• HOME
  • »
  • NEWS
  • »
  • automobile
  • »
  • ஆடி இ-டிரான் கார் ஜூலை 22ல் அறிமுகம் - பிரமிக்க வைக்கும் அம்சங்கள்!

ஆடி இ-டிரான் கார் ஜூலை 22ல் அறிமுகம் - பிரமிக்க வைக்கும் அம்சங்கள்!

ஆடி இ - டிரான் கார் ஜூலை 22ல் அறிமுகம் - பிரமிக்க வைக்கும் அம்சங்கள்!

ஆடி இ - டிரான் கார் ஜூலை 22ல் அறிமுகம் - பிரமிக்க வைக்கும் அம்சங்கள்!

ஆடி இ-டிரானில் ஆடி இ-டிரான் மற்றும் ஆடி இ-டிரான் ஸ்போட்பேக் என இரண்டு விதமான பாடி ஸ்டைல்கள் உள்ளன

  • Share this:
ஆடி நிறுவனத்தின் லேட்டஸ் தயாரிப்பான ஆடி இ-டிரான் கார் இந்தியாவில் ஜூலை 22 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது.

பென்ஸ், ஜாக்குவார் என சொகுசு கார்கள் வரிசையில் ஆடி கார்களுக்கு தனி மதிப்பு உண்டு. இந்தக் காரை ஒருமுறையாவது வாங்கி ஓட்டிவிட வேண்டும் என நினைப்பவர்கள் நிறைய பேர் இருக்கின்றனர். அவர்களின் ஆசையை மேலும் அதிகரிக்கும் விதமாக ஆடி நிறுவனம் புதிய கார் ஒன்றை இந்தியாவில் ஜூலை 22 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. ஆடி இ-டிரான் என்ற மாடல் பல்வேறு புதிய அம்சங்களுடன் களத்திற்கு வரவுள்ளது.

ஆடி இ-டிரானில் ஆடி இ-டிரான் மற்றும் ஆடி இ-டிரான் ஸ்போட்பேக் என இரண்டு விதமான பாடி ஸ்டைல்கள் உள்ளன. ஆடி இ-டிரான் வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு அதில் இரு விதமான வேரியண்டுகள் உள்ளன. ஆடி இ-டிரான் 50, ஆடி இ-டிரான் 55 என இந்த இரு வேரியண்டுகளில் பிடித்த ஒன்றை தேர்தெடுத்துக் கொள்ளலாம். ஸ்போர்ட்ஸ் பேக் வேண்டும் என விரும்புபவர்களுக்கு ஆடி இ-டிரான் 55 வேரியண்டிலும் கிடைக்கும்.

ஆடி இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கும் பல்பீர்சிங் தில்லான் இதுகுறித்து பேசும்போது, இந்தியாவில் எலக்டிரிக் வாகனங்கள் பயன்பாடு ஊக்குவிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். இந்தியாவின் நீண்டகால இலக்கை அறிந்து ஆடி இந்தியா நிறுவனம், ஆடி நிறுவனத்தில், எஸ்.யூ.வி மாடலில் உள்ள எலக்டிரிக் வாகனங்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டோம், அதன்படி ஆடி இ-டிரான் எஸ்.யூ.வி கார்கள் இரண்டு விதமான வேரியண்டுகளில் ஜூலை 22 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அதனுடன் ஆடி இ-டிரான் ஸ்போர்ட்ஸ்பேக் 55 காரும் அறிமுகப்படுத்த இருப்பதாக பல்பீர்சிங் கூறியுள்ளார்.

இந்தியாவில் எஸ்.யூ.வி மாடல்கள் அதிக விற்பனையைக் கொண்டிருப்பதாகவும், அதனை கருத்தில் கொண்டு ஆடி நிறுவனம் இந்தக் கார்களை விற்பனைக்கு கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார். தங்களின் எதிர்பார்ப்பைப்போல, வாடிக்கையாளர்களின் வரவேற்பையும் ஆடி இ-டிரான் எஸ்.யூ.வி கார்கள் பெறும் என நம்பிக்கை இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இந்தியா தற்போது எலக்டிரிக் கார்களின் ஹப்பாக மாறி வருவதாகவும் அவர் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். ஆடி இ-டிரான் 55 மற்றும் ஆடி இ-டிரான் ஸ்போர்ட்பேக் 55 கார்களில் 95KW பேட்டரி உள்ளது.

359 முதல் 484 கிலோ மீட்டர் தொலைவு வரை இதில் பயணிக்க முடியும். இந்த இரண்டு கார்களும் 300 kW ஆற்றலையும், 664 nm-டர்க்கியூவையும் கொண்டுள்ளன. ஆடி இ-டிரான் 50 வேரியண்டில் 71 Kw பேட்டரி உள்ளது. இதில் 264 முதல் 379 கிலோ மீட்டர் வரை பயணிக்கலாம். ஆடி இ-டிரான் 50 போஸ்ட் 230 kw பவர் மற்றும் 540 என்.எம் டர்க்கியூவையும் கொண்டுள்ளன. ஆடி இ-டிரான் கார்களுக்கு இந்தியாவில் பெரும் வரவேற்பு இருக்கும் என நம்புவதாக தெரிவித்துள்ள பல்பீர்சிங், வரும் காலங்களுக்கு ஏற்ப கார்களை ஆடி நிறுவனம் வடிவமைக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

ஆடி இ-டிரான் கார்களை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் அருகில் இருக்கும் ஆடி நிறுவனத்தின் டீலர்களிடம் தற்போது முன்பதிவு செய்யலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Esakki Raja
First published: