• HOME
  • »
  • NEWS
  • »
  • automobile
  • »
  • ஆடி நிறுவனத்தின் எலக்டிரிக் கார்கள் அறிமுகம் - விலை என்ன தெரியுமா?

ஆடி நிறுவனத்தின் எலக்டிரிக் கார்கள் அறிமுகம் - விலை என்ன தெரியுமா?

ஆடி கார்

ஆடி கார்

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆடி நிறுவனத்தின் எலக்டிரிக் கார்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

  • Share this:
ஜெர்மனி கார் நிறுவனமான ஆடி கார்களுக்கு, மோட்டார் சந்தையில் எப்போதும் வரவேற்பு இருந்து கொண்டே இருக்கும். அண்மைக் காலமாக எலக்டிரிக் கார்களுக்கு மவுசு எகிறியதைத் தொடர்ந்து ஆடி நிறுவனமும் எஸ்.யூ.வி மாடலில் எலக்டிரிக் கார்களை விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி ஆடி இ-டிரான் 50, ஆடி இ-டிரான் 55, ஆடி ஸ்போர்ட்பேக் கார்கள் இந்தியாவில் விலையுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஆடி இ-டிரான் 50 கார் 99 லட்சத்து 99 ஆயிரம் ரூபாய் விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆடி இ-டிரான் 55 கார்கள் 1,16,15, 000 ரூபாய் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஸ்போர்ட்ஸ் பேக் காருக்கு 1,17,66,000 ரூபாய் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டே இந்தக் கார்கள் இந்தியாவில் அறிமுகம் செய்ய ஆடி நிறுவனம் திட்டமிட்டிருந்த நிலையில், இந்தியாவில் பரவிய கொரோனா அலை காரணமாக அறிமுக நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்பட்டது. ஒருவழியாக தற்போது ஆடி எலக்டிரிக் கார்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Also Read : ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் டீலர்ஷிப்களில் இல்லாமல் நேரடி ஹோம் டெலிவரி மூலம் விநியோகம்

ஆடி இ-டிரான் 50 மற்றும் ஆடி இ-டிரான் ஸ்போர்ட்பேக் 55 கார்களில் 95KW பேட்டரி உள்ளது. 359 முதல் 484 கிலோ மீட்டர் தொலைவு வரை இதில் பயணிக்க முடியும். இந்த இரண்டு கார்களும் 300 kW ஆற்றலையும், 664 nm-டர்க்கியூவையும் கொண்டுள்ளன. ஆடி இ-டிரான் 50 வேரியண்டில் 71 Kw பேட்டரி உள்ளது. இதில் 264 முதல் 379 கிலோ மீட்டர் வரை பயணிக்கலாம். ஆடி இ-டிரான் 50 போஸ்ட் 230 kw பவர் மற்றும் 540 என்.எம் டர்க்கியூவையும் கொண்டுள்ளன.

பாதுகாப்பு அம்சங்களும் மேம்படுத்தப்பட்டுள்ளன. 8 ஏர் பேக்குகள் கொடுக்கப்பட்டு, ஆபத்துக் காலங்களில் சீட்டில் அமர்ந்திருப்பவர்கள் அனைவரையும் மூடிக்கொள்ளும் வகையில் சென்சார்களும் கொடுக்கப்பட்டுள்ளது. அவசர காலத்தில் பிரேக்கிங் செயல்முறைக்கு ஏற்ப சீட் பெல்ட்கள் இறுகுவதுடன், சீட் நிலையும் அதற்கேற்ப அட்ஜெஸ்ட் செய்து கொள்ளும் அம்சம் இடம்பெற்றுள்ளது. டிஜிட்டல் மேட்டிரிக்ஸ் எல்.இ.டி விளக்குகள், பானரோமிக் சன்ரூப், ஆரஞ்சு நிற பிரேக் கேலிப்பர்கள், 20-இன்ச் 5 ஸ்போக் அலாய் வீல்கள், எல்.இ.டி. டெயில் லைட்களும் உள்ளன.

Also Read :  ஆடிRS3 ஹேட்ச்பேக், செடான் வாகனங்கள்..! - ஆகஸ்டில் விற்பனையை தொடங்குகிறது

சர்வீஸ் வாரண்டி 5 ஆண்டுகளும், ஹை வோல்டேஜ் பேட்டரிக்கு 8 ஆண்டுகள் அல்லது 1,60,000 கிலோ மீட்டர் வரை வாரண்டி கொடுக்கப்படுகிறது. நீட்டிக்கப்பட்ட வாரண்டி 2+2 அல்லது 2+3 ஆண்டுகளாகவும், மீண்டும் பைபேக் ஆப்சன் வாங்கிய தேதியில் இருந்து 3 ஆண்டுகளுக்கு கொடுக்கப்படுகிறது. ஆடி இந்தியா தலைவர் பல்பீர் சிங் பேசும்போது, ஆடி இந்தியா புதிய பிராண்டுகளை அறிமுகப்படுத்தியதில் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்தார். சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பு கொடுப்பதில் ஆடி நிறுவனமும் பங்கேற்றிருப்பது சந்தோஷமாக இருப்பதாக கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vijay R
First published: