ஹோம் /நியூஸ் /ஆட்டோமொபைல் /

குறிப்பிட்ட வாகன மாடல்களின் விலையை ரூ.22 லட்சம் வரை உயர்த்திய Audi - விவரங்கள் உள்ளே!

குறிப்பிட்ட வாகன மாடல்களின் விலையை ரூ.22 லட்சம் வரை உயர்த்திய Audi - விவரங்கள் உள்ளே!

ஆடி

ஆடி

இறுதியாக நிறுவனம் தயாரித்த மின்சார வாகனங்களான e-Tron 50 மற்றும் e-Tron 55 ஆகியவற்றின் விலை முறையே ரூ.1 லட்சம் மற்றும் ரூ. 1.15 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

சொகுசு செடான் வாகனங்களை தயாரிக்கும் முன்னணி நிறுவனமான ஆடி, இந்தியாவில் அதன் தேர்ந்தெடுக்கப்பட்ட சில மாடல்களுக்கான விலையை சமீபத்தில் உயர்த்தியிருப்பதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி ஆடி ஏ4, ஏ6, க்யூ8, ஆர்எஸ்க்யூ8, ஆர்எஸ்7 ஸ்போர்ட்பேக், ஆர்எஸ்5, எஸ்5 ஸ்போர்ட்பேக் மற்றும் இ-ட்ரான் ரேஞ்ச் ஆகிய மாடல்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக கார்வாலே வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விலை உயர்வை கண்ட ஆடி-யின் வாகன மாடல்களில், ஆடி ஆர்எஸ்7 தான் மிக அதிக விலை உயர்வைக் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது இந்த ஒரு மாடலின் விலை மட்டும்

ரூ. 22.12 லட்சம் உயர்ந்துள்ளது. இதையடுத்து ஆடி ஆர்எஸ்5 ஸ்போர்ட்பேக்கின் விலை ரூ.1.6 லட்சம் உயர்ந்துள்ளது. அதன்படி ஆடி ஆர்எஸ்5 காரின் விலை எக்ஸ்ஷோரூம் மதிப்பில் இப்போது ரூ.1.05 கோடியாக விற்பனைக்கு வந்துள்ளது.

ஆடி RS5 மாடலுடன் ஒப்பிடும் போது குறைவான செயல்திறன் சார்ந்ததாக ருதப்படும் S5 ஸ்போர்ட்பேக் மாடலின் விலை முதன் முதலாக உயர்வை சந்தித்துள்ளது. கடந்த மார்ச் ​​மாதம் இந்த வாகனம் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கார் இப்போது ரூ. 81.29 லட்சம் என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதாவது, அதன் அசல் விலையில் ரூ. 80,000 உயர்ந்துள்ளது.

இதுதவிர, ஜெர்மனியை தலைமையிடமாகக் கொண்ட ஆடி நிறுவனத்தின் ஆரவாரமான SUV வரம்பைப் பற்றி பேசுகையில், Q8 செலிப்ரேஷன் வேரியண்ட்டின் விலை ரூ.1.01 லட்சம் அதிகரித்துள்ளது. அதேபோல, எஸ்5 TFSI வேரியண்டின் விலை இப்போது ரூ. 1.35 லட்சம் அதிகரித்துள்ளது. செயல்திறனை மையமாகக் கொண்ட RSQ8 இப்போது அதன் விலையில் ரூ. 2.05 லட்சம் உயர்வை சந்தித்துள்ளது.

Also read... யாரிஸ் செடானுக்கு மாற்றாக அறிமுகம் ஆகும் டொயோட்டா பெல்டா பற்றிய புதிய தகவல்கள்!

அதேபோல ஆடி A4 மற்றும் ஆடி A6 ஆகியவை இந்திய சந்தையில் காணப்படும் மிகவும் பொதுவான வாகன மாடல்கள் ஆகும். மேலும் இந்த இரண்டு வாகனங்களும் இரண்டு வேரியண்ட்டுகளில் வழங்கப்படுகின்றன. அதாவது, பிரீமியம் மற்றும் டெக்னாலஜி ஆகும். அதன்படி ஆடி ஏ4 மாடலின் பிரீமியம் வேரியண்ட்டின் விலை ரூ. 50,000 உயர்ந்துள்ளது. ஆனால் டெக்னாலஜியின் விலையில் எந்த ஒரு மாற்றமும் செய்யப்படவில்லை. மறுபுறம், Audi A4 ஐ விட அளவில் முக்கியத்துவம் வாய்ந்த A6 மாடலின், பிரீமியம் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய இரண்டு வேரியண்ட்டுகளின் விலையும் முறையே ரூ. 70,000 மற்றும் ரூ. 84,000 என அதிகரித்துள்ளது.

இறுதியாக நிறுவனம் தயாரித்த மின்சார வாகனங்களான e-Tron 50 மற்றும் e-Tron 55 ஆகியவற்றின் விலை முறையே ரூ.1 லட்சம் மற்றும் ரூ. 1.15 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி e-Tron மாடல் ரேன்ஜின் ஆரம்ப விலை இப்போது திருத்தப்பட்ட விலைகளின்படி, ஒரு கோடிக்கு மேல் தொடங்குகிறது. இந்த வாகனங்களின் விலை உயர்வுக்கான காரணங்கள் குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Audi, India