ஜிஎஸ்டி-யைக் குறைத்தால் பொருளாதாரம் மேம்படும்: ஆனந்த் மஹிந்திரா

ஜிஎஸ்டி வரியை 18 முதல் 28 சதவிகிதம் வரையில் குறைக்க வேண்டும் என இந்திய ஆட்டோமொபைல் தொழிற் சங்கங்கள் கோரிக்கை வைத்துள்ளன.

ஜிஎஸ்டி-யைக் குறைத்தால் பொருளாதாரம் மேம்படும்: ஆனந்த் மஹிந்திரா
ஆனந்த் மஹிந்திரா
  • News18
  • Last Updated: June 27, 2019, 5:26 PM IST
  • Share this:
ஆட்டோமொபைல்ஸ் மீதான ஜிஎஸ்டி-யைக் குறைத்தால் நாட்டின் பொருளாதாரம் மேம்படும் என மஹிந்திரா நிறுவனத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா தெரிவித்துள்ளார்.

ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில், ‘கடந்த 18 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வாகன விற்பனை 20 சதவிகிதம் வரையிலான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. குறிப்பாக பேசெஞ்சர் வாகன விற்பனையிலும் வீழ்ச்சி உள்ளது. ஆட்டோமொபைல்ஸ் தொழிற்துறைக்கான ஜிஎஸ்டி வரியைக் குறைக்க வேண்டும். இந்தத்துறையின் தாக்கம் இதர சிறு நிறுவனங்கள் மற்றும் வேலைவாய்ப்பின் மீதும் உள்ளது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

வருகிற புதிய பட்ஜெட்டின் போது வாகனங்களின் மீதான ஜிஎஸ்டி வரியை 18 முதல் 28 சதவிகிதம் வரையில் குறைக்க வேண்டும் என இந்திய ஆட்டோமொபைல் தொழிற் சங்கங்கள் கோரிக்கை வைத்துள்ளன. கடந்த ஆண்டின் மே மாதத்தில் இந்தியாவில் பேசெஞ்சர் வாகன விற்பனை 3,01,238 ஆக இருந்தது. ஆனால், 2019-ம் ஆண்டு மே மாதத்தில் விற்பனை விகிதம் சரிந்து 2,39,347 வாகனங்கள் மட்டுமே விற்பனை ஆகிருந்தன.


கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்துக்குப் பின்னர் மிகப்பெரும் சரிவைச் சந்தித்துள்ளது வாகன தொழிற்துறை (21.91 சதவிகிதம்).

மேலும் பார்க்க: இந்தியாவின் டாப் 10 கார்கள் பட்டியலில் 8 இடங்களில் மாருதி சுசூகி!
First published: June 27, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading