விற்பனை சரிவு: 15 நாட்கள் உற்பத்தி நிறுத்தத்தை அறிவித்தது அசோக் லேலேண்ட்

விற்பனை சரிவு: 15 நாட்கள் உற்பத்தி நிறுத்தத்தை அறிவித்தது அசோக் லேலேண்ட்
  • Share this:
வாகன விற்பனையில் ஏற்பட்ட சரிவையடுத்து இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு தொழிற்சாலைகளில் 15 நாட்களுக்கு வாகன உற்பத்தியை நிறுத்தி வைக்கப் போவதாக அசோக் லேலண்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஆட்டோமொபைல் துறை வீழ்ச்சியால் பல நிறுவனங்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ளன. இதில் கார் நிறுவனங்கள் அதிரடி தள்ளுபடிகளை அறிவித்து வருகிறது . ஆனால் அசோக் லேலண்ட் நிறுவனத்தின் வாகன விற்பனை கணிசமாக குறைந்துள்ளது.

இதனால் இலகு ரக வாகனத்தின் மொத்த விற்பனை 69 சதவீதம் குறைந்து 4035 யூனிட்களாக உள்ளது. கடந்தாண்டு இதே மாதத்தில் 13056 யூனி்ட்களாக இருந்தது. தொடர் நஷ்டத்தை தடுக்க அந்நிறுவனம் முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறது.


First published: October 6, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்