Home /News /automobile /

இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட AMO Jaunty Plus எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் - விலை மற்றும் சிறப்பம்சங்கள்!

இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட AMO Jaunty Plus எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் - விலை மற்றும் சிறப்பம்சங்கள்!

AMO Jaunty Plus எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

AMO Jaunty Plus எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

Jaunty Plus எலெக்ட்ரிக் ஸ்கூட்டரானது 60 V/40 Ah லித்தியம் பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது. மேலும் ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் சராசரியாக 120 கிமீ மைலேஜை வழங்குகிறது.

தலைநகர் டெல்லியை தளமாக கொண்ட அமோ எலெக்ட்ரிக் (Amo Electric) தனது புதிய இ-ஸ்கூட்டரான ஜான்டி பிளஸை (Jaunty Plus) இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த Jaunty Plus ஸ்கூட்டரானது புதிய டாப்-ஆஃப்-லைன் மாடல் மற்றும் ஸ்டார்ட்அப்பான Amo Electric நிறுவனத்தின் முதல் அதிவேக எலெக்ட்ரிக் வெஹிகிள் ஆகும். Jaunty Plus ஸ்கூட்டரானது AMO Electric Bikes நிறுவனத்தின் புதுப்பிக்கப்பட்ட மற்றும் மிகவும் சக்திவாய்ந்த பதிப்பு என தெரிகிறது. மேலும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சில ஈர்க்கக்கூடிய அம்சங்களுடன் வருகிறது, இது சந்தையில் ஏற்கனவே இருக்கும் Ola-வின்S1 மற்றும் Ather-ன் 450X வாகனங்களுக்கு வலுவான போட்டியை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Jaunty Plus எலெக்ட்ரிக் ஸ்கூட்டரானது 60 V/40 Ah லித்தியம் பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது. மேலும் ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் சராசரியாக 120 கிமீ மைலேஜை வழங்குகிறது. Jaunty Plus எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் இருக்கும் பேட்டரியை முழுமையாக அதாவது 100 சதவீதம் சார்ஜ் செய்ய சுமார் நான்கு மணி நேரம் ஆகும் என்று ஒரு அறிக்கையில் Amo Electric நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த Jaunty Plus எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் க்ரூஸ் கன்ட்ரோல் சுவிட்ச், எலக்ட்ரானிக் அசிஸ்டட் பிரேக்கிங் சிஸ்டம் (electronic assisted braking system - EABS) மற்றும் ஆன்டி-தெஃப்ட் அலாரம் போன்ற அம்சங்கள் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இது ஒரு சைட் ஸ்டாண்ட் சென்சார், சென்ட்ரல் லாக்கிங், ஃப்ரன்ட் டிஸ்க் பிரேக், டிஆர்எல் லைட்ஸ் மற்றும் இன்ஜின் கில் சுவிட்ச், டெலஸ்கோபிக் ஃபோர்க் சஸ்பென்ஷன் மற்றும் ஹை கிரவுண்ட் கிளியரன்ஸ் ஆகியவற்றை கொண்டுள்ளது. மேலும் இது ஃபிக்ஸ்ட் மற்றும் போர்ட்டபிள் பேட்டரி பேக் ஆப்ஷனை கொண்டிருக்கும் என்று Amo Electric நிறுவனம் கூறி இருக்கிறது.

Also read... மனித தலையீடு இல்லாமல் எலெக்ட்ரிக் கார்களை தானாகவே சார்ஜ் செய்யும் ரோபோ - 2024-இல் வெளிவரும்!

Jaunty Plus எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் அறிமுகம் குறித்து AMO எலெக்ட்ரிக் பைக்ஸ் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் சுஷாந்த் குமார் கூறுகையில், “எங்கள் உள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் குழுவால் (research and development team) உருவாக்கப்பட்டு, வடிவமைக்கப்பட்டுள்ள சுற்றுச்சூழலுக்கு உகந்த இந்த பைக்குகள், பெஸ்ட்-இன்-கிளாஸ் EV மொபிலிட்டி சொல்யூஷன்ஸ் மற்றும் சர்விஸை வழங்கும் எங்கள் பிராண்டின் வாக்குறுதிக்கு சான்றாகும்" என்றார். இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வரும் பிப்ரவரி 15 முதல் ரூ.1.10 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் நாட்டில் உள்ள140 டீலர்ஷிப்களில் கிடைக்கும் என்று AMO Electric Bikes நிறுவனம் தெரிவித்துள்ளது. ரெட்-பிளாக், எல்லோ-பிளாக், வொயிட்-பிளாக், கிரே-பிளாக், ப்ளூ-பிளாக் உள்ளிட்ட 5 டூயல்-டோன் கலர் ஆப்ஷன்களில் வரும் இந்த இ-ஸ்கூட்டருக்கு AMO நிறுவனம் மூன்று ஆண்டு வாரண்டியை வழங்குகிறது.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Electric bike

அடுத்த செய்தி