அமேசான் நிறுவனத்தின் ரோபோ டாக்சி - பாதுகாப்பு அம்சங்கள் என்னென்ன?

அமேசான் நிறுவனத்தின் ரோபோ டாக்சி

அமேசான் நிறுவனத்தின் ரோபோ டாக்சி கார் எப்படி இயங்கும்? பாதுகாப்பு அம்சங்கள் என்னென்ன? என்ற முன்னோட்டத்தை ஜூக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

  • Share this:
அமேசான் நிறுவனத்தின் கீழ் இயங்கும் ஜூக்ஸ் நிறுவனம் உருவாக்கியுள்ள தானியங்கி ரோபோ டாக்சியின் பாதுகாப்பு அம்சங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அமேசான் நிறுவனம் கடந்த ஆண்டு ஜூக்ஸ் நிறுவனத்தை வாங்கியது. மின்சார வாகனங்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் அந்நிறுவனம், தானியங்கி ரோபோ டாக்சியை வடிவமைத்துள்ளது. ஜூக்ஸ் ஏ.வி (Zoox AV) எனப் பெயரிடப்பட்ட இந்தக் கார் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதன்முதலாக மக்களின் பார்வைக்காக அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில், அந்த கார் எப்படி இயங்கும்? பாதுகாப்பு அம்சங்கள் என்னென்ன? என்ற முன்னோட்டத்தை ஜூக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

தேசிய நெடுஞ்சாலைத்துறையின் கணக்கெடுப்பின்படி, நாட்டில் நிகழும் சாலை விபத்துகளில் 94% மனித தவறுகளால் நடைபெறுவதாக கூறியுள்ளது. உலகளவில் நாளொன்றுக்கு 3 ஆயிரம் பேர் சாலை விபத்தில் இறப்பதாகவும் தெரிவித்துள்ளது.இந்த விபத்துகளைக் குறைக்கவும், விலைமதிப்பற்ற மனித உயர்களை காப்பாற்றவதையும் அடிப்படையாகக் கொண்டு முற்றிலும் மின்சாரம் மற்றும் சென்சார் கருவிகளால் இயங்கக்கூடிய தானியங்கி கார்களை ஜூக்ஸ் உருவாக்கியுள்ளது. எதிர்காலத்தில் உருவாக்க வேண்டிய புரோஜெக்ட் டைப் காராக இல்லாமல், முற்றிலும் சாலையில் இயங்கக்கூடிய வகையில் ஜூக்ஸ் தானியங்கி கார்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

ALSO READ |  Royal Enfield: புது வடிவமைப்புடன் கஸ்டமைஸ் செய்யப்பட்ட ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் எஸ்ஜி 411!

காரில் ஸ்டீயெரிங் மற்றும் பிரேக் பெடல்கள் இருக்காது. இரண்டு பயணிகள் இருக்கை எதிரெதிராக அமைக்கப்பட்டிருக்கும் அதிகப்பட்சம் 4 பேர் வரை அமர்ந்து கொள்ளலாம். நகர்புறத்தை பயணங்கள் விபத்துகளில்லாமல், அமைதியான பயணமாக இருக்க வேண்டும் என்பதை அடிப்படையாகக்கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த கார் முழுவதும் சென்சார்கள் இருக்கும். 150 மீட்டர் சுற்றளவில் சுற்றுப்புறச்சூழல் காரணிகளை உடனடியாக பகுப்பாய்ந்து, அதற்கேற்ப கார் இயங்கும். காரின் வீல்களைப் பொறுத்தவரை இரு திசைகளிலும் இயங்கக்கூடிய வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.ஜூக்ஸ் நிறுவனத்தின் தலைமைப் பாதுகாப்பு அதிகாரி மார்க் ரோஸ்கைன்ட், ஜூக்ஸ் தானியங்கி காரின் பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் எதிர்கால இலக்குகள் குறித்த ரிப்போர்டை வெளியிட்டார். அப்போது பேசிய அவர், சாலை விபத்துகள் மூலம் ஏற்படும் விலைமதிப்பற்ற உயிர்களை காப்பாற்றவும், காயங்களை குறைக்கவும், சாலை விபத்துகள் ஏற்படாமல் தடுப்பதற்கான முயற்சியை முன்னெடுத்துள்ளது எனக் கூறினார். இதற்காக பல்வேறு ஆய்வுகளின் அடிப்படையில் ரோபோ டாக்சியின் பாதுகாப்பு அம்சங்கள் மேம்படுத்தப்பட்டிருப்பதாகவும் மார்க் ரோஸ்கைன்ட் தெரிவித்தார்.

