Home /News /automobile /

Ather Energy: இ.ஸ்கூட்டருக்கு அதிகரிக்கும் வரவேற்பு.. ஓசூரில் 2வது ஆலையை அமைக்கும் ஏத்தர்

Ather Energy: இ.ஸ்கூட்டருக்கு அதிகரிக்கும் வரவேற்பு.. ஓசூரில் 2வது ஆலையை அமைக்கும் ஏத்தர்

ஏத்தர் நிறுவனம்

ஏத்தர் நிறுவனம்

 Ather 450 Plus மற்றும் Ather 450X இ.ஸ்கூட்டர்களுக்கு அதிக டிமாண்ட் இருப்பதால் ஓசூரில் (Hosur) தனது 2வது உற்பத்தி ஆலையை தொடங்க உள்ளதாக ஏத்தர் எனர்ஜி( Ather energy) நிறுவனம் அறிவித்துள்ளது.

    இ.ஸ்கூட்டர் தயாரிப்பில் முன்னணியில் உள்ள ஏத்தர் நிறுவனம், ஓசூரில் தனது 2வது ஆலையை அமைக்கப்போவதாக தெரிவித்துள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு 4 லட்சம் இ.ஸ்கூட்டர்களை அந்நிறுவனத்தால் உற்பத்தி செய்ய முடியும்.

    பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்துகொண்டே செல்லும் நிலையில், மக்களின் புதிய தேர்வாக இ.ஸ்கூட்டர்கள் உள்ளன. இதனால் செலவு குறைவும் என்று கூறப்படும் நிலையில் பலரும் இ.ஸ்கூட்டர்களை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர்.  இ.ஸ்கூட்டருக்கான தேவை அதிகரித்து வருவதால் Ather Energy, ஓலா (Ola) ஆகிய நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தங்களது ஆலைகளை அமைத்து முழு வீச்சில் வாகனங்களை உற்பத்தி செய்து வருகின்றனர்.

    ஏத்தர் எனர்ஜி நிறுவனம் ஓசூரில் கடந்த பிப்ரவரி மாதம்  1.23 லட்சம் சதுர அடி பரப்பளவில் ரூ.635 கோடி முதலீட்டில் இந்தியாவின் முதல் நவீன மின்சார இருசக்கர வாகனம் தயாரிக்கும் தொழிற்சாலையை நிறுவியது.  தற்போது Ather 450 Plus மற்றும் Ather 450X  இ.ஸ்கூட்டர்களுக்கு அதிக டிமாண்ட் இருப்பதால் ஓசூரில் தனது 2வது உற்பத்தி ஆலையை தொடங்க உள்ளதாக ஏத்தர் எனர்ஜி நிறுவனம் அறிவித்துள்ளது.

    தற்போது  ஆண்டுக்கு 1.20 லட்சம் இ.ஸ்கூட்டர்களை தயாரிக்கும் அளவில் ஏத்தர் நிறுவனத்தில் திறன் உள்ளது.  புதிய ஆலை செயல்பாட்டுக்கு வரும்போது, இந்த திறன் ஆண்டுக்கு 4 லட்சம் இ.ஸ்கூட்டர்களாக அதிகரிக்கும்.  2வது ஆலை அடுத்த ஆண்டு செயல்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக அந்நிறுவனம் 650 கோடி ரூபாயை முதலீடு செய்யவுள்ளது.

    Read: இந்தியாவில் முதன்முதலாக காற்று-சோலார் கலப்பின ஆற்றலைப் பயன்படுத்தும் எம்.ஜி மோட்டார்!


    ஏதர் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிய ஆலை லித்தியம்-அயன் பேட்டரி தயாரிப்பில் கவனம் செலுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2020ம் ஆண்டு நவம்பருக்கு பின்னர் விற்பனை 20 சதவீதம் அதிகரித்துள்ளது என்றும் நடப்பு ஆண்டின் ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலத்தில்  Ather 450 Plus மற்றும் Ather 450X இ.ஸ்கூட்டர்களுக்கான முன்பதிவு நான்கு மடங்கு அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

    Also Read: இந்தியாவில் அடுத்த 6 மாதங்களில் 3 எலெக்ட்ரிக் கார்களை களமிறக்க உள்ள BMW

    ஏதர் நிறுவனத்தின் சி.இ.ஓ தருண் மேத்தா இது குறித்து கூறுகையில், தற்போது உள்ள ஆலை முழு வீச்சில் வாகன தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது.  அடுத்த ஆண்டுவாக்கில் இந்தியாவின் முன்னணி இ.ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனமாக ஏத்தர் எனர்ஜி மாறும் என்று குறிப்பிட்டார்.  நாடு முழுவதும் தற்போது 200 இடங்களில் ஏத்தர் சார்ஜிங்-போர்ட் அமைந்துள்ளன. ஏத்தர் ஏற்கனவே Hero MotoCorp உடன் இணைந்து, இந்தியாவின் முன்னணி இரு சக்கர வாகன உற்பத்தியாளரான Heroவின் வரவிருக்கும் மின்சார இரு சக்கர வாகனங்களில் வேகமாக சார்ஜ் செய்யும் அமைப்புக்கு உதவி வருகிறது.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Automobile, Electric bike

    அடுத்த செய்தி