Union
Budget 2023

Highlights

ஹோம் /நியூஸ் /ஆட்டோமொபைல் /

மீண்டும் சந்தைக்கு வருகிறது இந்திய சாலைகளின் ராஜாவான அம்பாசிடர் கார்!

மீண்டும் சந்தைக்கு வருகிறது இந்திய சாலைகளின் ராஜாவான அம்பாசிடர் கார்!

மீண்டும் சந்தைக்கு வருகிறது இந்திய சாலைகளின் ராஜாவான அம்பாசிடர் கார்!

மீண்டும் சந்தைக்கு வருகிறது இந்திய சாலைகளின் ராஜாவான அம்பாசிடர் கார்!

அதிகபட்சமாக, 1999-2000 ஆவது நிதியாண்டில் ஒரு லட்சத்து 90 ஆயிரம் அம்பாசிடர் கார்கள் விற்பனையாக, 2004ம் ஆண்டில் மட்டும் 9 லட்சம் கார்கள் உற்பத்தி செய்யப்பட்டன.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :

இந்திய சாலைகளின் ராஜா என வர்ணிக்கப்பட்ட அம்பாசிடர் கார், பல்வேறு தொழில்நுட்ப அம்சங்களுடன் மேம்பட்ட வடிவமைப்பில் மீண்டும் சந்தைக்கு வர உள்ளது. எம்,.ஜி. ஆர் போன்ற பெருந்தலைவர்கள் பலரும் விரும்பி பயன்படுத்திய, அம்பாசிடர் காரை பற்றி விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு...

 இந்திய கார் சந்தையின் வரலாற்றை அம்பாசிடரின் பெயரை குறிப்பிடாமல் எழுதுவது என்பது சாத்தியமற்றது. 80, 90-களில் நாட்டின் பெரும் தலைவர்களின் வீட்டு வாசல் முதற்கொண்டு, ரயில் மற்றும் விமான நிலையங்களில் டாக்சிகள் என, எங்கு பார்த்தாலும் அம்பாசிடர் கார்கள் மட்டுமே நிரம்பிக் கிடந்தன. இங்கிலாந்தை சேர்ந்த மோரிஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் மோரீஸ் ஆக்ஸ்போர்ட் சீரிஸ் III மாடல் காரை சற்றே மாற்றியமைத்து, நாட்டின் முதல் டீசல் கார் எனும் பெருமையுடன், 1957ம் ஆண்டு அம்பாசிடர் காரை ஹிந்துஸ்தான் மோட்டார் நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வந்தது.

குண்டும், குழியுமான மோசமான இந்திய சாலைகளையும் எளிமையாக கடக்கும் திறன், அதிக உறுப்பினர்களை கொண்ட பெரிய குடும்பத்தினரும் ஒரே நேரத்தில் பயணிக்கும் அளவிலான இடவசதி, குறைந்த திறன் கொண்ட மெக்கானிக்கும் எளிதில் பழுது பார்க்கும் வகையிலான வடிவமைப்பு மற்றும் உறுதியான கட்டமைப்பு ஆகியவற்றின் மூலம் கார் பிரியர்களை அம்பாசிடர் வெகுவாக கவர்ந்தது.

காரில் இருந்து வெளிப்படும் கர்ஜனையான சத்தம், கம்பீரமான தோற்றத்துடன், அதிகாரத்தை குறிப்பிடும் சிவப்பு விளக்கு பொருத்தப்பட்ட, அம்பாசிடர் காரில் பயணிப்பது கவுரவமாக கருதப்பட்டது.

இதனால் பிரதமர் உள்ளிட்ட அரசின் வி.வி.ஐ.பிகளுக்கும் அந்த கார்களே பயன்படுத்தப்பட்டன. அம்பாசிடரின் மொத்த உற்பத்தியில் 16 சதவிகிதத்தை இந்திய அரசே வங்கியதின் விளைவாகவே, இன்றளவும் நாடாளுமன்ற வளாகத்தை அதிகப்படியான அம்பாசிடர் கார்கள் ஆக்கிரமித்து இருப்பதை காண முடிகிறது.

