நொய்டாவில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவில் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன தயாரிப்பாளர்கள் பல்வேறு புதிய மாடல்களை அறிமுகம் செய்து அசத்தி வருகிறார்கள். அந்த வரிசையில் இந்தியாவின் பிரபலமான கனரக வாகன தயாரிப்பு நிறுவனமான அசோக் லேலண்ட் புத்தம் புதிய 12 சீட்டர் சிஎன்ஜியால் இயங்கும் மினி பேருந்தை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இதோடு சேர்த்து அசோக் லேலண்ட் நிறுவனம் 7 அட்வான்ஸ்டு புதிய வாகன மாடல்களைக் காட்சிப்படுத்தியுள்ளது.
படா தோஸ்தின் சிறப்பம்சங்கள்:
படா தோஸ்த் எக்ஸ்பிரஸ் சிஎன்ஜி எனும் பெயரில் அறிமுகமாகியுள்ள இந்த மினி பேருந்து, நகரம் மற்றும் நெடுச்சாலை என எந்த விதமான பயன்பாட்டிற்கும் பயன்படும். இதற்கேற்ற வகையில் அசோக் லேலண்ட் படா தோஸ்த் எக்ஸ்பிரஸ் சிஎன்ஜி வாகனத்தை வடிவமைத்து இருக்கின்றது.
தாராளமான இட வசதிக் கொண்ட 12 கொண்ட மினி பேருந்து இது. வழக்கமான 12 சீட்டர் மினி பேருந்துகளில் இருப்பதைக் காட்டிலும் அதிக ஸ்பெஷலான 12 சீட்டராக இதனை தயாரிப்பு நிறுவனம் உருவாக்கி இருக்கின்றது. குடும்பத்துடன் நீண்ட தூர சுற்றுலா செல்பவர்களுக்கு ஏற்ற வாகனமாக இதனை அசோக் லேலண்ட் தயாரித்திருக்கின்றது. சொகுசான இருக்கைகள், லக்சூரியான இன்ட்ரீயர் என அட்டகாசமாக இந்த வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த வாகனத்தில் பி15 பிஎஸ்6 தர சிஎன்ஜி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் பொருத்தப்பட்டிருக்கும் எஞ்சின் அதிகபட்சமாக 58 எச்பி பவரையும், 158 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இந்த மினி பேருந்து அதிகபட்சமாக மணிக்கு 80 கிமீ வேகத்தில் செல்லும். இந்தப் பேருந்தின் வீல் பேஸ் 2800 மில்லிமீட்டர் என்பதால், இது எந்த மாதிரியான சாலையாக இருந்தாலும் சமாளித்து ஓடும்.
இந்த வாகனத்தில் டிராக்கிங் சிஸ்டம், தரமான ஏர் கண்டிஷனிங் உள்ளது. இதை நகரத்தின் நெரிசல் மிகுந்த சாலையில் கூட பயன்படுத்திக் கொள்ளலாம். 13.5 மீட்டர் நீளம் கொண்ட இந்த மினி பேருந்து, 4X2 தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்தில் சுமார் 1500 லிட்டர் (255 கிலோ) சிஎன்ஜியை நிரப்பிக் கொள்ளும் வகையில் பெரிய டேங்க் பொருத்தப்பட்டுள்ளது.
முழுமையாக சிஎன்ஜியை நிரப்பும் பட்சத்தில் சுமார் 1,000 கிலோ மீட்டர் தூரம் பயணிக்க முடியும். பர்சனல் யூஸுக்காக பெரிய குடும்பத்தினர்கள் வாங்க வேண்டும் என்பதற்காக முற்றிலும் கவர்ச்சியான தோற்றத்தில் இந்த வாகனத்தை நிறுவனம் வடிவமைத்திருக்கின்றது.
Also Read :16 லட்சத்தில் அறிமுகமான மஹிந்திரா XUV 400 எலெக்ட்ரிக் கார்கள் : தொடங்கியது முன்பதிவு!
ஆகையால், தனி நபர்களையும் இந்த வாகனம் கவர்வதற்கான வாய்ப்புகள் அதிகம். அசோக் லேலண்ட் நிறுவனம் இந்த சூப்பரான மினி பேருந்தின் விலையையும், அதன் விற்பனை எப்போது தொடங்கும் உள்ளிட்ட விபரங்களையும் வெளியிடவில்லை. விரைவில் இதுகுறித்த தகவலை நிறுவனம் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
செய்தியாளர்: ரொசாரியோ ராய்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Ashok Leyland, Bus, Mini bus