Home /News /automobile /

புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தியுள்ள ஏதர் எனர்ஜி

புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தியுள்ள ஏதர் எனர்ஜி

காட்சி படம்

காட்சி படம்

பெங்களூரைச் சேர்ந்த EV ஸ்டார்ட்-அப் நிறுவனமான ஏதர் எனர்ஜி (Ather Energy), சமீபத்தில் 450X Gen 3 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது,

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு மற்றும் சுற்றுப்புற சூழலை பாதுகாப்பது உள்ளிட்ட பல காரணங்கள் காரணமாக எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக புதிதாக டூவீலர் வாங்க விரும்பும் பலர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் பக்கம் தங்கள் கவனத்தை திருப்பி வருகின்றனர்.

இந்நிலையில் பெங்களூரைச் சேர்ந்த EV ஸ்டார்ட்-அப் நிறுவனமான ஏதர் எனர்ஜி (Ather Energy), சமீபத்தில் 450X Gen 3 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது, இதில் அதிக ரேஞ்ச், பெரிய பேட்டரி மற்றும் முந்தைய மாடலை விட அதிக செயல்பாட்டு புதுப்பிப்புகள் உள்ளிட்ட சுவாரஸ்யமான அப்டேட்கள் செய்யப்பட்டு உள்ளன.

மேலும் Ather Energy நிறுவனம் 450 Plus ஸ்கூட்டரையும் அப்டேட் செய்து உள்ளது. ஜென் 3 450X மற்றும் 450 பிளஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை முறையே ரூ.1.39 லட்சம் மற்றும் ரூ.1.17 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) ஏதர் எனர்ஜி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. 450X ஸ்கூட்டரானது டெல்லியில் முன்பை விட ரூ.1,000 அதிகமாக உள்ளது, மேலும் இந்தியா முழுவதும் சராசரியாக இந்த ஸ்கூட்டரின் விலையில் ரூ.5,000 அதிகரிப்பு உள்ளது. ஆனால் விலைவாசி உயர்வு நகருக்கு நகரம் மாறுபடும்.

450X Gen 3 ஸ்கூட்டரானது பெயர் குறிப்பிடுவது போல நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் பேட்டரி மூலம் இயங்கும் மூன்றாம் தலைமுறை மாடலாக வெளிவருகிறது. மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் மற்றும் பிற முக்கிய மேம்பாடுகளுடன் புதிய ஸ்கூட்டர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சமீபத்திய அப்டேட்ஸ்களுடன் Ather 450X Gen 3 ஸ்கூட்டரானது TVS iQube 2022 மற்றும் Ola S1 Pro போன்ற மற்ற அதிவேக ஸ்கூட்டர்களுடன் அதன் போட்டியை புதுப்பித்து கொண்டுள்ளது. Gen 3 Ather 450X மற்றும் 450 Plus ஆகிய ஸ்கூட்டர்கள் பழைய 2.9kWh யூனிட்டிற்கு மாறாக, பெரிய 3.7kWh லித்தியம்-அயன் பேட்டரி பேக்கை பெறுகின்றன. இந்த பேட்டரி முந்தைய தலைமுறை ஸ்கூட்டரில் இருந்ததை விட 25% பெரியது, இது ARAI- சான்றளிக்கப்பட்ட 146 கிலோமீட்டர் ரேஞ்சையும், 105 கிமீ ட்ரூ ரேஞ்சையும் வழங்குகிறது.

also read : இந்தியாவில் இன்னும் டெலிவரி செய்யப்பட வேண்டிய மஹிந்திரா SUV-க்களின் எண்ணிக்கை சுமார்1.43 லட்சம்!

அப்டேட் செய்யப்பட்டுள்ள 450X ஸ்கூட்டரானது Ride Mode-ல் 85 கிமீ மற்றும் Eco Mode-ல் 105 கிமீ ரேஞ்சை தரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் இதே ஸ்கூட்டர் Ride Mode-ல் 70 கிமீ, Eco Mode-ல் 85 கிமீ மைலேஜை தந்தன. மறுபுறம் அப்டேட்டட் ஸ்கூட்டரான 450 Plus, Ride Mode-ல் 70 கிமீ (முன்பை விட 10 கிமீ கூடுதல்) மற்றும் Eco Mode-ல் 85 கிமீ (முன்பை விட 15 கிமீ கூடுதல்) ரேஞ்சை பெறுகிறது. Ather Energy-ன் இணை நிறுவனர் & தலைமை நிர்வாக அதிகாரியான தருண் மேத்தா கூறுகையில், “கடந்த 2020-ல் அறிமுகப்படுத்தப்பட்ட எண்கள் 450X Gen 2, இந்திய EV சந்தையை உற்சாகமாக்கியது மற்றும் அதன் நம்பகமான செயல்திறன் புதிய அளவுகோலை அமைத்தது.

தற்போது 450X Gen 3-ன் அறிமுகம் மூலம் செயல்திறன் அளவுருக்களை இரட்டிப்பாக்கி, அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளோம்" என்றார். 450X Gen 3 ஆனது ‘Smart EcoTM Mode-ஐ பெறுகிறது, இது ரைடர்களை Ride mode-ல் பயணத்தை அனுபவிக்க அனுமதிக்கும் அதே நேரத்தில் Eco’mode-ன் ரேஞ்சை வழங்குகிறது. அப்டேட் செய்யப்பட்ட இந்த வெர்ஷன் Warp, Sport, Ride, SmartEco மற்றும் Eco ஆகிய 5 ரைட் மோட்ளை வழங்கும்.

 
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Electric bike

அடுத்த செய்தி