Home /News /automobile /

எலெக்ட்ரிக் வாகனத் துறையில் 150 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்யும் ஆனந்த் குரூப்!

எலெக்ட்ரிக் வாகனத் துறையில் 150 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்யும் ஆனந்த் குரூப்!

Anand Group

Anand Group

Anand Group | டெல்லியை தலைமையிடமாக கொண்டுள்ள ஆனந்த் குரூப் நிறுவனம் ஆட்டோமேட்டிவ் சிஸ்டம்ஸ் மற்றும் காம்போனன்ட்ஸ்களை உற்பத்தி செய்வதுடன் சப்ளையும் செய்கிறது.

எரிபொருள் விலை உயர்வு மற்றும் சுற்றுசூழல் மாசை குறைக்கும் விதமாக எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு சமீப ஆண்டுகளாக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. பல்வேறு முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனங்களும் எலெக்ட்ரிக் தயாரிப்புகளை வெளியிட்டு பிரபலப்படுத்தி வருகின்றன. அவற்றுள் சில தாயரிப்புகள் வாடிகையாளர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

இந்நிலையில் எலெக்ட்ரிக் வாகன துறை அடைந்து வரும் பெரும் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, சுமார் 100-150 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் இந்த துறையில் முதலீடு செய்ய ஆனந்த் குரூப் (Anand Group) திட்டமிட்டுள்ளது. இந்த முதலீட்டிற்காக உலகம் முழுவதும் பார்ட்னர்களை தேட தொடங்கியுள்ளது நிறுவனம். டெல்லியை தலைமையிடமாக கொண்டுள்ள ஆனந்த் குரூப் நிறுவனம் ஆட்டோமேட்டிவ் சிஸ்டம்ஸ் மற்றும் காம்போனன்ட்ஸ்களை உற்பத்தி செய்வதுடன் சப்ளையும் செய்கிறது.

பேட்டரி, மோட்டார்கள், இரு சக்கர வாகனங்களுக்கான சார்ஜிங் சிஸ்டம் முதல் கார்கள் வரை எலெக்ட்ரிக் வாகனங்களின் முழு மதிப்புச் சங்கிலியில் பங்கேற்க ஆனந்த் குரூப் ஏற்கனவே இங்கிலாந்து, ஐரோப்பா, இஸ்ரேல், ஜப்பான் உள்ளிட்ட பிற மார்கெட்களில் பார்ட்னர்ஷிப் வைக்க முயற்சித்து வருகிறது. இந்த நிறுவனம் EV உதிரிபாகப் பிரிவில் நாட்டின் டாப் 3 நிறுவனங்களில் ஒன்றாக இருப்பதை நோக்கமாக கொண்டுள்ளது.இதனிடையே EV உதிரிபாக பிரிவு துறையில் பார்ட்னர்ஷிப் அல்லது கூட்டு முயற்சிக்காக இங்கிலாந்து, இஸ்ரேல், ஜெர்மனி மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அடுத்த 3 முதல் 5 ஆண்டுகளில் ஃபியூச்சர் மொபிலிட்டி மூலம் சுமார் 500 மில்லியன் டாலர் மதிப்புள்ள வணிகத்தை உருவாக்க ஆனந்த் குரூப் நிறுவனம் இலக்கு வைத்துள்ளது. ஆனந்த் குரூப்பின் தலைவர் சுனில் கவுல் பேசுகையில், நாங்கள் பல நாடுகளை சேர்ந்த நிறுவனங்களுடன் பார்ட்னர்ஷிப் வைக்க காத்திருக்கிறோம்.

Also Read : கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்ற உலகின் மிகச்சிறிய கார்

இதற்காக பல நிறுவனங்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். எங்களது இம்முயற்சி ஃபியூச்சர் மொபிலிட்டி அல்லது க்ளீன் மொபைலிட்டி ஸ்பேஸ் பிரிவில் நாங்கள் நிலைப்பதை துரிதப்படுத்த உதவும். வேகமாக முன்னேறி வரும் எலெக்ட்ரிக் டூ வீலர் மற்றும் த்ரீ வீலர் தயாரிப்பில் எங்கள் நிறுவனத்தின் பங்கு பெருமளவில் இருக்க வேண்டும் என்று இலக்கு கொண்டிருக்கிறோம்.

Also Read : ராயல் என்பீல்டு இன்டர்செப்ட்டார், கான்டினென்டல் GT ஆகிய பைக்குகளின் இ.எம்.ஐ லோன் பற்றிய தகவல்கள் இதோ!

எனவே, பார்ட்னர்ஷிப்களில் நுழைவதன் மூலமும், என்ஜினியரிங் ஆஃப் பார்ட்ஸ் டெஸ்ட்டிங்கில் ஈடுபடுவதன் மூலமும் எங்களை தயார்படுத்தி கொண்டிருக்கிறோம். வரவிருக்கும் மூன்று முதல் ஐந்து ஆண்டுகளில் ஃபியூச்சர் மொபிலிட்டி மூலம் $500 மில்லியன் மதிப்புள்ள வணிகத்தை உருவாக்குவதே எங்கள் இலக்கு. எங்கள் குழுமத்தின் வருவாய் 2026 - 2027-க்குள் இருமடங்கு அதாவது 3 பில்லியன் டாலராக உயரும் என்று குறிப்பிட்டு உள்ளார்.

Also Read : 2022 KTM 390 Adventure VS BMW G 310 GS - இவற்றில் எது சிறந்த பைக்.?

உறுதியாக சொல்வதென்றால், எங்கள் குழும நிறுவனங்களில் ஒன்றான ஆனந்த் மாண்டோ ஈமொபிலிட்டியில் இருந்து (AMeM) 2025-26 நிதியாண்டுக்குள் ரூ. 750 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டும். அடுத்த மூன்று ஆண்டுகளில் 150 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்து டூ வீலர் வாகன உதிரிபாகங்களைத் தாண்டி உற்பத்தித் திறனை விரிவுபடுத்தும். AMeM ஆலையின் தற்போதைய வருடாந்திர உற்பத்தி 200,000 மோட்டார்கள் ஆகும், இது அடுத்த மூன்று ஆண்டுகளில் EV மோட்டார்கள் மற்றும் கன்ட்ரோலர்களுக்கு 5,00,000 வரை உயர்த்தப்படும். தவிர ஹப் மோட்டார், கன்ட்ரோலர் மற்றும் சென்டர் மோட்டாரை உள்ளடக்கிய EV உதிரிபாகங்களை தயாரிப்பதிலும் எங்கள் குழு இறங்கியுள்ளது என்றார்.
Published by:Selvi M
First published:

Tags: Automobile

அடுத்த செய்தி