Home /News /automobile /

கார்களில் உள்ள Android Auto இனி டூயல் சிம்மை சப்போர்ட் செய்யும்.... யூஸர்கள் மகிழ்ச்சி!

கார்களில் உள்ள Android Auto இனி டூயல் சிம்மை சப்போர்ட் செய்யும்.... யூஸர்கள் மகிழ்ச்சி!

கார்களில் உள்ள Android Auto

கார்களில் உள்ள Android Auto

கூகுள் மேப்ஸ் தற்காலிகமாக முடங்கியது உட்பட பல யூஸர் சிக்கல்களால் சமீபத்தில் பாதிக்கப்பட்டாலும் கூட எப்போதும் ஆண்ட்ராய்டு ஆட்டோ (Android Auto) எப்போதும் போல பிரபலமாகவே உள்ளது.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
கூகுள் மேப்ஸ் தற்காலிகமாக முடங்கியது உட்பட பல யூஸர் சிக்கல்களால் சமீபத்தில் பாதிக்கப்பட்டாலும் கூட  ஆண்ட்ராய்டு ஆட்டோ (Android Auto) எப்போதும் போல பிரபலமாகவே உள்ளது. இதற்கு காரணம் ஆண்ட்ராய்டு ஆட்டோ அடிக்கடி நிறைய அப்டேட்களை பெறுவதே. கூகுள் ஆண்ட்ராய்டு ஆட்டோவில் தனது முதல் குறிப்பிடத்தக்க மேம்படுத்தலை 2019-ல் வெளியிட்டது. புதிய அம்சங்களையும் அறிமுகப்படுத்தியது.

வாகனம் ஓட்டும் போது ஏற்படும் கவன சிதறல்களைக் குறைக்க ஒரு பெரிய UI வடிவமைப்பு மாற்றத்தையும் அறிமுகப்படுத்தியது. இதனிடையே ஆண்ட்ராய்டு 10 ரிலீஸுடன் கூகுள் தனது பிக்சல் போன்களில் டூயல் சிம் வசதியையும் சேர்த்தது. இருப்பினும் dual-SIM capability அம்சம் இப்போது வரை தெளிவாக இல்லை. ஆண்ட்ராய்டு ஆட்டோ பல சிம் கார்டுகளை அனுமதிக்கும் என்று கூகுள் அறிவிக்க 2 ஆண்டுகள் ஆனது.

இந்த அறிவிப்பை வெளியிட்ட சில மாதங்களுக்கு பிறகு தற்போது ஆண்ட்ராய்டு ஆட்டோ யூஸர்கள் விரைவில் இந்த டூயல் சிம் அம்சத்தைப் பயன்படுத்த முடியும் என்று தெரிகிறது. முன்னதாக கூகுள் கடந்த 2015-ம் ஆண்டில் ஆண்ட்ராய்டு ஆட்டோ அம்சத்தை முதலில் அறிமுகப்படுத்தியது. புழக்கத்தில் உள்ள அத்தியாவசிய ஆண்ட்ராய்டு அம்சங்களை இணைத்து அதன் உதவியுடன் டிரைவிங் எக்ஸ்பீரியன்ஸை மேம்படுத்தவே இது உருவாக்கப்பட்டது.

ALSO READ |  குருவாயூர் கோவில் ஸ்ரீகிருஷ்ணருக்கு காணிக்கையாக வழங்கப்பட்ட புத்தம் புதிய எஸ்யூவி

இது வாய்ஸ் நேவிகேஷன் அசிஸ்ட் , எஸ்எம்எஸ் ரீட்அவுட்ஸ் மற்றும் காலிங் ஃபங்ஷன்ஸ் போன்றவற்றை பெறுவதை எளிதாக்கியது. இன்று மார்கெட்டில் விற்கப்பட்டு வரும் அனைத்து முக்கிய ஆண்ட்ராய்டு ஃபோன்களும் 2 சிம் கார்டு ஸ்லாட்டுகள் அல்லது eSIM மூலம் இரட்டை சிம் திறனை பெற்றுள்ளன. இந்நிலையில் கார்களில் உள்ள ஆண்ட்ராய்டு ஆட்டோ சிஸ்டம் டூயல் சிம் சப்போர்ட்டை பெறுகிறது. ஆண்ட்ராய்டு ஆட்டோ நிரலுக்கான இந்த லேட்டஸ்ட் வெர்ஷன் ஒரு Reddit யூஸரால் கவனிக்கப்பட்டு சோஷியல் மீடியாக்களில் ஷேர் செய்யப்பட்டுள்ளது.

அந்த யூஸரின் தகவலின் படி இறுதியாக ஆண்ட்ராய்டு ஆட்டோ சிஸ்டம் டூயல் சிம் ஃபோன்களுக்கான சப்போர்ட்டை உள்ளடக்கியது. சமீபத்திய வெர்ஷனில் ஆண்ட்ராய்டு ஆட்டோ இப்போது ஒருpop-up-பை காட்டுகிறது. இது யூஸர்கள் தங்கள் வாகனங்களில் இருக்கும் போது எந்த சிம்மில் இருந்து கால் செய்ய வேண்டும் என்பதை தேர்வு செய்ய அனுமதிக்கிறது.

ALSO READ |  இந்தியாவில் இந்த வருடம் வெளியான சிறந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் பட்டியல்!

இந்த லேட்டஸ்ட் அப்டேட்டிற்கு முன்பு ஒருவர் டூயல் சிம் ஃபோன் வைத்திருந்தாலும், கால்ஸ் செய்ய முயலும் போது default SIM-ஐயே Android Auto தேர்வு செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆண்ட்ராய்டு ஆட்டோவுக்கான மல்டி சிம் கேப்பபிளிட்டியை கூகுள் முதலில் கடந்த செப்டம்பர் மாதம் அறிவித்தது.

அறிவிப்பின் போது அடுத்த வாரங்களில் இந்த அப்டேட் கிடைக்கும் என்று கூகுள் கூறியது. எனினும் இப்போது தான் இந்த அப்டேட் செயல்பாட்டிற்கு வந்திருக்கிறது. பீட்டா திட்டத்தின் ஒரு பகுதியாக குறிப்பிட்ட ரெடிட் பயனர் அதை ஆப் வெர்ஷன் 7.1.614554-ல் பெறுவதால், கூகுளின் இந்த புதிய வெளியீடு படிப்படியாக யூஸர்களுக்கு அறிமுகமாகும் என்று தெரிகிறது.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Android, Smartphone

அடுத்த செய்தி