350 எலெக்ட்ரிக் பேருந்துகளைக் களமிறக்கும் ஆந்திர அரசாங்கம்..!

மாதிரிப்படம். (Photo: Reuters)

2024-ம் ஆண்டுக்குள் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனப் பதிவுகளை நிறுத்த வேண்டும் என்றும் ஆந்திர அரசு உத்தரவிட்டுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
ஆந்திர அரசாங்கம் சார்பில் மாநிலத்தின் முக்கிய நகரங்களில் 746 கோடி நிதி ஒதுக்கீட்டின் கீழ் எலெக்ட்ரிக் பேருந்துகள் செயல்படுத்தப்பட உள்ளன.

முதற்கட்டமாக ஆந்திராவில் திருப்பதி, விசாகப்பட்டிணம், விஜயவாடா, காக்கிநாடா மற்றும் அமராவதி ஆகிய ஐந்து நகரங்களில் அரசின் எலெக்ட்ரிக் பேருந்துகள் செயல்பாட்டுக்கு வர உள்ளன. ஆந்திர அரசு எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பது இது முதல்முறை அல்ல.

வாகனங்களால் ஏற்படும் காற்று மாசுபாடுகளைக் கட்டுப்படுத்த நாட்டிலேயே முதல் மாநிலமாக ஆந்திரா எலெக்ட்ரிக் வாகனக் கொள்கையை அறிமுகப்படுத்தியது. இக்கொள்கைத் திட்டம் மூலம் 2024-ம் ஆண்டுக்குள் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனப் பதிவுகளை நிறுத்த வேண்டும் என்றும் ஆந்திர அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆந்திர தலைநகர் அமராவதியில் வருகிற 2024-ம் ஆண்டுக்குள் 10 லட்சம் எலெக்ட்ரிக் வாகனங்களைக் களமிறக்கிவிட வேண்டும் என்ற குறிக்கோள் வைத்துள்ளது அம்மாநில அரசு. தனிப்பட்ட நபர்களை எலெக்ட்ரிக் வாகனங்கள் உபயோகப்படுத்த அறிவுறுத்தும் முன்னர் அரசு வாகனங்கள் எலெக்ட்ரிக் மயமாக வேண்டும் என முயற்சித்து வருகிறது ஆந்திர அரசு.

மேலும் பார்க்க: எலெக்ட்ரிக் வாகனங்கள் மீதான வரியைக் குறைக்க வாய்ப்பு- ஜிஎஸ்டி கவுன்சில் ஆலோசனை
Published by:Rahini M
First published: