ஹோம் /நியூஸ் /ஆட்டோமொபைல் /

TN EV HUB: தமிழகத்தில் குவியும் முதலீடுகள் - பெரு நிறுவனங்கள் ஆர்வம்!

TN EV HUB: தமிழகத்தில் குவியும் முதலீடுகள் - பெரு நிறுவனங்கள் ஆர்வம்!

மாதிரி படம்

மாதிரி படம்

ஹீரோ மோட்டர் கார்ப் நிறுவனத்துடன் இணைந்து ஏதர் எனர்ஜி நிறுவனம் ஏற்கனவே எலக்டிரிக் ஸ்கூட்டர் தயாரிப்பை ஓசூரில் தொடங்கியுள்ளது.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

மின்சார வாகன உற்பத்தி மற்றும் பல்வேறு துறை சார்ந்த பெரு நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுகின்றன.

ராணுவ தளவாட உற்பத்தி முதல் ராக்கெட்டுகள் வரை தமிழகத்தில் தயாரிக்கப்பட உள்ளன. உலகின் வாகன உற்பத்தியில் முன்னணி நிறுவனங்களாக இருக்கும் ஆட்டோ மொபைல் துறையினரும் தமிழகத்தில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுகின்றன. உலகிலேயே மிகப்பெரிய எலக்டிரிக் ஸ்கூட்டர் தயாரிப்பு தொழிற்சாலையை ஓலா நிறுவனம் கிருஷ்ணகிரியில் அமைத்து வருகிறது. சுமார் 2,354 கோடி ரூபாய் முதலீட்டில் 500 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமாக இந்த தொழிற்சாலை அமைய உள்ளது. இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஹீரோ மோட்டர் கார்ப் நிறுவனத்துடன் இணைந்து ஏதர் எனர்ஜி நிறுவனம் ஏற்கனவே எலக்டிரிக் ஸ்கூட்டர் தயாரிப்பை ஓசூரில் தொடங்கியுள்ளது. மேலும், கூடுதலாக 635 கோடி ரூபாயை அடுத்த 5 ஆண்டுகளில் முதலீடு செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. கிரேவ்ஸ் காட்டன் லிமிட்டெட் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஆம்பியர் வாகன உற்பத்தி நிறுவனம், ராணிப்பேட்டையில் உள்ள தொழிற்சாலையில் மின்சார வாகன உற்பத்தியை தொடங்க திட்டமிட்டுள்ளது.

தொடக்கத்தில் ஒரு லட்சம் யூனிட்டுகளை தயாரிக்க திட்டமிட்டுள்ள அந்த நிறுவனம், அடுத்த ஆண்டுகளில் 10 லட்சம் யூனிட்டுகளாக அதிகரிக்க முடிவு செய்துள்ளது. ஏற்கனவே தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள கிரேவ்ஸ் காட்டன் நிறுவனம் அடுத்த 10 ஆண்டுகளில் 700 கோடி ரூபாய் முதலீடு செய்யவும் திட்டமிட்டுள்ளது. முருகப்பா குழுமத்தின் டியூப் இன்வெஸ்ட்மென்ட்ஸ் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனம் எலக்டிரிக் வாகன தயாரிப்பில் 38,105 கோடி ரூபாய் முதலீடு செய்வது குறித்து ஆலோசனை செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து பேசிய முருகப்பா குழுமத்தின் தலைமை நிதி ஆலோசகர் மகேந்திர குமார், சென்னையில் தங்களுக்கு ஏற்கனவே நிலம் இருப்பதாகவும், மூன்று சக்கர மின்சார வாகனங்களை தயாரிக்கும் தொழிற்சாலையை அமைக்க ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறியுள்ளார். இந்தியாவின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனமான அசோக் லேலேண்ட் நிறுவனமும் எல்.சி.வி வாகனங்களை உற்பத்தி செய்வதில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.

Also read... புதிய தயாரிப்புகளில் இறங்கிய ஸ்டீல்பர்டு நிறுவனம் - கிரீஸ், என்ஞ்சின் ஆயில் அறிமுகம்!

இது குறித்து பேசிய அந்த நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர், மின்சார வாகன உற்பத்தி செய்வது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை, முதலீட்டாளர்களை வரவேற்கிறோம், அனைத்தும் இறுதிசெய்யப்படும் நிலையில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்படும் எனவும், சென்னை முதன்மை இடத்தில் இருப்பதாகவும் கூறியுள்ளார். இந்த நிறுவனங்கள் மட்டுமல்லாது மின்சார வாகனங்கள் மற்றும் பேட்டரி உள்ளிட்ட உதிரி பாகங்களை தயாரிக்கும் நிறுவனங்களுடன் தமிழக அரசு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

தமிழகத்தில் முதலீடு செய்ய நிறுவனங்கள் ஆர்வம் காட்டுவது குறித்து பேசிய டி.வி.எஸ் நிறுவனங்களின் குழும தலைவர் வேணு சீனிவாசன் மற்றும் சில முன்னணி தொழிலதிபர்கள், தமிழகம் ஆட்டோ மொபைல் துறை மற்றும் டெக்னாலஜி சார்ந்த தொழில் முதலீடுகள் செய்வதற்கு ஏற்ற இடமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். ஏறத்தாழ 35 விழுக்காடு ஆட்டோ மொபைல் உதிரி பாங்கள் தமிழகத்தில் தயாரிக்கப்படுவதாகவும், இதனால் தமிழகத்தில் முதலீடு செய்ய முன்னணி நிறுவனங்கள் ஆர்வம் காட்டுவதாகவும் விளக்கமளித்துள்ளனர்.

உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Automobile