'எமிஷன் டெஸ்ட்' மோசடி: ஆடி கார் நிறுவனத்தின் சி.இ.ஒ. அதிரடி கைது!

news18
Updated: June 19, 2018, 11:21 AM IST
'எமிஷன் டெஸ்ட்' மோசடி: ஆடி கார் நிறுவனத்தின் சி.இ.ஒ. அதிரடி கைது!
ஆடி கார் நிறுவனத்தின் சிஇஓ ரூபர்ட் ஸ்டாட்லர்
news18
Updated: June 19, 2018, 11:21 AM IST
அமெரிக்காவில் இறுக்குமதி செய்யப்படும் ஆடி கார்களில் 'எமிஷன் டெஸ்ட்' மோசடியில் ஈடுபட்டதாக அந்நிறுவனத்தின் சி.இ.ஓ-வான ரூபெர்ட் ஸ்டெட்லர் கைது செய்யப்பட்டுள்ளார். 

ஜெர்மனியில் தயாரிக்கப்படும் உலகப்புகழ் பெற்ற கார் நிறுவனங்களில் ஒன்று போக்ஸ்வேகன். வோல்ஸ்பர்க் நகரை தலைமையகமாக கொண்ட இந்த நிறுவனம் பல நாடுகளுக்கு தங்களுடைய கார்களை ஏற்றுமதி செய்து வருகிறது.  ஆடி, பென்ட்லே, புகாட்டி, லம்போர்கினி, போர்சே, சியட், ஸ்கோடா உள்ளிட்ட பல கார்களை இந்நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்நிலையில் ஒவ்வொரு நாட்டின் தட்பவெட்ப நிலை, பயன்பாடு மற்றும் சாலைகளுக்கு ஏற்ப வாகனங்களை தயார் செய்து இந்நிறுவனம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதில் முக்கியமான விஷயமாக கருதப்படுவது  'எமிஷன் டெஸ்ட்' ஆகும். அதாவது வாகனங்களிலிருந்து வெளியேறும் புகையின் அளவு. குறிப்பிட்ட அளவு மட்டுமே வாகனங்கள் புகையை வெளியிட வேண்டும், இந்த அளவு நாடுகளின் சட்ட திட்டங்களுக்கு ஏற்றார் போல வேறுபடும்.


ஆனால் அமெரிக்காவிற்கு இறுக்குமதி செய்யும் கார்களில் சாதுர்யமாக மென்பொருள் ஒன்றை இன்ஸ்டால் செய்த ஆடி நிறுவனம், டெஸ்ட்டின் போது குறைந்தளவு புகைகளை வெளியிடுவது போல காரில் ப்ரோகிராம் செய்து வைத்ததாகவும் புகார்கள் எழுந்தன. மேலும் அதனை சோதனை செய்து பார்த்தபோது, ஓடும் போது 40 சதவீதம் வரை அதிக புகை வாகனத்திலிருந்து வெளியாவது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை கடந்த 2015ம் ஆண்டு போக்ஸ்வேகன் நிறுவனம் ஒப்புக்கொண்டது. இதுதொடர்பான விசாராணை தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், அந்நிறுவனத்தின் சி.இ.ஓ-வான ரூபெர்ட் ஸ்டெட்லரை போலீசார் கைது செய்தனர்.
First published: June 19, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...