1 லட்சம் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கும் அமேசான் - காற்று மாடுபாடைக் குறைக்க புது திட்டம்

காடுகள் மற்றும் ஈர நிலங்களைப் பாதுகாக்க 100 மில்லியன் அமெரிக்க டாலர்களையும் முதலீடு செய்கிறது.

Web Desk | news18
Updated: September 21, 2019, 12:36 PM IST
1 லட்சம் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கும் அமேசான் - காற்று மாடுபாடைக் குறைக்க புது திட்டம்
அமேசான் எலெக்ட்ரிக் ட்ரக்
Web Desk | news18
Updated: September 21, 2019, 12:36 PM IST
வருகிற 2040-ம் ஆண்டுக்குள் கார்பன்- நியூட்ரல் நிறுவனமாக மாற அமேசான் டெலிவரிக்காக சுமார் 1 லட்சம் எலெக்ட்ரிக் வாகனங்களைப் பயன்படுத்தப் போவதாக அமேசான் அறிவித்துள்ளது.

அமேசான் நிறுவனம் ஆண்டுக்கு 10 பில்லியன் பொருட்களை சர்வதேச அளவில் டெலிவரி செய்து வருகிறது. இதற்காகப் பயன்படுத்தும் வாகனங்கள் மூலம் அதிகப்படியான கார்பன் வெளியேற்றம் இருப்பதாக அமேசான் உணர்ந்துள்ளது. சுற்றுச்சூழலைக் காக்க புதிய உறுதிமொழி ஒன்றையும் இந்நிறுவனம் எடுத்துள்ளது.

இதன் அடிப்படையில் வருகிற 2040-ம் ஆண்டுக்கும் ‘கார்பன்- நியூட்ரல்’ நிறுவனமாக மாறவும் பாரீஸ் காலநிலை ஒப்பந்தத்தைப் பின்பற்றுவதையும் குறிக்கோளாகக் கொண்டு செயல்படப்போவதாக அமேசான் சிஇஓ ஜெஃப் பீசோஸ் தெரிவித்துள்ளார். இதற்காக ஒற்றைப் பயன்பாடு ப்ளாஸ்டிக் முறையையும் அமேசான் ஒழித்துள்ளது.


மேலும், 2024-ம் ஆண்டுக்குள் 1 லட்சம் எலெக்ட்ரிக் வாகனங்களை டெலிவரி பயன்பாட்டுக்குக் கொண்டு வர உள்ள அமேசான் 2030-ம் ஆண்டுக்குள் முற்றிலும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை மட்டுமே பயன்படுத்தப்போவதாக அறிவித்துள்ளது. இதனுடன் காடுகள் மற்றும் ஈர நிலங்களைப் பாதுகாக்க 100 மில்லியன் அமெரிக்க டாலர்களையும் முதலீடு செய்கிறது.

மேலும் பார்க்க: ₹52 ஆயிரம் வரையில் விலைத் தள்ளுபடி... மஹிந்திரா கார்களுக்கு அதிரடி ஆஃபர்!

விஜய் பேச்சும்.. அரசியல்வாதிகளின் எதிர்வினையும்...

Loading...

First published: September 21, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...