ஹோம் /நியூஸ் /ஆட்டோமொபைல் /

Mahindra Scorpio-N முதல் kia EV6 வரை.. ஜூன் 2022-ல்  இந்தியாவில் அறிமுகமாக உள்ள கார்களின் பட்டியல்

Mahindra Scorpio-N முதல் kia EV6 வரை.. ஜூன் 2022-ல்  இந்தியாவில் அறிமுகமாக உள்ள கார்களின் பட்டியல்

Kia EV6

Kia EV6

2022-ஆம் ஆண்டு துவங்கி 5 மாதங்கள் முடிவடைந்துள்ள நிலையில், இந்த ஜூன் மாதம் இந்திய ஆட்டோமொபைல் துறைக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.

  • Trending Desk
  • 3 minute read
  • Last Updated :

2022-ஆம் ஆண்டு துவங்கி 5 மாதங்கள் முடிவடைந்துள்ள நிலையில், இந்த ஜூன் மாதம் இந்திய ஆட்டோமொபைல் துறைக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். இந்த ஆண்டில் இதுவரை இல்லாத அளவில் பல புதிய கார்கள் ஜூன் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ளன. ஜூன் 2022-ல் நாட்டில் அறிமுகமாக உள்ள கார்களின் பட்டியல் இங்கே...

வோக்ஸ்வேகன் விர்டஸ் (Volkswagen Virtus):

மார்ச் மாதம் நடைபெற்ற உலகளாவிய வெளியீட்டிற்குப் பிறகு, வோக்ஸ்வேகன் விர்டஸ் ஜூன் இரண்டாவது வாரத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த Volkswagen Virtus காரானது Vento-வின் வாரிசாக வரும் ஜூன் 9-ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. வோக்ஸ்வேகன் தனது விர்டஸ் காரை டைனமிக் லைன் மற்றும் பெர்ஃபார்மன்ஸ் லைன் என இரண்டு டிரிம்களில் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இது 113bhp, 1-லிட்டர் TSI வேரியன்ட்கள் மற்றும் 148bhp, 1.5-லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் பேக்கிங் 250 Nm பீக் டார்க் ஆகியவற்றை பெறும்.

ஸ்கார்பியோ-என் (Scorpio-N):

"Big Daddy of SUVs" என்ற வாசகத்துடன் விளம்பரப்படுத்தப்படும் Scorpio-N காரை ஜூன் 27-ல் அறிமுகம் செய்கிறது மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம். ஹிந்திரா எக்ஸ்யூவி 700-க்குப் பிறகு, புதிய மஹிந்திரா லோகோவைப் பெறும் இரண்டாவது வாகனமாக வர உள்ளது இந்த 2022 ஸ்கார்பியோ-என். ஆல்-நியூ Scorpio-N காரானது 4X4 ஃபங்ஷனை ஆப்ஷனாக பெறும் என்று மஹிந்திரா அதிகாரப்பூர்வமாக ஒரு செய்தி குறிப்பில் உறுதிப்படுத்தியுள்ளது. Scorpio-N ஆனது XUV700 போன்ற அதே 2.0-லிட்டர் டர்போ-பெட்ரோல் மற்றும் 2.2-லிட்டர் டீசல் என்ஜின்களுடன் வரலாம். 8-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன், டூயல்-ஜோன் கிளைமேட் கன்ட்ரோல், பிளாட்-பாட்டம் ஸ்டீயரிங் வீல், சன்ரூஃப் மற்றும் பல அம்சங்களுடன் வரும்.

கியா இவி6 (Kia EV6):

கியா நிறுவனத்தின் புத்தம் புதிய இந்த எலெக்ட்ரிக் கார் காருக்கான புக்கிங்ஸ் கடந்த மே 26 முதல் தொடங்கப்பட்ட நிலையில், ஜூன் 2-ஆம் தேதி அறிமுகமாகி உள்ளது. இந்தியாவில் காரின் 100 யூனிட்கள் மட்டுமே இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. Kia EV6 இந்தியாவில் 12 இடங்களில் மட்டுமே கிடைக்கும். இதில் டெல்லி, மும்பை, புனே, அகமதாபாத், குருகிராம், நொய்டா, ஜெய்ப்பூர், சென்னை, பெங்களூரு, கொச்சி, ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா உள்ளிட்ட நகரங்கள் அடங்கும். Kia EV6 காரானது 77.4kWh பேட்டரி பேக்குடன் ரியர் வீல் டிரைவ் வேரியன்ட் 528 கிமீ ரேஞ்சை (அதாவது ஒருமுறை சார்ஜ் செய்தால் சுமார் 528 கிமீ தூரம்) கொண்டுள்ளது.

