பலருக்கும் பயணம் என்றாலே மகிழ்ச்சியாக இருக்கும். அதிலும் ரயில் பயணம் என்றால் சொல்லவே வேண்டாம். ஆனால், ரயில் முதல் விமானம் வரை, பெரிய பெரிய பெட்டிகள், பைகள், மூட்டைகள் என்று பல விதமான லக்கேஜை பார்க்கிறோம். அதிலும், ரயில் பயணத்தில் மூட்டை முடிச்சுகளுடன் காணப்படும் குடும்பங்கள் ஏராளம். எந்த வகையான போக்குவரத்தாக இருந்தாலும், ஒரு நபர் ஒரு குறிப்பிட்ட வரம்பு வரைக்கும் தான் பொருட்களை கொண்டு செல்ல அனுமதி உண்டு. பேருந்து முதல் விமானம் வரை, இது பொருந்தும். அந்த வரிசையில், ரயில் பயணத்தில், கூடுதலாக எடை கொண்ட, அதிக லக்கேஜ்களுடன் பயணித்தால் அதற்கு அபராதம் செலுத்த வேண்டும். IRCTC லக்கேஜ் விதிகள் பற்றி இங்கே பார்க்கலாம்.
ஒவ்வொரு நபரும் தங்களின் பயணத்துக்கான டிக்கெட்டை முன்பதிவு செய்யும் போது, எந்த வகுப்பில் டிக்கெட் புக் செய்கிறாரோ, அதற்கு ஏற்றார் போல அவர்கள் லக்கேஜிற்கான ஸ்லாட்டையும் பிரேக் வேனில் முன்பதிவு செய்யலாம்.
ஏற்கனவே இருக்கும் ரயில் லக்கேஜ் விதிகளின் படி, பின்வரும் வரம்பின் படி பயணிகள் இலவசமாக லக்கேஜ் கொண்டு செல்லலாம்/
- AC முதல் வகுப்புப் பயணிகளுக்கு 70 கிலோ வரை இலவசமாக லக்கேஜ் கொண்டு செல்ல அனுமதி உண்டு
- AC இரண்டாம் வகுப்புப் பயணிகளுக்கு 50 கிலோ வரை இலவசமாக லக்கேஜ் கொண்டு செல்ல அனுமதி உண்டு
- AC மூன்றாம் வகுப்பு மற்றும் சேர்-கார் பெட்டிகளில் பயணிப்பவர்கள் இலவசமாக 40 கிலோ வரை லக்கேஜ் கொண்டு செல்ல அனுமதி உண்டு
- இரண்டாம் வகுப்பு ஸ்லீப்பர் கோச் பயணிகள் இலவசமாக 40 கிலோ வரை லக்கேஜ் கொண்டு செல்ல அனுமதி உண்டு
ALSO READ | முகநூல் காதலியை தேடி சென்ற இளைஞர் மாயம் - விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்
எடை மட்டுமில்லாமல், பெட்டிகளின் / பைகளின் அளவீடுகளையும் வழங்க வேண்டும். பெட்டிகளின் நீளம், அகலம் மற்றும் திக்நெஸ் தற்கு மேல் இருக்கக் கூடாது என்ற வரைமுறையும் உள்ளது. அதன் படி, சூட்கேசாக இருந்தாலும் சரி, அட்டை / மரப்பெட்டிகளாக இருந்தாலும் சரி, அதிகபட்சமாக 100 cm X 60 cm X 25 cm என்ற அளவை மீறக் கூடாது.
மேலே கொடுக்கப்பட்ட அளவு மற்றும் எடை வரம்புகளை மீறும் லக்கேஜ்களுக்கு, பயணிகள் பிரேக் வேனில் தனிப்பட்ட இடத்தை கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்ய வேண்டும். கடந்த ஜூன் மாதம், இந்தியன் ரயில்வேயில் லக்கேஜ் விதிகள் மாறப்போகிறது என்றும், ஏற்கனவே உள்ள எடை வரம்புகள் குறைக்கப்படலாம் என்றும் கூறப்பட்டன. ஆனால், ரயில்வே அமைச்சகம் அதனை மறுத்து, டிவிட்டரில் செய்தி வெளியிட்டது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.