ALSO READ |  Bajaj M80 தோற்றத்தில் களமிறங்கும் Honda Super Cub 125!

ஜூக்ஸ் ரோபோடிக் டாக்சிகள், அவை இருக்கும் இடத்தையும், அவற்றின் சுற்றுப்புறத்தையும் அறிந்து கொள்வதற்காக மேப்பிங் சிஸ்டத்தை பயன்படுத்தும். பிஸிக்கல் சென்சாருடன் இணைந்து செயல்படும் இந்த மேப்பிங் சிஸ்டம், வாகனம் இயங்குவதற்கான துல்லியமான தகவல்களை சேகரிக்கும். ஒரே நேரத்தில் பல்வேறு சென்சார்கள் இணைந்து செயல்பட்டு தகவல்களை வேகமாக சேகரித்து டாக்சி இயங்குவதற்கான ஆற்றலையும். கன்ட்ரோலையும் கொடுக்கின்றன. லைடார் சென்சார்கள் மேப் மற்றும் சுற்றுப்புறத்தையும் மூன்று விதமான கோணங்களில் ஆராயும். ராடார் சென்சார்ஸ் 360 டிகிரியில் காரின் இருப்பிடத்தை பகுப்பாயும்.இந்த சென்சார்களில் இருக்கும் தகவல்களைக் கொண்டு, செல்லும் போக்கும், மற்ற கார்களின் நடவடிக்கைகள் ஆராயப்பட்டு, அதற்கேற்ப கன்ட்ரோல் அல்லது செல்லும் வேகம் தீர்மானிக்கப்படும். பயணம் செய்பவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஜூக்ஸ் தானியங்கி கார்களில் பிரேக்கிங் மற்றும் சஸ்பென்ஸ்ஸன் அமைப்புகள், விபத்துகளை தடுப்பதற்கான சாத்தியக் கூறுகளில் கூடுதல் கவனத்தை செலுத்தியுள்ளது. ஒவ்வொரு சக்கரமும் சுதந்திரமாகவும், சூழலுக்கு ஏற்ப உடனடியாக இயங்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளன.

ALSO READ |  பட்ஜெட் விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள டாடா டியாகோ எக்ஸ்.டி (ஓ) வாகனம்: விவரங்கள் உள்ளே!

பிரேக் பொறுத்தவரை சூழலை ஆராய்ந்து ஆட்டோமேடிக்காக கன்ட்ரோல் செய்யும் வகையிலும், சிறிது தொலைவுக்கு முன்பே கார்கள் நிலையாக நிற்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளன. முன்கூட்டியே எதிர்வரும் கார்களை கணித்து, அதற்கேற்ப ரோபோ டாக்சி நிற்கும் என்பதால் விபத்துகள் ஏற்படும் வாய்ப்பு தவிர்க்கப்படும்.

 சாலையில் இருக்கும் மேடு, பள்ளங்களுக்கு ஏற்ப சக்கரங்கள் உடனடியாக தகவமைத்துக் கொள்ளும். ஒரேநேரத்தில் வாகனத்தின் வேகம், நிலைத்தன்மை மற்றும் அதனின் ஆற்றல் என மூன்றும் கட்டுப்படுத்த முடியும். சாலை வளைவுகளை கன்ட்ரோலாக கடக்கும் வகையில் சென்சார்கள் இயங்கும். ரோபோ டாக்சியின் முன்னோட்டம் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் மட்டுமே வெளியிடப்பட்டிருக்கும் நிலையில், அதன் உற்பத்தி மற்றும் விற்பனை பற்றிய தகவல்களை ஜூக்ஸ் வெளியிடவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Sankaravadivoo G
First published: