• HOME
  • »
  • NEWS
  • »
  • automobile
  • »
  • நடராஜன், வாஷிங்டன் சுந்தர் உள்ளிட்ட 6 இந்திய இளம் வீரர்களுக்கு கார் பரிசு - ஆனந்த் மஹிந்திரா

நடராஜன், வாஷிங்டன் சுந்தர் உள்ளிட்ட 6 இந்திய இளம் வீரர்களுக்கு கார் பரிசு - ஆனந்த் மஹிந்திரா

ஆனந்த் மஹிந்திரா

ஆனந்த் மஹிந்திரா

இந்திய அணியில் புதுமுக வீரர்களாக அறிமுகமான தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன், வாஷிங்டன் சுந்தர் உள்ளிட்ட 6 வீரர்களுக்கு மஹிந்திரா தார் ஜீப்பை பரிசாக அளிப்பதாக மஹிந்திரா நிறுவன தலைவர் ஆனந்த் மஹிந்திரா அறிவித்துள்ளார்.

  • Share this:
ஆஸ்திரேலியாவில் அற்புதமான வெற்றியை பெற்றிருக்கும் இந்திய அணியின் வீரர்கள் பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருக்கும் வேளையில் மஹிந்திரா நிறுவன தலைவர் ஆனந்த் மகிந்திரா இந்திய அணியில் புதுமுக வீரர்களாக அறிமுகமான தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன், வாஷிங்டன் சுந்தர் உள்ளிட்ட 6 வீரர்களுக்கு மஹிந்திரா தார் ஜீப்பை பரிசாக அளிப்பதாக மஹிந்திரா நிறுவன தலைவர் ஆனந்த் மஹிந்திரா அறிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி கடந்த நவம்பர் மாதம் முதல் டி20 தொடர், ஒரு நாள் தொடர் மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாடியது. இதில் டி20 தொடரை கைப்பற்றிய இந்திய அணி, டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் 2ம் முறையாக வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்தது.

இந்திய கிரிக்கெட் அணி


டெஸ்ட் தொடரில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வெற்றி பெற்றது என்று கூறுவதை விட, இந்திய அணியில் விராட் கோலி, அஸ்வின், பும்ரா உள்ளிட்ட பல முக்கிய வீரர்கள் காயம் மற்றும் சொந்தக் காரணங்களுக்காக வெளியேறிய நிலையில் அனுமவமற்ற மற்றும் புதுமுக வீரர்களுடன் களமிறங்கி பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் துவம்சம் செய்தது என்றே கூற வேண்டும். இந்த வெற்றியில் முக்கிய பங்காற்றி இந்திய அணியின் எதிர்கால நட்சத்திரங்களாக உருவெடுத்திருக்கின்றனர் நடராஜன், வாஷிங்டன் சுந்தர், முகமது சிராஜ் உள்ளிட்ட புது அறிமுகங்கள்.

வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்றுவிட்டு ஊர் திரும்பியிருக்கும் இந்திய வீரர்கள் ஒவ்வொருவரையும் ஹீரோக்களாக மக்கள் கொண்டாடி வருகின்றனர். அவர்களுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பை பார்த்து பலரும் ஆச்சரியப்படுகின்றனர். வாழ்த்து மழையில் நனைந்து கொண்டிருக்கும் இந்திய வீரர்களை உற்சாகப்படுத்தும் வகையில் மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா புதுமுக வீரர்களுக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதன்படி ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய அணியின் 6 புதுமுக வீரர்களுக்கு மஹிந்திரா தார் ஜீப்பை பரிசளிப்பதாக தெரிவித்துள்ளார்.

இத்தொடரில் சிறப்பாக விளையாடிய அறிமுக வீரர்களான நடராஜன், வாஷிங்டன் சுந்தர், முகமது சிராஜ், ஷர்துல் தாக்குர், சுப்மன் கில் மற்றும் நவ்திப் சைனி ஆகியோருக்கு தார் ஜீப் பரிசு தரப்படும் என ஆனந்த் மஹிந்திரா தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் எதிர்கால தலைமுறை இளைஞர்களுக்கு கனவு காண்பது மற்றும் சாத்தியமற்றதை ஆராய்வதை அவர்கள் சாத்தியமாக்கியுள்ளனர்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “சமீபத்திய வரலாற்று சிறப்புமிக்க தொடரில் 6 இளைஞர்கள் அறிமுகமாகினர். சாத்தியமில்லாத விஷயங்களை கனவு காண்பதும், அதை சாத்தியப்படுத்துவதற்கும் இந்தியாவின் எதிர்கால தலைமுறை இளைஞர்களுக்கு ஒரு வழிகாட்டியாக இவர்கள் மாறியிருக்கின்றனர்.

இந்திய கிரிக்கெட் அணி


உத்வேகம் அளித்திருக்கும் இந்த வீரர்கள் ஒவ்வொருவருக்கும் எனது சொந்த கணக்கில் ஆல் நியூ தார் எஸ்யூவியை பரிசாக வழங்குவது எனக்கு தனிப்பட்ட மகிழ்ச்சியை அளிக்கிறது. நிறுவனத்தின் செலவில் இல்லாமல் எனது சொந்த கணக்கில் இருந்து இக்கார்கள் தரப்படும் என ஆனந்த் மஹிந்திரா தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: