்கும். மேலும் இந்தக கார் மூன்று சிலிண்டர்கள் கொண்ட 1.0 லிட்டர் இன்ஜின், நான்கு சிலிண்டர்கள் கொண்ட 1.5 லிட்டர் மற்றும் 2.0 லிட்டர் இன்ஜின்களுடன் வெளிவரும்.

2019-ன் இறுதியில் 250 பி.ஹெச்.பி பவர் கொண்ட  ஆடி எஸ்-1 வகை கார் வெளிவரும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. டர்போ சார்ஜ் இன்ஜினுடன் வரப்போகும் எஸ்-1 மாடல் பவரும், ஸ்டைலும் வேற லெவலில் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
First published: June 21, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...