Home /News /automobile /

அதிகரிக்கும் தேவை.! ஆண்டுக்கு 1 மில்லியன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை உற்பத்தி செய்ய Ather Energy இலக்கு

அதிகரிக்கும் தேவை.! ஆண்டுக்கு 1 மில்லியன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை உற்பத்தி செய்ய Ather Energy இலக்கு

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

e-scooters : எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் தேவை அதிகரிப்பிற்கு மத்தியில் வருவாயில் இந்தியாவின் முன்னணி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனமான ஏதர் எனர்ஜி (Ather Energy), ஆண்டுக்கு 1 மில்லியன் அதாவது 10 லட்சம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்து உள்ளது.

மேலும் படிக்கவும் ...
எரிபொருள் விலை உயர்வு மற்றும் சுற்றுப்புற சூழலை பாதுகாப்பது உள்ளிட்ட பல காரணிகள் காரணமாக நாட்டில் எலெக்ட்ரிக் வாகனங்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் தேவை அதிகரிப்பிற்கு மத்தியில் வருவாயில் இந்தியாவின் முன்னணி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனமான ஏதர் எனர்ஜி (Ather Energy), ஆண்டுக்கு 1 மில்லியன் அதாவது 10 லட்சம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்து உள்ளது.

கடந்த ஆண்டு இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விற்பனை வழக்கத்தை விட 5 மடங்குக்கு மேல் அதிகரித்தது. எரிபொருள் விலை ஏற்றம் வாகனங்கள் வாங்குபவர்களை மாற்று வழிகளைத் தேடத் தூண்டியது. தவிர மாநில அரசுகள் வழங்கும் மானியங்கள் எலெக்ட்ரிக் மற்றும் பெட்ரோல் மாடல்களுக்கு இடையேயான விலை இடைவெளியை குறைத்தது. இதனிடையே ஸ்டார்ட்அப் நிறுவனமான Ather Energy-யின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாகியான தருண் மேத்தா, அடுத்த 3 ஆண்டுகளில் ஆண்டு உற்பத்தி திறனை ஒரு மில்லியன் ஸ்கூட்டர்களாக உயர்த்த திட்டமிட்டு உள்ளதாக ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தார்.

டைகர் குளோபல் மற்றும் இந்திய பைக் தயாரிப்பாளரான Hero MotoCorp-ஐ முதலீட்டாளர்களாகக் கருதும் Ather Energy, கடந்த 2013-ல் தொடங்கப்பட்டதில் இருந்து சுமார் ரூ.12 பில்லியன்களை ($160 மில்லியன்) திரட்டியுள்ளது. மேலும் நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தருண் மேத்தா ஒரு பேட்டியில் கூறினார். அதிக மூலதனத்தை திரட்டி பிராண்டை வளர்ப்பதில் கவனம் செலுத்துவதே எங்கள் திட்டமாக இருந்தது. ஆனால் எலெக்ட்ரிக்கிற்கு மாறி வரும் நுகர்வோரின்விகிதம் மற்றும் விநியோகச் சங்கிலி மற்றும் திறன்களை அதிகரிக்க வேண்டிய வேகம் ஒரு வருடத்திற்கு முன்பு நாங்கள் நினைத்ததை விட தற்போது மிக வேகமாக உள்ளது என்றும் தருண் மேத்தா கூறி இருக்கிறார்.

மேலும் படிக்க ..  இந்த ஆண்டில் 8 புதிய மாடல் பைக்குகளை வெளியிடும் ஹார்லி டேவிட்சன்

Ather Energy நிறுவனம் திரட்ட திட்டமிட்டுள்ள நிதி குறித்து கருத்து தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார். எனினும் சுமார் 133 மில்லியன் டாலர் நிதியை திரட்ட Ather திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதில் ஏற்கனவே Hero MotoCorp நிறுவனத்திடம் இருந்து சுமார் 56 மில்லியன் டாலர்களை Ather மூலதனமாக பெற்றுள்ளதாகவும் அந்த தகவல் தெரிவிக்கிறது.



இதனிடையே தங்களது திட்டம் பற்றி விரிவாக கூறி இருக்கும் தருண் மேத்தா, எங்களது ஆண்டு உற்பத்தி திறனை 2022 ஆம் ஆண்டின் இறுதிக்குள் 400,000 இலிருந்து ஒரு மில்லியன் ஸ்கூட்டர்களாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளளோம், இந்தியா முழுவதும் 5,000 ஃபாஸ்ட் சார்ஜிங் ஸ்டேஷன்களை நிறுவவும், புதிய தயாரிப்புகளை உருவாக்கவும், எங்கள் நெட்வொர்க்கை 600 ஸ்டோர்களாக அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளளோம் என்று மேத்தா கூறி இருக்கிறார்.

எங்கள் நிறுவனம் தற்போது ஒரு மாதத்திற்கு சுமார் 5,000 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தயாரித்து அதன் சொந்த லித்தியம்-அயன் பேட்டரி பேக்கை உருவாக்கி வருகிறது. நடப்பாண்டில் உற்பத்தியை ஒரு மாதத்திற்கு 20,000 ஸ்கூட்டர்களாக விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாகவும் மேத்தா கூறி இருக்கிறார்.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Electric bike

அடுத்த செய்தி