தமிழக முதலமைச்சர்கள் காமராஜர், ஜெயலலிதா மற்றும் கருணாநிதி ஆகியோரும் அம்பாசிடர் கார்களையே பயன்படுத்த, மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் சொந்தமாகவே இரண்டு அம்பாசிடர் கார்களை வைத்திருந்தார். தான் முதன் முதலில் வாங்கிய அம்பாசிடர் கார் எனது வாழ்வின் ஒரு அங்கம் என, பாமக நிறுவனர் ராமதாஸ் சிலாகித்து கூறியதுண்டு. அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் என பலரும் அம்பாசிடர் கார்களை விரும்பி பயன்படுத்த, அதன் புகழ் பட்டி தொட்டியெல்லாம் பரவியது. இதனால் இந்தியாவில் கார் என்றாலே அனைவருக்கும் அம்பாசிடரின் உருவம் நினைவுக்கு வர, அது இந்திய சாலைகளின் ராஜா என வர்ணிக்கப்பட்டது.

உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட முதல் கார் எனும் பெருமையை கொண்ட அம்பாசிடர் காரில், BS-IV இன்ஜின்கள் வரை 7 வகையான மாடல்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதனால் தனிப்பயன்பாட்டை தாண்டி, நாட்டின் பொது பயன்பாட்டிலும் டாக்சிகளாக அம்பாசிடர் கார் கோலோச்சியது. இந்தியாவில் 70 சதவிகித கார் சந்தையை அம்பாசிடர் ஆக்கிரமிக்க, 80களின் மத்தியில் ஆண்டுக்கு 20 ஆயிரம் கார்கள் விற்பனையாகின.

அதிகபட்சமாக, 1999-2000 ஆவது நிதியாண்டில் ஒரு லட்சத்து 90 ஆயிரம் அம்பாசிடர் கார்கள் விற்பனையாக, 2004ம் ஆண்டில் மட்டும் 9 லட்சம் கார்கள் உற்பத்தி செய்யப்பட்டன.

அதேநேரம், 80-களுக்கு பிறகு மாருதி போன்ற போட்டி நிறுவனங்கள் உருவானதுடன், சந்தைபடுத்துதலில் புதிய உத்திகள் இல்லாதது, புதிய தலைமுறை வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாதது, அதிகப்படியான விலை, மேம்படுத்தப்பட்ட இன்ஜின்களை அறிமுகப்படுத்தாதது போன்ற காரணங்களால் அம்பாசிடரின் சரிவு தொடங்கியது. 2010-வாக்கில் ஆண்டுக்கு வெறும் இரண்டாயிரம் கார்கள் மட்டுமே விற்பனையாகின. இதனால், நீண்ட நாட்கள் உற்பத்தி செய்யப்பட்ட கார் எனும் பெருமையை கொண்ட அம்பாசிடரின் உற்பத்தி, 2014ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நிறுத்தப்பட்டது.

நிதி சிக்கலை தவிர்ப்பதற்காக ஹிந்துஸ்தான் மோட்டார் நிறுவனத்தின் உரிமையாளரான பிர்லா குழுமம், அம்பாசிடர் காரின் பிராண்டை வெறும் 80 கோடி ரூபாய்க்கு பிரெஞ்சு கார் பிராண்டான பியூஜியோட்டிற்கு 2017ல் விற்பனை செய்தது.

இந்நிலையில், பியூஜியோட் நிறுவனத்துடன் இணைந்து மீண்டும் மேம்படுத்தப்பட்ட அம்பாசிடர் கார்களை தயாரிக்க உள்ளதாக, ஹிந்துஸ்தான் மோட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது. ஆம்பி என அழைக்கப்படும் அந்த காரின், மெக்கானிக்கல் மற்றும் வடிவமைப்பு வேலைகள் மேம்பட்ட நிலையை எட்டியுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளில் 600 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தின் மூலம், தமிழகத்தின் திருவள்ளூரில் உள்ள உற்பத்தி ஆலையில், ஆம்பி கார்கள் உற்பத்தி செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

-  குலசேகரன் முனிரத்தினம்..

First published:

Tags: Car