Home /News /automobile /

தீபாவளி ஸ்பெஷல்: இந்தியாவில் அறிமுகமானது ஆடி க்யூ7 - விலை என்ன தெரியுமா?

தீபாவளி ஸ்பெஷல்: இந்தியாவில் அறிமுகமானது ஆடி க்யூ7 - விலை என்ன தெரியுமா?

 ஆடி க்யூ7

ஆடி க்யூ7

ஆடி இந்தியா நிறுவனம் Q7 லிமிடெட் எடிஷனை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்து அறிந்து கொள்ளலாம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
இந்தியர்களின் விருப்பமான பண்டிகையான தீபாவளி விரைவில் வர உள்ளது. இந்த நாளில் மக்கள் புதிய பொருட்களை வாங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். எனவே பண்டிகை கால விற்பனையைக் கருத்தில் கொண்டு, வீட்டு உபயோகப் பொருட்கள் முதல் கார் தயாரிப்பு நிறுவனங்கள் வரை அனைத்தும் தங்களது புத்தம் புதிய புரோடக்ட்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. ஆடி இந்தியா நிறுவனம் புதியதாக க்யூ7 சொகுசு எஸ்யூவி காரின் புதிய லிமிடெட் எடிசனை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்திய மக்கள் பண்டிகை காலங்களில் புதிய கார்களை வாங்க அதிக ஆர்வம் காட்டுவார்கள் என்பதை அறிந்த தற்போது முன்னணி லக்சரி கார் தயாரிப்பு நிறுவனமான ஆடி அதன் க்யூ7 எஸ்யூவி மாடலை விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது. லிமிடெட் எடிசன் என்ற வார்த்தைக்கு ஏற்றார் போல் வெறும் 50 ஆடி க்யூ7 யூனிட்கள் மட்டுமே விற்பனைக்கு உள்ளது. பிரத்யேக பேரிக் பிரவுன் கலரில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ள ஆடி க்யூ7 எஸ்வியூவில், ன்னிங் போர்ட்ஸ், குவாட்ரோ எல்இடி விளக்குகள் மற்றும் சில்வர் நிறத்தில் ஆடி லோகோ வளையங்கள் எனத் தோற்றத்திலும் பல்வேறு மேம்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

2022 ஆடி க்யூ7 லிமிடெட் எடிஷன் காரின் முன்பக்கத்தில் எண்கோண அவுட்லைன் உடன் கூடிய பிளாட் சிங்கிள்-ஃபிரேம் கிரில் மற்றும் புதிய சில் டிரிம் இடம் பெற்றுள்ளது. 19-இன்ச் 5-ஆர்ம் ஸ்டார் ஸ்டைல் ​​​​டிசைன் அலாய் வீல்கள், பளபளப்பான ஸ்டைலிங் பேக்கேஜுடன் ஒருங்கிணைந்த வாஷர் முனைகளுடன் இணைக்கப்பட்ட விண்ட்ஷீல்ட் வைப்பர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

டேஸ்போர்டில் இரண்டு பெரிய தொடுதிரை அமைப்புகளைக் கொண்ட டிஜிட்டல் ஆபரேட்டிங் கான்சப்ட், ஓட்டுனரின் மிக எளிமையான பயன்பாட்டிற்கு ஏற்ப ரேப்பரவுண்ட் காக்பிட் வடிவத்தில் கேபின் அமைக்கப்பட்டுள்ளது. சொகுசான ஆடி காரில் 4 ஏர் கண்டிஷனருக்கு 8.6-இன்ச் எம்எம்ஐ டச் கண்ட்ரோல் பேனல்கள் பொருத்தப்பட்டுள்ளது. இது ஏர் அயனிசர் மற்றும் நறுமணப்படுத்தும் ஆப்ஷன்களுடன் வருகிறது. Q7 லிமிடெட் எடிஷன் கீலெஸ் நுழைவுக்காக கம்ஃபோர்ட் கீ மற்றும் சைகை அடிப்படையிலான எலெக்ட்ரிக் டெயில்கேட் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

லிமிடெட் எடிஷனான ஆடி க்யூ 7 எஸ்யுவியில் 48 வோல்ட் மைல்ட்-ஹைப்ரிட் அமைப்புடன் 3.0L V6 TFSI பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் அதிகபட்சமாக 340 எச்பி மற்றும் 500 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. க்யூ 7 எஸ்யுவியின் லிமிடெட் எடிஷனானது, 0-100kmph வேகத்தை வெறும் 5.9 வினாடிகளில் அடையக்கூடியது.

Also Read : சரக்கு போக்குவரத்தில் முன் எப்போதும் இல்லாத சாதனையை செய்த இந்திய ரயில்வே துறை!

ஆடி வழக்கமான குவாட்ரோ ஆல்-வீல் டிரைவ் சிஸ்டம் மற்றும் அடாப்டிவ் ஏர் சஸ்பென்ஷன் உள்ளது. ஆடி ட்ரைவ் செலக்ட் மோட்டில் ஆட்டோ, கம்பர்டபுள், டைனமிக், எபிசியன்ஸி, ஆஃப்-ரோடு, ஆல்-ரோடு மற்றும் தனிநபர் என ஏழு டிரைவிங் முறைகள் இடம் பெற்றுள்ளன. ஆடி நிறுவனத்தின் புதிய லிமிடெட் எடிசன் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.88,08,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Published by:Janvi
First published:

Tags: Audi, Car, Diwali

அடுத்த செய்தி