• HOME
 • »
 • NEWS
 • »
 • automobile
 • »
 • சாலை பாதுகாப்பு வாரம் - எதற்காக...? என்ன நடக்கும்..?

சாலை பாதுகாப்பு வாரம் - எதற்காக...? என்ன நடக்கும்..?

News18

News18

 • News18
 • Last Updated :
 • Share this:
  இந்தியா முழுவதும் 11 ஜனவரி 2020 முதல் 17 ஜனவரி 2020 வரை சாலை பாதுகாப்பு வாரம் நடக்கிறது. இது 31 வது சாலை பாதுகாப்பு வாரமாகும். துணைக் கண்டம் முழுவதும் வீதிகளை பாதுகாப்பானதாக மாற்றும் நோக்கத்தை மேற்கொண்டு ஒரு வாரம் முழுவதும் நீடித்து முயற்சிக்கிறது. இந்தியாவின் சாலைகளை முற்றிலும் விபத்து இல்லாத மண்டலமாக மாற்ற, விழிப்புணர்வை பரப்புவதற்கான பல்வேறு முறைகள் செயல்படுத்தப்படும்.

  சாலை பாதுகாப்பு வாரத்திற்க்கான தேவைகளின் காரணங்கள் என்ன?

  2015-ம் ஆண்டில், சாலை விபத்துக்கள் மற்றும் விபத்துக்களின் எண்ணிக்கையை பாதியாகக் குறைக்க இந்தியா தன் மீது உறுதி எடுத்துக் கொண்டது. பிரேசிலியா உறுதிமொழியில் கையெழுத்திட்டு இதனை முடிவு செய்யப்பட்டது. இருப்பினும், இது ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகும், நிறைவேறாத கனவாகவே உள்ளது. கார் விபத்துக்களில் இறப்பவர்களின் எண்ணிக்கை 2016 இல் 1.50 லட்சத்தில் இருந்த எண்ணிக்கை, 2017 இல் 1.47 லட்சமாக குறைந்த நிலையில் காணப்பட்டது, ஆனால் இது 2018 இல் 1.49 லட்சமாக அதிகரித்துவிட்டது. இதுதான் இந்தியாவின் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்ட கடைசி அறிக்கை ஆகும்.

  இதனால், விழிப்புணர்வை பரப்புவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை சாலை பாதுகாப்பு வாரம் நடத்தவுள்ளது.

  சாலை பாதுகாப்பு வாரத்தின் போது என்ன நடக்கும்?

  இந்தியாவில் சாலை பாதுகாப்பு வாரத்தின் போது, போலீஸ் படைகள் மற்றும் தெரு பாதுகாப்புக்காக பணிபுரியும் பிற துறைகள் 1988-ம் ஆண்டின் மோட்டார் வாகனச் சட்டம் மற்றும் 2019-ம் ஆண்டின் மோட்டார் வாகனங்கள் (திருத்த) மசோதா குறித்து விழிப்புணர்வை பரப்புகின்றனர். அரசாங்கத்தால் வகுக்கப்பட்டுள்ள விதிமுறைகள் குறித்து மக்களுக்குச் சொல்ல அல்லது அவர்களிடம் கொண்டுச்செல்ல பல அமர்வுகள், கருத்தரங்குகள் மற்றும் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்படும். இது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவது மட்டுமல்லாமல், பேனர்கள், துண்டு பிரசுரங்கள் மற்றும் ஹேண்ட்-அவுட்கள் வழியாக மக்களுக்கு கல்வியை கற்பிக்கும். அவசர அழைப்பு எண்களைக் கொண்ட பலகைகளை பல்வேறு இடங்களில் வைக்கப்படும்.

  2019-ம் ஆண்டின் மோட்டார் வாகனங்கள் (திருத்தம்) மசோதா என்ன?

  அசல் மோட்டார் வாகனச் சட்டம் 1988 இல் தொடங்கப்பட்டாலும், ஒரு திருத்த மசோதா 2019 இல் தொடங்கப்பட்டது. மாநில போக்குவரத்து அமைச்சர்கள் குழுவின் பல பரிந்துரைகளின் அடிப்படையில், பல்வேறு முக்கிய விஷயங்கள் உள்ளடக்கப்பட்டது. விதிமுறை மீறல்களுக்கு விதிக்கப்படும் அபராதங்களை அதிகரிப்பதன் வாயிலாக இது தொடங்கியிருந்தாலும், ஓட்டுநர் உரிமம் புதுப்பிக்கும் காலத்தை ஒரு மாதத்திலிருந்து ஒரு வருடமாக நீட்டிக்கவும், சாலை விபத்துக்களில் சிக்கியவர்களுக்கு அவசர மருத்துவ உதவிகளை வழங்கவும். மேலும், ஓட்டுநர் தனது உரிமத்தை புதுப்பிக்கும்போது தனது திறனை மீண்டும் நிரூபிக்க வேண்டும். கூடுதலாக, விபத்துகளின் போது இறப்பு அல்லது பெரிய காயத்திற்கான குறைந்தபட்ச இழப்பீடு அதிகரிக்கப்பட வேண்டும்.

  எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய மற்றும் பின்பற்ற வேண்டிய பொதுவான சாலை பாதுகாப்பு விதிகள் என்ன?

  ஒவ்வொரு குடிமகனும் இந்தியாவின் சாலைப் பாதுகாப்பை பற்றி விமர்சிக்க ஒரு வாய்ப்பை கூட நழுவவிடுவதில்லை என்றாலும், அடி மட்டத்தில் இருந்து நீங்கள் செய்யக்கூடியது இன்னும் நிறைய உள்ளன. நாம் எப்போதும் பின்பற்றி நினைவில் கொள்ள வேண்டிய பல அடிப்படை போக்குவரத்து விதிகள் உள்ளன. போக்குவரத்து விளக்குகளைப் பின்தொடர்வது மிகவும் எளிமையான விஷயம் என்றாலும், நீங்கள் சாலை அறிகுறிகளிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், வாகனம் ஓட்டும்போது ஒரே கோட்டில் செல்ல வேண்டும், தேவைப்படும்போது குறிகாட்டிகளைப் பயன்படுத்த வேண்டும், காலாவதியான ஓட்டுநர் உரிமத்துடன் நீங்கள் வாகனம் ஓட்டுவதற்கு செல்லவில்லை என்பதை சரிபார்த்துக்கொள்ளுங்கள். ‘எல்’ மற்றும் ‘போர்டில் பேபி’ போன்ற அறிகுறிகளை பொருத்தி உங்களின் அருகில் வாகனம் ஓட்டும் மற்றவர்களை மிகவும் கவனமாக ஓட்ட எச்சரிக்கலாம். கடைசியாக, ஆனால் எதற்கும் குறைவானது அல்ல, தயவுசெய்து உங்கள் வாகனங்களை பார்க்கிங் மண்டலங்களில் மட்டும் நிறுத்துங்கள்.

  #RoadToSafety இன் இந்த சில விஷயங்களை மனதில் வைத்துக்கொண்டு இந்த #RoadSafetyWeek இல் பாதுகாப்பு பாதையை நோக்கிச் செல்ல மற்றும் #DriveResponsibly ஐ உறுதிமொழியாக எடுத்துக்கொள்வோம்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Sankar
  First published: