ஹிந்துஜா குரூப்பின் (Hinduja Group) முதன்மை நிறுவனமான அசோக் லேலண்ட் (Ashok Leyland) ப்ரீ ஓன்ட் கமர்ஷியல் வெஹிகிள் பிசினஸில் அதாவது பயன்படுத்திய வாகனங்கள் பிசினஸில் (Used Vehicles Business) நுழைகிறது. இதற்காக ஸ்ரீராம் ஆட்டோமால் (Shriram Automall) நிறுவனத்துடன் இணைந்து செயல்பட உள்ளது அசோக் லேலண்ட். இதற்காக Aashok Leyland நிறுவனமானது Shriram Automall India Limited (SAMIL) நிறுவனத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த பைஜிட்டல் பிளாட்ஃபார்மானது (phygital platform) பழைய வர்த்தக வாகனங்களை பரிமாற்றம் மற்றும் முறையான அப்புறப்படுத்துதல் மற்றும் வாங்குதல் உள்ளிட்ட செயல்பாடுகளை எளிதாக்கும். மேலும் இது ப்ரீ ஓன்ட் வெஹிகிள்ஸ் வாங்குவோர் மற்றும் விற்பனையாளர்களை இணைக்கும் சந்தையாகவும் இருக்கும்.
இந்தியா முழுவதும் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் அதன் வணிக வாகன டிஜிட்டல் சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் பங்குதாரர்களை நேரடியாக தொடர்பு கொள்வதன் மூலம் பயன்படுத்தப்பட்ட வாகன சந்தையை நெறிப்படுத்துவதையும், ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட வாகன வணிகத்தில் அதிக வெளிப்படை தன்மையைக் கொண்டுவருவதையும் அசோக் லேலண்ட் நிறுவனம் நோக்கமாக கொண்டுள்ளது.
Also read... ரூ.70,000 பட்ஜெட்டிற்கு கீழ் இந்தியாவில் உள்ள சிறந்த ஸ்கூட்டர்களின் பட்டியல்!
Ashok Leyland-ன் நடுத்தர மற்றும் கனரக வணிக வாகனங்கள் பிரிவின் தலைவர் சஞ்சய் சரஸ்வத் பேசுகையில், எண்ட்-டு- எண்ட் மொபிலிட்டி சொல்யூஷன்களை வழங்கும் நிறுவனமாக இருக்க வேண்டும் என்ற எங்கள் குறிக்கோளுடன், ப்ரீ ஓன்ட் கமர்ஷியல் வெஹிகிள் செக்மென்ட்டில் எங்கள் இருப்பை நிலைநாட்ட Shriram Automall-உடனான இந்த பார்ட்னர்ஷிப் உதவும். மிகப்பெரிய டிரக் தயாரிப்பாளர்களில் ஒருவரான எங்கள் நிறுவனத்தின் அனுபவத்துடன், நுகர்வோரை மையமாகக் கொண்ட டிஜிட்டல் தீர்வு மூலம் சுற்றுச்சூழல் அமைப்பை மேம்படுத்த இந்த முன்முயற்சி உதவும். மேலும் இது எங்கள் நுகர்வோருக்கு எளிதில் அணுக மற்றும் பயன்படுத்தக் கூடிய டச்பாயிண்டாக இருக்கும் என்றார். மேலும் தங்களது இந்த முயற்சியானது அரசு கொண்டு வந்துள்ள வெஹிகிள் ஸ்கிராப்பேஜ் பாலிசியை செயல்படுத்த உதவும் என்றும், பசுமையான எதிர்காலத்தை நோக்கி செல்லவும் உதவும் என நிறுவனம் எதிர்பார்க்கிறது என்றார்.
Also read... 2022-ல் அறிமுகமாக உள்ள சிறந்த ப்ரீமியம் பைக்குகளின் லிஸ்ட் இதோ!
அசோக் லேலண்ட் வழங்க உள்ள பல்வேறு டிஜிட்டல் தீர்வுகள் மூலம் iALERT டெலிமாடிக்ஸ் சொல்யூஷன், டிரைவர் SAATHi ஸ்கில்லிங் சொல்யூஷன், வேல்யூவேஷன், பிரேக்டவுன் சர்வீஸ், ஃப்யூயல் சொல்யூஷன் போன்ற பிற மதிப்பு கூட்டப்பட்ட சேவைகளுக்கான அணுகலையும் வாடிக்கையாளர்கள் பெறுவார்கள். Ashok Leyland-உடனான பார்ட்னர்ஷிப் பற்றி பேசிய ஸ்ரீராம் ஆட்டோமால் இந்தியா லிமிடெட் தலைமை நிர்வாக அதிகாரி சமீர் மல்ஹோத்ரா, “பயன்படுத்தப்பட்ட வாகன சந்தையில் தங்கள் நுழைவைக் குறிக்க அசோக் லேலண்ட் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. வாடிக்கையாளர் அனுபவத்தை அடுத்த கட்டத்திற்கு மேம்படுத்த புதுமையான டிஜிட்டல் தீர்வுகளைக் கொண்டுவரும் நோக்கத்தில் நாங்கள் செயல்பட்டு வருகிறோம். வர்த்தக வாகனப் பிரிவின் OEM-களின் நிபுணத்துவம் மற்றும் இந்தியா முழுவதும் பரவியுள்ள 100+ ஆட்டோமால் நெட்வொர்க் வலிமையை உள்ளடக்கிய எங்கள் Phygital auctions platforms மூலம், வாங்குபவர்களுக்கும் விற்பவர்களுக்கும் அனைத்தையும் உள்ளடக்கிய மொபிலிட்டி தீர்வுகளை உருவாக்குவதை நோக்கமாக கொண்டுள்ளோம் என்றார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Ashok Leyland