நாடு முழுவதும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்களை அமைக்க அப்போலோ மருத்துவமனை நிர்வாகத்துடன் மத்திய அரசு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
மத்திய அரசின் எரிசக்தி திறன் சேவைகள் நிறுவனம் அப்போலோ மருத்துவமனைகள் நிர்வாகத்துடன் 10 ஆண்டுகளுக்கான ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதன் அடிப்படையில் நாடு முழுவதும் உள்ள அப்போலோ மருத்துவமனை வளாகங்களில் பொதுப் பயன்பாட்டுக்கான எலெக்ட்ரிக் வாகன சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்படும்.
ஒரு பொதுத்துறை சேவைக்காக அரசு தனியார் நிறுவனத்துடன் மேற்கொள்ளும் முதல் ஒப்பந்தம் இது எனக் கூறப்படுகிறது. மருத்துவமனை வளாகங்களில் அமைக்கப்படும் சார்ஜிங் நிலையங்களுக்கான முதலீடு, பணியாட்கள் நியமனம், பராமரிப்பு ஆகிய செலவுகளை மத்திய எரிசக்தி திறன் சேவை மையமே ஏற்றுக்கொள்ளும்.
அப்போலோ நிர்வாகம் சார்ஜிங் நிலையங்களுக்குத் தேவைப்படும் இடவசதி மற்றும் மின்சார உதவியை மட்டும் வழங்கும். எலெக்ட்ரிக் வாகனப் பயன்பாட்டை அதிகரிக்க அரசு இந்த ஒப்பந்த முடிவை மேற்கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பார்க்க: டீசல் ரக க்ராண்ட் i10 கார் உற்பத்தியை நிறுத்த ஹூண்டாய் முடிவு!
70 ஆண்டுகள் பழமையான கார் கண்காட்சி!
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.