ஹூண்டாய் வென்யூ ஃபேஸ்லிஃப்ட் (Hyundai Venue facelift):

ஹூண்டாய் தற்போது வென்யூ சப்-காம்பாக்ட் எஸ்யூவி-க்கான மிட்-லைஃப் ஃபேஸ்லிஃப்டை அறிமுகப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்த மாதமே நாட்டில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய முன் கிரில் மற்றும் புதுப்பிக்கப்பட்ட ஹெட்லைட்கள், புதிய அலாய் வீல் வடிவமைப்பு மற்றும் புதிய ரேப்பரவுண்ட் எல்இடி டெயில் விளக்குகள் உட்பட பல ஸ்டைலிங் புதுப்பிப்புகளைக் கொண்டிருக்கும். 1.2 லிட்டர் NA பெட்ரோல், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. 2022 ஹூண்டாய் வென்யூவின் விலை ரூ. 8 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முதல் இருக்கலாம்.

புதிய மாருதி சுசுகி பிரெஸ்ஸா (New Maruti Suzuki Brezza):

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் சப்-காம்பாக்ட் SUV-க்களில் ஒன்றான விட்டாரா பிரெஸ்ஸா ஒரு ஜென்ரேஷனல் அப்டேட்டை பெற தயாராக உள்ளது. மாருதி சுசுகி காரின் பெயரிலிருந்து 'விட்டாரா' என்பதை கைவிட முடிவு செய்துள்ளது. பெயரைத் தவிர, எஸ்யூவியின் வெளிப்புற வடிவமைப்பு மற்றும் கேபின் ஆகியவை புதியதாக இருக்கும். இத்துடன் எலெக்ட்ரிக் சன்ரூஃப் அம்சத்துடன் வழங்கப்படும் முதல் மாருதி கார் இதுவாகும்.

சிட்ரோய்ன் சி 3 (Citroen C3):

பிரெஞ்சு வாகன உற்பத்தியாளரான சிட்ரோயன் நிறுவனம், தனது சி 3 காம்பாக்ட் எஸ்யூவி-யை இந்தியாவில் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த கார் மாருதி சுசுகி இக்னிஸ், மஹிந்திரா KUV100 NXT, டாடா பன்ச் போன்ற கார்களுக்கு நேரடி போட்டியாக இருக்கும். C3 ஆனது ஆண்ட்ராய்டு ஆட்டோவுடன் கூடிய 10 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், மேனுவல் ஏர் கண்டிஷனிங், ஸ்டீயரிங் பொருத்தப்பட்ட ஆடியோ கன்ட்ரோல்கள், கீலெஸ் என்ட்ரி, டூயல் ஏர்பேக்குகள், ஏபிஎஸ் உடன் ஈபிடி மற்றும் ரியர் பார்க்கிங் சென்சார்கள் உள்ளிட்ட அம்சங்களை பெறும்.

Also see... Kia EV6 எலெக்ட்ரிக் கார் அறிமுக தேதி அறிவிப்பு!

டொயோட்டா எஸ்யூவி: Hyundai Creta, Kia Seltos, Skoda Kushaq மற்றும் Volkswagen Taigun போன்றவற்றுக்கு போட்டியாக டொயோட்டா நடுத்தர அளவிலான SUV பிரிவில் நுழைய உள்ளது. விரைவில் அறிமுகமாக உள்ள டொயோட்டா எஸ்யூவி, ஹோண்டா சிட்டி இ:எச்இவி ஹைப்ரிடில் சமீபத்தில் பார்த்ததைப் போலவே, செல்ஃப்-சார்ஜிங் ஹைப்ரிட் அமைப்பைப் பயன்படுத்தும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

First published:

Tags: Car, Mahindra