• HOME
  • »
  • NEWS
  • »
  • automobile
  • »
  • விலை உயர்ந்த எம்.பி.வி காரை வாங்கிய முதல் இந்தியப் பிரபலம் அமிதாப் பச்சன்!

விலை உயர்ந்த எம்.பி.வி காரை வாங்கிய முதல் இந்தியப் பிரபலம் அமிதாப் பச்சன்!

அமிதாப் பச்சன் (Image: Auto Hangar Mercedes-Benz)

அமிதாப் பச்சன் (Image: Auto Hangar Mercedes-Benz)

V-க்ளாஸ் எக்ஸ்க்ளூசிவ் 81.90 லட்சம் ரூபாய்க்கும் V- க்ளாஸ் எக்ஸ்ப்ரெஷன் 68.40 லட்சம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன் புதிதாக மெர்சிடிஸ் பென்ஸ் V-க்ளாஸ் எம்.பி.வி ரக காரை வாங்கியுள்ளார்.

81.90 லட்சம் மதிப்புள்ள இந்த எம்.பி.வி ரக காரை வாங்கும் முதல் இந்தியப் பிரபலம் அமிதாப் பச்சன். இந்தியப் பிரபலங்கள் பெரும்பாலும் செடான் அல்லது எஸ்.யூ.வி ரக கார்களையே வாங்க விரும்புவர்.

இந்தக் கரை அமிதாப் பச்சன் மும்பை ஆட்டோ ஹேங்கர் டீலர் மூலம் வாங்கியுள்ளார். இந்தியாவில் விலை உயர்ந்த எம்.பி.வி காராக மெர்சிடிஸ் பென்ஸ் V-க்ளாஸ் கார் உள்ளது. V-க்ளாஸ் எக்ஸ்க்ளூசிவ் 81.90 லட்சம் ரூபாய்க்கும் V- க்ளாஸ் எக்ஸ்ப்ரெஷன் 68.40 லட்சம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது. மெர்சிடிஸ் பென்ஸ் V- க்ளாஸ் இந்தியாவில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் தான் அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தக் கார் மணிக்கு 100 கி.மீ வேகத்தை 10.9 விநாடிகளில் அடையும். டார்க் வெளியீடு 380Nm ஆக உள்ளது. 6 ஏர் பேக்குகள், பார்கிங் அசிஸ்ட், 360 டிகிரி கேமிரா என ஐந்து வண்ணங்களில் விற்பனையில் உள்ளது இந்த ஸ்பெயின் தயாரிப்பு எம்.பி.வி.

மேலும் பார்க்க: கருணாநிதிக்கு வெளிநாட்டில் சிகிச்சை அளிக்காதது ஏன்? - முதல்வர் பழனிசாமி





தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Rahini M
First published: