Home /News /automobile /

62 ஆண்டுகளுக்கு முன் ரூ.200 ஆஃபர் அறிவித்த மஹிந்திரா ஜீப்பின் விலை தற்போது எத்தனை லட்சம் தெரியுமா?

62 ஆண்டுகளுக்கு முன் ரூ.200 ஆஃபர் அறிவித்த மஹிந்திரா ஜீப்பின் விலை தற்போது எத்தனை லட்சம் தெரியுமா?

மஹிந்திரா ஜீப்

மஹிந்திரா ஜீப்

1960-ஆம் ஆண்டு வெளிவந்த இந்த நியூஸ் பேப்பர் விளம்பரத்தில் குறிப்பிட்ட மாடல் ஜீப்பின் விலை ரூ.12,421 என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

    நடந்து கொண்டிருக்கும் இந்த 2022-ஆம் ஆண்டில் ஒரு நல்ல ஆட்டோமொபைல் பிராண்டிலிருந்து ஜீப்பை ஒன்றை வாங்குவதற்கு பல லட்சக்கணக்கான ரூபாயை செலவழிக்க வேண்டும். ஆனால் இப்போதிலிருந்து சுமார் 62 ஆண்டுகளுக்கு முன்னதாக அதாவது 1960-ஆம் ஆண்டில் இப்போது இருப்பதை விட பொருட்கள் பல நூறு மடங்கு மிகவும் மலிவானவை. 1960-ஆம் ஆண்டில் ஒருவர் சில ஆயிரம் ரூபாய்களிலேயே நாட்டின் முன்னணி பிரண்டான மஹிந்திராவின் பிரீமியம் ஜீப்பை வாங்க முடியும்.

    நாட்டின் முண்ணனி தொழிலதிபர்களில் ஒருவரான ஆனந்த் மஹிந்திரா இரண்டு காரணங்களுக்காக பிரபலமானவர். ஒன்று அவர் மஹிந்திரா குழுமத்தின் தலைவர் என்பதால், இரண்டாவது அவர் ட்விட்டரில் எப்போதும் ஆக்ட்டிவாக இருந்து கடின முயற்சி கொண்டவர்களின் வீடியோ மற்றும் போட்டோக்களை ஷேர் செய்து அவர்கள் முன்னேற உதவுவது. ஆனந்த் மஹிந்திரா சமீபத்தில் தனது மஹிந்திரா நிறுவனத்தின் Willys CJ 3B ஜீப்பின் பழைய பிரிண்ட் விளம்பரம் ஒன்றை ஷேர் செய்து உள்ளார். இதன் மூலம் தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா, மஹிந்திரா ஜீப் இப்போது இருப்பதை விட மிகவும் மலிவானதாக இருந்த 'good old days' குறித்து வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறார்.



    1960-ஆம் ஆண்டு வெளிவந்த இந்த நியூஸ் பேப்பர் விளம்பரத்தில் குறிப்பிட்ட மாடல் ஜீப்பின் விலை ரூ.12,421 என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த விலையில் ரூ.200 தள்ளுபடியும் அடக்கம் எனபதை அந்த பிரிண்ட் விளம்பரம் நமக்கு காட்டுகிறது. இந்த விளம்பரத்தை ட்விட்டரில் ஷேர் செய்த ஆனந்த் மஹிந்திரா "பல தசாப்தங்களாக எங்கள் வாகனங்களை விநியோகித்து வரும் ஒரு நல்ல நண்பரின் குடும்பம் இதை பத்திரமாக வைத்திருந்துள்ளனர். ஆஹா நல்ல பழைய நாட்கள்… விலைகள் சரியான திசையில் செல்லும் போது!” என்று குறிப்பிட்டு உள்ளார். இவ்வளவு மலிவு விலையில் கிடைத்த Willys CJ 3B ஜீப்பின் விலை இன்று ரூ.4.5 லட்சத்திற்கும் அதிகமாக உள்ளது.

    Also Read : 31.12 கிமீ மைலேஜுடன் மாருதி சுசுகி டிசையர் கார் அறிமுகம்! விலை மற்றும் விவரங்கள்

    அதே போல மஹிந்திராவின் மிகவும் பிரபலமான தார் ஜீப்புகள் ரூ.12 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை விலை கொண்டவை. இதனிடையே ஆனந்த் மஹிந்திராவின் இந்த ட்விட்டை பார்த்த பல இளந்தலைமுறை நெட்டிசன்கள் அப்போது இவ்வளவு குறைந்த விலையில் நல்ல தரமான ஜீப் ஒன்றை வாங்கிவிட முடிந்ததா வியப்பில் ஆழ்ந்தனர்.

    மேலும் இன்று அதே விலையில் ஜீப்பை பெற முடியுமா என்று பல ட்விட்டர் யூஸர்கள் நகைச்சுவையாக கேட்டார்கள்.பின்னோக்கிய காலத்துக்கு சென்று பழைய விலையில் ஜீப்பை வாங்கலாம் என்று கூட பலர் வேடிக்கையாக கமெண்ட்ஸ் செய்துள்ளனர். பலரின் வேடிக்கையான கமெண்ட்ஸ்களுக்கு ஆனந்த் மஹிந்திராவும் காமெடியாகவே பதில் அளித்துள்ளார். ஒரு யூஸர் மிகவும் நல்ல விலை, இப்போது கிடைக்குமா.? என்று கேட்டதற்கு பழைய விலையில் எந்தெந்த ஆக்சஸரீஸ்களை அவர் வாங்கலாம் என்பதை கண்டுபிடிக்க முயற்சிப்பதாக கூறி உள்ளார். மற்றொரு யூஸர் ஆனந்த் மஹிந்திராவிடம் 1960-ல் இருந்த அதே விலையில் 2 வாகனங்களை முன்பதிவு செய்யும்படி கேட்டுக் கொண்டார்.

    இதற்கு நகைச்சுவையாகப் பதிலளித்த மஹிந்திரா பழைய விலையில் நீங்கள் 10 கார்களை வாங்க முடியும். ஆனால் அவை ஒரிஜினல் கார்களுக்கு பதிலாக பொம்மை சேகரிப்புகளாக இருக்கும் என்று காமெடியாக கூறி இருக்கிறார்.
    Published by:Vijay R
    First published:

    Tags: Anand Mahindra

    அடுத்த செய்தி