• HOME
  • »
  • NEWS
  • »
  • automobile
  • »
  • வெள்ள நீரில் சீறி வியக்க வைத்த பொலீரோ கார்!

வெள்ள நீரில் சீறி வியக்க வைத்த பொலீரோ கார்!

mahindra bolero

mahindra bolero

பொலீரோ கார் வெள்ள நீரில் எந்தவித இடர்பாடுகளுக்கும் இடம் கொடுக்காமல் சென்றது தன்னை வியக்க வைப்பதாக ஆனந்த் மகிந்திரா தெரிவித்தார்.

  • Share this:
குஜராத்தில் சாலையில் பாய்ந்தோடிய இடுப்பளவு வெள்ள நீரில் பொலீரோ கார் ஒன்று, அசாத்தியமாக சென்ற வீடியோவைப் பார்த்து ஆனந்த் மகேந்திரா வியப்படைந்துள்ளார்.

மோசமான சாலைகளில் சிறப்பாக செல்லக்கூடிய கார்களில் மகேந்திரா பொலீரோ நிகர் எதுவும் கிடையாது என சொல்லலாம். இதனால், வாடிக்கையாளர்களிடமும் இந்தக் காருக்கு தனி மவுசு உண்டு. அண்மையில் நடந்தேறிய நிகழ்வு ஒன்றும், மகேந்திரா போலீரோ காரின் இந்த ஸ்பெஷலை நிரூபித்துள்ளது. கடந்த வாரங்களில் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் கடுமையான மழை பெய்தது. கொட்டித் தீர்த்த இந்த கனமழையில் ராஜ்கோட் சாலைகளில் இடுப்பளவு வெள்ளநீர் வழிந்தோடியது. கார்கள் சென்றால் பம்பர் உயரத்துக்கு வெள்ள நீர் இருக்கும்.

அந்த சாலையில் மகேந்திரா பொலீரோ கார், அசாத்தியமாக பயணித்தது. வெள்ள நீருக்கு நடுவே பொலீரோ கார் செல்லும் இந்த வீடியோவை நெட்டிசன் ஒருவர் ஆனந்த் மகேந்திராவுக்கு டேக் செய்து டிவிட்டரில் பதிவிட்டிருந்தார். வீடியோவைப் பார்த்த அவர், உண்மையில் என்னால் இதனை நம்பமுடியவில்லை, வியப்படைகிறேன் என தெரிவித்துள்ளார். அண்மையில் பெய்த மழையா? என வினவியுள்ள அவர், பொலீரோ கார் வெள்ள நீரில் எந்தவித இடர்பாடுகளுக்கும் இடம் கொடுக்காமல் சென்றது தன்னை வியக்க வைப்பதாக தெரிவித்தார்.

எஸ்.யூ.வி மாடல்களில் மகேந்திரா நிறுவனத்தின் பொலீரோ கார்கள், சிறந்த விற்பனை மாடலாக இருந்தது. புதிய மாடல்கள் இதில் வெளிவந்தாலும், மக்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்ற இந்த மாடல் இன்றளவும் தேடி வாங்கும் அளவுக்கு மார்க்கெட்டில் அதிக டிமாண்ட் உடைய காராக இருந்து வருகிறது. இந்திய அளவில் அனைத்து நகரங்களிலும் பலருக்கும் பிடித்தமான காராக மகேந்திரா நிறுவனத்தின் பொலீரோ இருக்கிறது.அண்மையில் இந்த நிறுவனம் பொலீரோ நியோ எஸ்.யூவியை அறிமுகப்படுத்தியது. TUV300 பேஸ்லிப்ட் பதிப்பை அடிப்படையாகக் கொண்டு இந்தக் கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. நம்பகமான மற்றும் மோசமான சாலைகளில் சிறந்த பயண அனுபவத்தை கொடுப்பதில் பெயர்பெற்ற இந்தக் காரின் புதிய மாடலும், அதே எதிர்பார்ப்புடன், வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பூர்த்தி செய்வதாக கூறப்படுகிறது.

Also Read:   மஹிந்திரா தார் எஸ்யூவியில் ஸ்டண்ட்.. சிக்கலில் யூடியூபர்கள்

அதேநேரத்தில் இந்த நியோ பொலீரோ நீண்டகால மார்க்கெட் குறிவைத்து தயாரிக்கப்படவில்லை. அடுத்த இரண்டு ஆண்டுகளில் புதிய தலைமுறை பொலீரோவை அறிமுகப்படுத்த மகேந்திரா திட்டமிட்டுள்ளது. 1.5 லிட்டர் பி.எஸ்.6 இணக்கமான எம்ஹாக் 75 டீசல் என்ஜின் மூலம் இயங்குகிறது. இதனுடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 75 பி.எச்பி பவரையும், 210 என்.எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். பி.எஸ்.6 பொலீரோ எஸ்.யூ.வி மாடல் 9.39 லட்சத்தில் தொடங்கி 9.63 லட்சம் விலையில் இந்தியாவில் கிடைக்கிறது. இந்த விலை எக்ஸ்ஷோரூம் விலையாகும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: