Home /News /automobile /

தார் கார் முழுவதும் அமிதாப் டையலாக் - நெகிழ்ந்துபோன ஆனந்த் மஹிந்திரா!

தார் கார் முழுவதும் அமிதாப் டையலாக் - நெகிழ்ந்துபோன ஆனந்த் மஹிந்திரா!

ஆனந்த் மஹிந்திரா

ஆனந்த் மஹிந்திரா

இதனை அமிதாப் பச்சன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டு தன்னுடைய நெகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
தார் கார் முழுவதும் அமிதாப்பச்சனின் டையலாக்கை எழுதி, அந்த காரை அவரிடம் காட்டி ஆட்டோகிராஃப் பெற்ற ரசிகர் ஒருவரின் புகைப்படத்தைப் பார்த்து ஆனந்த் மகிந்திரா மகிழ்ச்சியடைந்துள்ளார்.

மஹிந்திரா நிறுவனம் லேட்டஸ்டாக அறிமுகப்படுத்திய தார் கார் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்தக் காரை அமிதாப்பச்சனின் தீவிர ரசிகர் ஒருவர் அண்மையில் வாங்கியுள்ளார். பின்னர், காரை ஆல்ட்ரேஷனுக்கு எடுத்துச் சென்று டோர், முன்புறம், பின்புறம் என அனைத்து இடங்களிலும் அமிதாப்பச்சன் 1970 முதல் 80-கள் வரை நடித்த திரைப்படத்தில் இடம்பெற்ற டையலாக்குகளை ஸ்டிகர்களாக எழுதி ஒட்டியுள்ளார். மேலும், தார் காரின் கதவைத் திறந்தால், அமிதாப்பச்சனின் டையலாக் ஒலிக்கும் வகையில் சவுண்ட் சிஸ்டமும் செட் செய்யப்பட்டுள்ளது.



அந்த ரசிகரின் பெயர் அனுராக். கார் வாங்கி இவ்வளவு ஆல்ட்ரேஷன் செய்த அவர், அமிதாப் வந்து ஆட்டோகிராப் வழங்காத வரை காரை ஓட்டப்போவதில்லை என்பதில் உறுதியாக இருந்துள்ளார். மேலும், அமிதாப்பிடம் ஆட்டோகிராஃப் வாங்கவும் முயற்சி செய்துள்ளார். இந்த தகவல் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனையும் சென்றடைந்தது. அவரும் அனுராக்கை பார்க்க ஒப்புக்கொண்டார்.

பின்னர் அனுராக்கின் தார் காரின் ஆல்ட்ரேஷனைப் நேரில் பார்த்து அமிதாப் பச்சன் மிகவும் ஆச்சரியம் அடைந்துள்ளார். கார் முழுவதும் சுற்றிப் பார்த்த அமிதாப் பச்சன், டோரை ஓபன் செய்யும்போது, தன் படத்தில் இடம்பெற்ற வசனங்களையும் கேட்டுள்ளார். இது அவருக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தது. அனுராக்கின் ஆசையின்படி, தார் காரில் பல்வேறு இடங்களில் ஆட்டோகிராப் போட்ட அமிதாப், அவருடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.

இதனை அமிதாப் பச்சன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டு தன்னுடைய நெகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இந்த தகவலையறிந்த ஆனந்த் மஹிந்திரா, அமிதாப் அவருடைய ரசிகருக்கு தார் காரில் ஆட்டோகிராப்போடும் புகைப்படத்தை டிவிட்டரில் பதிவு செய்து தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். மேலும், அமித்தாப்பின் ரசிகர் அனுராக்கிற்கும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

Also read... அடுத்த ஆண்டில் வெளிவரவிருக்கும் அட்டகாசமான 5 எஸ்யூவி கார்கள்!

மஹிந்திரா தார் கார் 2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் மற்றும் 2.2 லிட்டர் டீசல் பவர்டிரெய்ன் என இரு வேரியண்டுகளில் கிடைக்கிறது. இரண்டு என்ஜின்களிலும் 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷினை வழங்கக்கூடியது. க்ருசே கன்ட்ரோல், 7 இன்ச் டச்ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட், ஆப்பிள் கார்பிளே, கிளைமேட் கன்ட்ரோல் உள்ளிட்ட அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.

இந்த கார் அறிமுகத்தின்போது, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்த இந்திய அணி, அந்நாட்டை வீழ்த்தி டெஸ்ட் தொடரை கைப்பற்றி சாதனை படைத்திருந்தது. இதற்கு பரிசாக இந்திய அணியில் இடம்பெற்றிருந்த அனைவருக்கும் ஆனந்த் மகிந்திரா தார் காரை பரிசாக வழங்கி கௌவரப்படுத்தினார்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Amithab bachchan, Anand Mahindra, Thar

அடுத்த செய்தி