தமிழக அரசின் ஒப்பந்தத்தைப் பெற்ற அசோக் லேலாண்ட் நிறுவனம்..!

சர்வதேச அளவில் பேருந்துகள் உற்பத்தியைப் பொறுத்த வரையில் நான்காம் பெரும் உற்பத்தியாளராக அசோக் லேலாண்ட் உள்ளது.

தமிழக அரசின் ஒப்பந்தத்தைப் பெற்ற அசோக் லேலாண்ட் நிறுவனம்..!
மாதிரிப்படம்
  • News18
  • Last Updated: November 27, 2019, 6:47 PM IST
  • Share this:
தமிழக போக்குவரத்துக் கழகத்துக்கான பேருந்துகளை உற்பத்தி செய்யும் ஒப்பந்தத்தை அசோக் லேலாண்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

ஹிந்துஜா குழுமத்தின் அசோக் லேலாண்ட் நிறுவனத்துக்கு தமிழகப் போக்குவரத்துக் கழகம் 1,750 பேருந்துகளுக்கான ஒப்பந்தத்தை அளித்துள்ளது. இதுகுறித்து அசோக் லேலாண்ட் நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டு அதிகாரி அனுஜ் கதுரியா கூறுகையில், “எங்களுக்கு இந்த ஆர்டர் கிடைத்ததில் பெரும் மகிழ்ச்சி. இந்தியாவில் பேருந்துகள் உற்பத்தித் துறையைப் பொறுத்தவரையில் எங்களது மேம்பட்ட தொழில்நுட்பம், கண்டுபிடிப்புத் திறன் ஆகியன எங்களுக்கான இடத்தை தக்கவைத்துக் கொள்ள உதவுகின்றன” என்றார்.

இந்த ஒப்பந்தத்துக்கான நிதித்தொகை குறித்த விவரங்கள் எதையும் அசோக் லேலாண்ட் நிறுவனம் வெளியிடவில்லை. இதன் மூலம் அசோக் லேலாண்ட் நிறுவனத்தின் மதிப்பு உயர்ந்துள்ளதாகவே கூறப்படுகிறது. சர்வதேச அளவில் பேருந்துகள் உற்பத்தியைப் பொறுத்த வரையில் நான்காம் பெரும் உற்பத்தியாளராக அசோக் லேலாண்ட் உள்ளது.


இந்தியாவில் இதே துறையில் அசோக் லேலாண்ட் முதலிடத்தில் உள்ளது. பங்குசந்தையைப் பொறுத்தவரையில் அசோக் லேலாண்ட் பங்கு மதிப்புகள் இன்றைய வர்த்தகத்தில் 2.41 சதவிகிதம் வளர்ச்சியிலேயே உள்ளன.

மேலும் பார்க்க: 2 நாட்களில் 1.50 லட்சம் பேர் முன்பதிவு... டெஸ்லா சைபர்ட்ரக் வாகனத்துக்குப் பெரும் வரவேற்பு
First published: November 27, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading